தொடர்கள்
தொடர்கள்
பெண் மனதை பேணிக்காப்போம்... - 27 - சுபஸ்ரீ

20210807212836287.jpg

டைரி எழுதுதல் அல்லது பதிவு செய்தல்...

ஒவ்வொரு நாளின் நிகழ்வுகள் பற்றி குறிப்பு எழுத நினைவில் வைத்துக் கொள்வதற்காக பதிவு செய்ய மிக எளிமையான வடிவம் டைரி ஆகும். நமது வாழ்க்கையில் நடைபெறும் சுவாரசியமான மற்றும் தினசரி நடைபெறும் விஷயங்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவற்றை பற்றி குறிப்பெடுத்தல் டைரி எழுதும் பழக்கம் மிக நல்ல விஷயங்களை உங்களுக்கு தரும் அது உங்கள் மன நலத்திற்கு மிகவும் நல்லது.

உங்கள் மன உணர்ச்சிகளை வெளியிடுவதற்கான ஒரு வடிகால் ஆகும். மேலும் கடினமான அனுபவங்களை பாதுகாப்பாக மன அழுத்தம் இல்லாத வகையில் வெளியிட ஒரு சரியான இடம்.

இது வெறும் உணர்வுகள் மட்டுமல்லாமல் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இரண்டிலும் கவனம் செலுத்த உதவுகிறது.

இது உங்களுடைய உணர்வுகள் மற்றும் உங்கள் பார்வை எப்படி காலப்போக்கில் மாறி இருக்கிறது என்பதை பதிவு செய்வதற்கான வழி இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியினை கணிக்க முடியும்.

உங்களுடைய மன அழுத்த நிலைகளையும், பல்வேறு மனச்சோர்வு நிகழ்வுகளையும் குறிப்பாக பதிவு செய்ய முடியும்.

டைரி எழுதுவதின் மற்ற பலன்கள்:

அது உங்களுடைய எழுத்தாற்றலை வளர்க்கும், மேலும் நீங்கள் யோசிப்பதை மிகுந்த கற்பனைவளம் உள்ளதாக மாற்றும்.

அது ஒரு நிகழ்வினை மற்றும் சில செய்கைகள் ஆகியவை குறித்து நீங்கள் ஞாபகம் வைத்திருக்க உதவும் - டைரி நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வெளிப்படுத்திய உங்கள் திறமை மற்றும் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை பதிவு செய்திட உதவும். உதாரணமாக நீங்கள் ஒரு வேலைக்காக மனு செய்கிறீர்கள் என்றால், உங்களிடம் உங்களைப் பற்றிச் சொல்ல விவரிக்க கைவசம் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. நேர்மறை விஷயங்கள் பற்றி தொடர்ந்து எழுதுதலும், அவற்றை பின்னர் திரும்பிப் பார்த்தாலும் உங்களுடைய சுயமதிப்பீடு அதிகரிக்க உதவும்.

காகிதமா அல்லது எலக்ட்ரானிக்கா?

நீங்கள் உபயோகிக்க நிறைய எலக்ட்ரானிக் தேர்வுகள் உண்டு. அதே சமயம் காலம் காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் காகித வடிவமும் உண்டு உதாரணமாக...

- கூகுள் கீப் அல்லது இதர செயலிகள் மூலம் எழுதலாம்.

- உங்களுடைய லேப்டாப்பிலோ அல்லது பொது மேகக் கணினியிலோ சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வேர்டு கோப்பிலும் எழுதலாம்.

- நீங்கள் உங்களுக்காக ஒரு வலைப்பூ (Blog) உருவாக்கி வெறும் டைரியை மட்டுமல்லாமல், உலகத்தின் பார்வைக்கு அதை வைக்கலாம்.

எலக்ட்ரானிக் முறையின் நன்மைகள்.

