
ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்களின் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சார் அவர்களின் தரிசனம்
ஸ்ரீமதி சரஸ்வதி மாமி
சுமார் ஏழு வருடங்கள் சிவன் சாருடன் வாசம் செய்த பாக்கியம் பெற்றவர் இந்த சரஸ்வதி மாமி. இப்படி ஒரு மஹானுடன் இவர்கள் வாழ்ந்தது எவ்வளவு பெரிய பாக்கியம். சிவன் சாருடன் இவரது குழந்தைகள் கொஞ்சி குலாவி விளையாடியது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பிராப்தம். சிவன் சாரின் காலில் ஒரு நாய் கடித்து ரத்தம் சொட்ட சொட்ட காயம் ஏற்பட்ட போதும், மறுநாள் அந்த சுவடே இல்லாமல் போனதும் மாபெரும் ஞானிகளுக்கே மட்டுமே சாத்தியம்.
இவைகளை விவரிக்கும் போதே மாமியின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது.
இதோ அந்த அனுபவம்

Leave a comment
Upload