தொடர்கள்
ஆன்மீகம்
கும்பகோணம் உச்சி பிள்ளையார்... வேங்கடகிருஷ்ணன்

20210807221442331.jpg

உச்சி பிள்ளையார் என்றவுடனே திருச்சி மலைக்கோட்டை நினைவுக்கு வருவது போல, தஞ்சை மாவட்டத்துக்காரர்களுக்கு குடந்தை உச்சி பிள்ளையார் நினைவுக்கு வருவார். தரையிலிருந்து உயரத்தில் வீற்றிருப்பவர் இவர். அந்த அழகே தனி.

20210807221750687.jpg

நாகேஸ்வர சுவாமி திருகோவிலின் மேல வீதியில் வடக்கு திசை நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. அதாவது கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து, தஞ்சாவூர் செல்லும் சாலையில் நகரின் மையத்தில் நான்கு சாலைகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில், ராமசாமி கோவில், நாகேஸ்வரன் கோவில்களுக்கு நடுவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

20210807221623951.jpg

புகழ், வழி, கல்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூல், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள், என்னும் பதினாறு பேறுகளை குறிக்கும் வண்ணம் பதினாறு படிக்கற்களின் கொண்டு இத் திருகோயில் அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் இருபது அடி உயரத்தில் இருந்து, கருவறையில் ஞானத்தின் பேர் உருவாய் அமர்ந்து, அன்பும் கருணையுமாய் வடிவம் கொண்டு, பிள்ளையார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இத்திருகோவிலின் நிருத்த மண்டபத்தில், ஷோடச கணபதி (16) சுதைகள் அமைந்திருப்பது கண் கொள்ளா காட்சியாகும். திருமணம் முடிந்தவுடன் சித்தி, புத்தி மெட்டி அணிவித்தல், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கலந்த தோற்றத்தில் (ஆதிந்திய பிரபு) சமய குரவர்கள் நால்வர், காஞ்சி மகா பெரியவர் சுவாமிகள் நூதன சுதை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருகோயில் மேல் தளத்தில் கிழக்கு பாகத்தில் திருமணக்காட்சி வைபவம் மற்றும் மேற்கு பாகத்தில் ஓம் பிரணவம் வடிவத்தில் விநாயகர் சுதை வடிவம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது .

பிள்ளையாருக்கு உகந்த நாட்கள்...

வெள்ளிகிழமை, அம்மாவாசை கழித்து வரும் சதுர்த்தி திதியும், பௌர்ணமி கழித்து வரும் சதுர்த்தி திதியும்
பிள்ளையாருக்கு சிறந்த தினமாக கொண்டாடப்படுகின்றன.

ஆவணி வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி, இத்திருகோயிலில் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் காலை பொழுதில், காவிரியில் தீர்த்த வாரியும், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.