டைரி செயலிகள் மிக சுலபமான வழி மற்றும் வேகமாய் உங்களுக்கு ஈடு கொடுப்பவை மற்றும் அவை தனிப்பட்ட உபயோகத்திற்காக இருப்பவை. மேலும் இவை மேகக் கணினி சேமிக்கப்படுவதால், உங்களுடைய மொபைல் கருவி தொலைந்து போனாலும், நீங்கள் உங்கள் டைரியை இழக்க மாட்டீர்கள். மேலும் உங்கள் எண்ண ஓட்டத்தை கவனமாக பதிவு செய்து, பின்னர் வேண்டுமானாலும் மாற்றி மாற்றிக் கொள்ளலாம். இது உங்களுடைய எண்ணத்தை சீர்படுத்த உதவும். இருப்பினும் இதில் ஒரே ஒரு குறைபாடு இருக்கிறது. அதாவது உங்களுடைய அன்றைய எண்ணம் எப்படி இருந்தது என்பதை கணிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், நீங்கள் இதில் செலவழிக்க வேண்டிய நேரம் ஆனது அதிகமாகவும் வாய்ப்புள்ளது.

காகித முறை டைரி எழுதுவதின் நன்மைகள்...

அது உங்களுக்கான தனிப்பட்ட ஒன்று. நீங்கள் நினைப்பதை கையால் முழுவதும் எழுதும்போது, உங்களுடைய என்ன ஓட்டத்தை அது வகைப்படுத்துகிறது. அதில் நீங்கள் எது எழுதினாலும், உதாரணமாக பரிட்சை கூட எழுத உதவிடும். மேலும் உங்கள் எண்ண ஓட்டத்தை சீராக்கும்.

டைரி எழுத சில உதவிக்குறிப்புகள்...

1. கவலை வேண்டாம், எழுதுங்கள் - இங்கு உங்களின் ஒரே பார்வையாளர் நீங்கள் மட்டுமே காலப்போக்கில் உங்களுக்கு அது பழகி நீங்கள் சுலபமாக எழுத முடியும்.

2. தினமும் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள் ஓரிரு நாட்கள் விட்டுப் போனால் கவலைப்படாதீர்கள் - தினசரி எழுதும் பழக்கத்திற்கு உங்களை மாற்றிக்கொள்ள தினசரி குறிப்பிட்ட நேரத்தில் எழுதும் பழக்கத்தை வைத்துக் கொள்வது உதவி செய்யும். உதாரணமாக நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் எழுதுவது என்று வைத்துக்கொள்ளலாம்.

3. ஒரு நண்பனுக்கு எழுதுவது போல எழுதுங்கள் அல்லது உங்களுடைய எதிர்காலத்தில் நீங்கள் படிப்பதற்கு எழுதுங்கள்.

இது போன்ற நினைத்து எழுதும் போது, நீங்கள் சரளமாக எழுதுவீர்கள். மேலும் இது உங்களிடமிருந்து செய்திகள் மற்றும் உணர்வுகள், உங்கள் ஆழ்மனதில் எண்ணங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள உதவும். பின்னர் இவற்றை படிப்பது, உங்களைப் பற்றி உங்கள் பரிணாம வளர்ச்சியை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள உதவும்.

4. உங்கள் டைரி, நீங்கள் எழுதும் பத்திரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் வரையலாம். பிடித்த படங்களை ஒட்டலாம் அல்லது நீங்கள் சென்று வந்த விழாக்களில் நுழைவுச் சீட்டுகளை, பொட்டலம் இதுபோல பல வகைகளிலும் உங்கள் மனதினை வெளிப்படுத்தலாம்.

5. நீங்கள் எதிர்மறையாகவும் தொனிக்கலாம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் நேர்மறையாக எழுதுதல் அவசியம்.

நீங்கள் எழுதியதை திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் பெரும்பாலானவற்றை மறந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் மனச்சோர்வான சமயங்களில், உங்கள் டைரியை நீங்கள் படிக்கும்போது நீங்கள் சாதித்த விஷயங்கள் மற்றும் நீங்கள் எதிர்கொண்ட நல்ல விஷயங்கள் உங்கள் மனதிற்கு தெம்பினை அளித்து, புத்துணர்ச்சியூட்டக் கூடியதாக இருப்பது நல்லதல்லவா?