தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 09 -ரமேஷ்எத்திராஜன்

20221025222007445.jpg

மக்கள் பார்வையில் கம்பர்


ராமகாதை மொழிமாற்றம்
பற்றிக் கம்பர் வாய்மொழியாக
சென்ற முறை அறிந்தோம்

இக் காவியத்தைப் பல அறிஞர்
பெருமக்கள் இயற்றி இருக்கையில்
துளசிதாசர் போன்றோர்
இயற்றி இருக்கையில்

வால்மீகி பாடிய காவியத்தை
ஏன் மொழிமாற்றம் என நம்
அனைவரது மனதில் ஒரு
எண்ணம் தோன்றுவது இயல்பு

அதற்கு அவரே பாலகாண்டத்தின்
நாட்டுப் படலப் பாடலில் சுவைபட
மக்களுக்கு எளிதில் புரியும்படி
உரைக்கிறார்

வாங்க அரும் பாதம் நான்கும்
வகுத்த வான்மீகி அன்பான்
தீம்கவி செவிகள் ஆரத்
தேவரும் பருகச் செய்தான்
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை
அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கியான் பேசலுற்றான் என்னை
யான் மொழியலுற்றேன்


வாங்க அரும் பாதம் நான்கும்
வகுத்த வான்மீகி அன்பான்
என்றால் எடுத்து விடுதற்கு
அரிய நான்கு அடி சுலோகங்களால்
ஆன இராமாயணம் இயற்றிய
வான்மீகி முனிவர் எனப் பொருள்

அன்பு எனும் நறவம் மாந்தி என்றால்
அன்பு எனும் மதுவைப் பருகி

மூங்கையான் பேசலுற்றான் எனில்
வாய் பேச இயலாத ஊமை
பேசத் தொடங்கியது போல எனப் பொருள்

வால்மீகி பாடிய நான்குஅடி
சுலோகத்தில் எந்த வரியும்
எடுத்து விட முடியாது அத்தனைப்
பொருத்தமானது கருத்துச்
செறிவு மிக்கது

தேவர்கள் செவி பருகச் செய்த
இக் காவியத்தை அன்பு எனும்
மதுவைப் பருகி வாய் பேச
இயலாத ஊமை பேச தொடங்கியதைப்
போல எல்லையற்ற மகிழ்வாய்
ராமகாதையை நான் எழுதத்
தொடங்குகிறேன்

என்று பாமர மக்களுக்கு எளிதில்
புரியும் படி எளிய உவமை நயமாய்
கவிநயம் பாடிய கவிக்கம்பரை
போற்றுவோம்
பாராட்டுவோம்....