பட்டிமன்ற ரசிகர்களின் சமீபத்திய பிரார்த்தனை, காரசாரமான சூடான விவாதங்களில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வாதாடும் பாரதி பாஸ்கரை மீண்டும் பார்ப்பது தான்.
ஏராளமான பட்டிமன்ற ரசிகர்களில் ஒருவனாக எனக்கும் அவரைப் பற்றிய கவலையில் அவரது நெருங்கிய நண்பரை அழைத்தேன்.
நினைவோடு இருக்கிறார், நன்றாகவே பேசுகிறார் என்று தெரிவித்தார். ஸ்ட்ரோக் என்பதன் மற்ற பக்க விளைவுகள் பற்றிய தகவல் தெரியவில்லை.
ஆனால், நண்பர்கள் யாரையும் பார்க்க விடவில்லை. அவருக்கு இப்போதைக்கு பூரண ஓய்வு தேவை, தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
நண்பர் மேலும் சொல்கையில், ஒரு முறை ரங்கராஜ் பாண்டே சொல்லியதைப் போல... பாஸ்கர் பாரதியை விட மிகவும் ஷார்ப்பான ஆசாமி அவரது கணவர். ஆனால் மனைவியின் பிரபலத்திற்காக, வெளிநாடு வேலைகளுக்கெல்லாம் செல்லாமல் சென்னையிலேயே தங்கி விட்டவர். அவரைப் போன்ற ஒரு சிறந்த கணவருக்காக பாரதி மீண்டும் நலமுடன் வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று விகடகவி சார்பில் விநாயக சதுர்த்தி நாளில் பிரார்த்திக்கிறோம்.
Leave a comment
Upload