
காகிதமும் பஞ்சு மெத்தையும்
__________
படைப்பவன் பிரம்மன் எனில் இங்கே
ஒவ்வொரு (கவிதை) படைப்பாளியும் பிரம்மனே!
பிரசவிப்பவள் தாய் எனில் இங்கே
ஒவ்வொரு கவிஞனும் தாய்தான்
அங்கு குழந்தை
கருவாகி உயிராகி
துடித்து தவித்து
இப்பூவுலகிற்கு வரும்
இங்கு வார்த்தைகள்
வரிகளாகி வடிவாகி
துடித்து தவித்து
மனம் விட்டு
காகிதம் தொடும்...
குழந்தையைத் முதலில் ஸ்பரிசிக்கும்
பஞ்சுமெத்தை பாக்கியம் செய்தது
அதுபோலத்தான் கவிதையின் ஸ்பரிசத்தை
முதலில் தாங்கும் காகிதமும் பரிசுத்தமானது
பாக்கியம் செய்தது.
காகிதமும் தாயின் கைகளே...!

Leave a comment
Upload