நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி...ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்
சைதாப்பேட்டை - மசூதி தெருவில் ஒரு வீட்டு வாசலில்...
“ஏன்பா, என்ன 925 ரூபா கேக்குற, போன தடவை கூட 850 ரூபா தானே கொடுத்தேன்.”
“அதெல்லாம் நீங்க மோடியை கேக்கணும், 25 ரூபா ஏறி இருக்கு. சரி எங்க போடணும்னு சொல்லுங்க.”
போட்டுவிட்டு காசை எண்ணுகிறார். “என்னம்மா சரியா 900 கொடுத்திருக்கீங்க. ஏதாவது கொடுங்கம்மா, ரெண்டு மாடி ஏறி போட்டுருக்கேன்..”
“டெலிவரி பண்ண தனியா காசு கொடுக்கவேண்டாம், தனியா காசு கேட்டா புகார் பண்ணுங்கன்னு கோர்ட் உத்தரவு போட்டுச்சே பேப்பர்ல படிக்கலையா...”
“எம்மா விலை ஏறினது தெரியலன்னு சொல்றீங்க, இது மட்டும் கரெக்ட் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே, நல்ல வெவரம்மா நீங்க...”
சிரித்துக்கொண்டே மேலும் காசு கொடுக்கிறார்.
கிரிஜா, சைதாப்பேட்டை.
குற்றாலம் - ஐந்தருவி அருகில் இருவர்...
“என்னடே, பால்ஸ்ல குளிக்கலாம் வாடேன்னா, ஓடற தண்ணி பக்கத்துல உக்காந்து குளிக்கலாங்கற...”
“மதராசுக்கு போய் முப்பதாயிரம் செலவு பண்ணி முடிய நட்டுகிட்டு வந்திருக்கேன், அருவில குளிச்சு அத்தனையும் அடிச்சிக்கிட்டு போயிடுச்சின்னா... அப்புறம் திரும்பவும் நடவு தான், செலவு தான், நீ போ, நான் வரலே...”
அம்பாசமுத்திரம், ரவி.
மெட்ரோ ரயிலில் இரு பெண்கள்...
“என்னடி உன் ஹஸ்பண்ட் வேக்சினேஷன் உண்டா?னு மெஸேஜ் போட்ருக்கார். நீ அதுக்கு சோசியல் டிஸ்டன்சிங் மெயின்டைன் பண்ணுங்க, அப்படின்னு பதில் போட்ருக்க... ரொம்ப பொறுப்பான பொண்ணா மாறிட்டாயா, ஒண்ணுமே புரியலையே...”
“அது எங்களுக்குள்ள கோட் வோர்ட், வேக்சினேஷன் உண்டான்னா?” அது “உண்டான்னு அர்த்தம், சோசியல் டிஸ்டன்சிங்னா... “நம்ம மூணு நாள்னு” அர்த்தம்.”
“அடேயப்பா உன்ன மோடிஜி தான் மன் கி பாத்துல பாராட்டணும் போல...”
முதலாமவர் வெக்கப்பட்டு சிரிக்கிறார்.
மாம்பலம் மைதிலி
Leave a comment
Upload