தொடர்கள்
follow-up
ஊட்டி மார்க்கெட் சீல்... நான் யாரையும் மீறவில்லை... - ஆணையாளர்..!

20210809175945957.jpeg

கடந்த 4-9-2021 விகடகவி இதழில் “ஊட்டி மார்க்கெட் சீல்... அரசு தன் கடமையை செய்யும்” என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம்... அதில்.. வியாபாரிகள், முன்னால் நகர மன்ற தலைவி, ஊட்டி வாசிகளிடம் பேசி, அவர்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தோம்...

அதில்... ஆணையாளர், மாவட்ட ஆட்சியாளரை மீறி நடவடிக்கை எடுத்தது வருத்தம் அளிப்பதாக ஊட்டிவாசிகள் சிலர் நம்மிடம் கூறியதை எழுதியிருந்தோம்...

20210809180102853.jpeg

கட்டுரையை படித்த ஆணையாளர், நம்மை போனில் அழைத்து ...
நீங்கள் எழுதியது சரியில்லை... நான் மாவட்ட ஆட்சியரை மீறி நடவடிக்கை எடுத்ததாக ஏன் எழுதியுள்ளீர்கள். நான் என் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுத்துள்ளேன். யார் 38 கோடியை வசூல் செய்து கொடுப்பார்கள் சொல்லுங்கள். சரியாக விசாரித்து எழுதுங்கள்..” என்று பேசினார்.

நாம் பாதிக்கப்பட்ட ஊட்டிவாசிகள் கூறியதை தான் எழுதியுள்ளோம்... அப்படி உங்கள் மனது வறுத்தப்பட்டிருந்தால், நாமும் வருத்தம் தெரிவிக்கிறோம்... என்று விளக்கினோம்...

அதற்கு ஆணையாளர் சரஸ்வதி... “சரி எழுதுங்கள்” என்று கூறி போனை வைத்தார்...

நாம் இந்த விஷயத்தில் நடு நிலைமையாக தான் எழுதியுள்ளோம்... அரசு தன் கடமையை செய்யும் என்று குறிப்பிட்டதே, அதிகாரியின் சரியான நடவடிக்கையை சுட்டி காட்டுவதே... வியாபாரிகள்... மார்க்கெட் சீல் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஊட்டிவாசிகளின் மனக் குமரலையும் எழுதியுள்ளோம்...

அரசியல் தலையிடை, அரசு விரும்பவில்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளோம்...

4-9-2021 விகடகவியில் இந்தக் கட்டுரை எழுதும் போது, பலமுறை ஆணையாளரை தொடர்ப்பு கொள்ள... அவர் நம்மிடம் பேச தொடர்பில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

- ஸ்வேதா அப்புதாஸ்