தொடர்கள்
பொது
இளவரசியின் ரகசிய காதலர்! - ஆர்.ராஜேஷ் கன்னா.

20201025123520783.jpg

காதலுக்கு கண் இல்லை என்பது நிஜம் தான்…

தனக்கு ஏற்கனவே கண்ணை கொள்ளை கொல்லும் 5 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருந்தாலும் ஜோர்டன் இளவரசியை பார்த்ததும் கண்டதும் காதல் கொண்ட துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் எப்படியாவது அவரை தனது மனைவியாக திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் நான்காம் நிலையில் இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமராக பதவி வகிக்கும் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் என்பவர் தனது மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று வந்த தூதினை ஜோர்டான் மன்னர் ஏற்றார். தனது மகள் இளவரசி ஹயாவை 2004ஆம் ஆண்டு அதே துபாய் மன்னருக்கு திருமணமும் செய்து வைத்தார்.

துபாய் மன்னர் சிறிது காலத்திற்குள் தனது ஆறாவது மனைவியான இளவரசியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு தான் எங்கு சென்றாலும் தனது இளம் மனைவியை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார். துபாய் மன்னர் மற்றும் இளவரசி ஹயாவிற்கு இரு குழந்தைகள் பிறந்தது.

20201027145021267.jpeg

இளவரசி ஹயா மீது தீராத காதல் கொண்டிருந்த துபாய் மன்னர், தனது ஆறாவது மனைவிக்கு எந்தவித ஆபத்தும் வராமல் தடுக்க திடகாத்திரமான இளவயது பாதுகாவலர்களை நியமித்து இருந்தார். தனது ஆசை மனைவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் அந்த பாடிகார்டுகளை உடன் அனுப்பி பாதுகாத்தும் வந்தார்.

ஆனாலும் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தன்னுடைய ஆறாவது மனைவி இளவரசி ஹயா, தன் மீது சீரான அன்பு செலுத்துவதில்லை எனும் வருத்தத்தில் இருந்தார்.

இதற்கிடையே ஜூன் 29, 2019ம் ஆண்டில் இளவரசி ஹயா தனது கணவரிடம் இருந்து பிரிந்து ஜெர்மனிக்கு தனது இரு குழந்தைகளுடன் அரசியல் தஞ்சம் அடைய கோரிக்கை வைத்தார் என்று மீடியாக்கள் பிரேக்கிங் நியூஸ் வாசித்தது...

இதனை தொடர்ந்து... ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் அவரது ஆறாவது மனைவி இளவரசி ஹயா இருவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகள் யாரிடம் வளர வேண்டும் என லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.

20201025124233631.jpeg

லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளவரசி ஹயா தனது பிரிட்டிஷ் பாதுகாவலர் ரூசல் ப்ளவர் என்பவருடன் தனக்கு தீராத காதல் ஏற்பட்டு, வெளியுலகிற்கு தெரியாமல் அவருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்ததாகவே விசாரணையில் தெரிவித்தார்.

‘தன் மனைவி ஹயா அவரது காதல்ர் ரூசல் ப்ளவருடன் தொடர்பு வைத்திருந்ததினால்தான் அவரது கணவரான தன்னுடன் அன்பாகப் பழகவில்லை ’ என நீதிமன்ற விசாரணையின் போது 70 வயதான துபாய் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்மிற்கு தெரிய வந்தது. இதனால் மனம் மிகவும் நொந்துவிட்டார், துபாய் மன்னர்.

20201025124559315.jpg20201025124619600.jpg

இளவரசி ஹயா தனது 37 வயது காதலன் ரூசல் ப்ளவர் என்பவருக்கு 12 லட்சம் பெறுமானமுள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் ரு. 49 லட்சம் பெறுமானமுள்ள விண்டேஜ் துப்பாக்கியை பரிசாக வழங்கியதும் நீதிமன்ற விசாரணையில் தெரிந்தது.

தனக்கு பாதுகாவலராக இருந்தவர், தன்னை அன்பாக பார்த்துக் கொண்டு, தனது ஆசைகளை திருப்திப் படுத்தியதால், தனது கணவருக்கு தெரியாமல் காதலனுக்கு ரகசியமாக பரிசுப் பொருட்களை தந்ததாகவும், தனது கணவருக்கு தற்போது 70 வயது ஆவதால் தான் விவகாரத்து பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் 46 வயதான இளவரசி ஹயா நீதிமன்றத்தில் கூலாக சொல்லிவிட்டுச் சென்றார்.

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்மிடமிருந்து அவரது மனைவி இளவரசி ஹயாவிற்கு ஏற்கனவே நீதிமன்றம் விவகாரத்து வழங்கி இருந்தது.

இளவரசி ஹயா தனது இரு குழந்தைகளுடன் மேற்கு லண்டனில் 85 மில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் வீட்டில் தங்கி அவர்களை அவரது இஷ்டப்படி வளர்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

“இளவரசி ஹயா வேல்ஸ் பகுதியில் தங்கியிருந்த போது, அவருக்கு ஐந்து வருட பாதுகாவலராக பணி செய்தேன். இளவரசி ஹயாவுடன் நான் பல வெளிநாடுகளுக்கும் பாடிகார்டாக சென்றபோது தான் எனக்கும் இளவரசிக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. தற்போது எங்களுக்கு பிரிய மனமில்லை” என்று இளவரசியின் காதலன் மற்றும் பாடிகார்டு ரூசல் ப்ளவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் சொன்னார்.

20201025124715818.jpg

தன் ஆசை ஆறாவது மனைவி தன்னை விவகாரத்து செய்து, தனது குழந்தைகளையும் தன் வசமே வளருட்டும் என்ற நீதிமன்ற உத்திரவினை கேட்டு, துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வேதனையில் கண்ணீர் மல்க நீதிமன்றத்தினை விட்டு நகர்ந்தார்.

இதற்கிடையே இளவரசி ஹயாவின் பாடிகார்டு ரூசல் ப்ளவரின் மனைவியும் தன் கணவரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விவகாரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். “இளவரசி ஹயாவின் பாதுகாவலராக எனது கணவர் பணிபுரிந்த போது அவருக்கு அன்பளிப்புகளை வழங்கி இளவரசி எனது கணவரை மயக்கிவிட்டார். இனி என் கணவருடன் வாழ முடியாது, என் கணவருடன் வாழ்ந்த நான்கு வருட கால வாழ்க்கையே போதும்” என்பது அவரது வாதம்!

இளவரசி ஹயா தனது ரகசிய காதல் விவகாரம் கணவருக்கு தெரியாமல் இருக்க, தனது முன்று பாடிகார்டுகளுக்கும் அன்பளிப்பு மற்றும் பரிசுப்பொருட்களை வாரி வழங்கிய ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

இருப்பினும் இளவரசி ஹயா தான் முன்பு அன்பைச் செலுத்திய அதே பாதுகாவலர் ரூசல் ப்ளவர் உடன் தனது வாழ்க்கையை தொடருவாரா அல்லது வேறு ஒரு பணக்காரருடன் தன் வாழ்வினை தொடருவாரா என்பதே லண்டனில் இப்போது பெரும் பேச்சாக உள்ளது.