தொடர்கள்
Other
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறக்க முடியாத அவதாரம்

20230027234324497.jpg

ஜனவரி 23

இந்திய அரசு இனி வரும் ஜனவரி 23யன்று பராக்கிரம் (தேசீய வல்லமை தினமாக) திவஸாக கொண்டாடப்படும் என்றும் தன்னுடைய 2022 வருடத்திய அரசாணை ஒன்றில் குறிப்பிட்டு பெருமை தேடிக் கொண்டது நினைவிருக்கலாம்.

இப்படி நினைவூட்டப்பட்ட நாள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளாகும்.

இப்படி நாளை நாளை முதல் நினைவில் வைத்திருக்குமளவுக்கு ஆளை நினவிருக்கிறதா எனில் சற்றே ஏமாற்றமளிக்கிறது தான் உண்மை.

போகப்போக இனி வரும் உரைகளில் அவரைப்பற்றி நாம் அறிய அறிய இப்பேர்பட்ட இவருக்கு நமது வரலாற்று பக்கங்களில் உரிய உயரிய ஸ்தானம் தரவில்லியோ(யே) என ஒவ்வொரு பாரதீயரின் மனமும் ஏங்கும்.

சென்ற ஆண்டு அவரது 125 ஆவது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் டில்லி இந்தியா கேட்டில் பேசுகையில்,” நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் சிறை இலக்கியங்களில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றுள்ளன. நேதாஜியின் பிரம்மாண்ட கிரானைட் சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார். அவரது பிரம்மாண்ட சிலை கட்டி முடிக்கும் வரை, கிரானைட் சிலை அமைக்க அடையாளம் காணப்பட்ட இடத்தில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை இருக்கும் இந்தியா கேட் பகுதியில் பிரதமரால் திறந்தும் வைக்கப்பட்டது. அதே வருடம் செப்டம்பரில் சிலையும் நிறுவப்பட்டுவிட்டது ஒரு சரித்திர நிகழ்வு. ஏனெனில் அதே இந்தியா கேட் வளாகத்தில் உள்ள விதானத்தில் முன்னதாக, 1968 இல் அகற்றப்படும் வரை ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் 50 அடி பளிங்கு சிலை இருந்தது.

ஆம். இவர் பெயரை கேட்டாலே அதிர்ந்து போனதென்னமோ ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கின்றார்.

அதென்ன, 1945 வரை இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கத் தோன்றா வெள்ளையனுக்கு எங்கேயிருந்து புத்தி வந்தது இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்திடலாமென்று. திடீர் மனமாற்றம் வரக்காரணம் என்ன?

சுதந்திர போராட்டம் என்னவோ கிட்டத்தட்ட நூறாண்டுகளாக அங்கும் இங்கும் என ஆரம்பித்து இறுதியில் எங்கும் என சூடு பிடித்து புகைந்து கொண்டிருந்தது. சுதந்திர போராட்ட முன்னணி தலைவர்களை சிறை வைப்பதும் பின்னர் அவர்களுடன் கமிஷன் வந்து பேசுவதும், இங்கிலாந்திற்கு அழைத்து பேசுவதும் சரித்திர நிகழ்வுகளாக, இந்தியர்களுக்கு ஒரு இலக்கை நோக்கிய பிரயாணமாக இருந்தன என்றாலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொழுதுபோக்காய் போனது தான் வெட்ட வெளிச்சம். நிகழ்வுகள் நிகழ்ந்த அன்று ஒரு உற்சாகம் ஊரில் எழும். என்றோ நடந்த நிகழ்வு வேறு என்றோ தெரிய வரும். பரந்து விரிந்த பாரதத்தில் ஒட்டு மொத்த போராட்ட உஷ்ணம் என அவ்வளவாக தெரியாமல் பிரித்து ஆளுவதில் (divide and rule) மன்னர்களான ஆக்கரமிப்பாளர்களின் திட்டங்கள் நமது சுதந்திர போராட்டங்களை அடக்கி வைத்தது. வந்தது. அதாவது, போராட்டம் வெற்றி பெற்றாலும் அதை வெளிப்படுத்த போராட்ட வீரர்களுக்கு பிரகடனப்படுத்தும் முறையும் தெரிந்ததில்லை. ஆள வந்தவர்களும் அதை அந்த செய்தியினை இருட்டடிப்பு செய்தே வந்தனர்.

இந்த நிலையில் தான் கங்காதர் திலக் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கையில் ஆர்வம் காட்டினர்.

அந்த நிலையில் பாரதத்தில் உதித்த முத்து தான் நமது நேதாஜி.

நேதாஜி சொன்ன சொல்லே நரம்பை புடைத்தது. குருதியை கொதிக்கச் செய்தது. பொருத்தது போதும் பொங்கி எழு என்பதாயிருந்தது எனில் அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

ஆம், அந்த முத்துவிற்குத் தான் 126 ஆவது பிறந்த தினம் இன்று.

அவரது மகள் அனிதா போஸ் பிஃபாஃப் இந்த பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய செய்தியில்,

20230027234532399.jpg

சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். நேதாஜியை நேசிக்கும் மற்றும் போற்றும் ஆண்களும் பெண்களும், அவர்களின் அரசியல் மற்றும் தனிப்பட்ட செயல்களில் அவரது கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலமும் - மற்றும் இந்தியாவில் அவரது அஸ்தியை வரவேற்பதன் மூலமும் அவரை சிறந்த முறையில் கௌரவிக்க முடியும்.' என்று கூறியிருக்கிறார்.

தனது தந்தையின் உடலை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருமாறு மோடி அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

நேதாஜி 77 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இறந்திருந்தாலும், அவரது அஸ்தி இன்னும் வெளிநாட்டில் தங்கியிருந்தாலும், அவரது நாட்டு மக்கள் மற்றும் அவரது நாட்டுப் பெண்கள் பலர் அவரை மறக்கவில்லை.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கை நன்கு நினைவு கூர்கிறார்கள். அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள், முழு அரசியல் களம் முழுவதும், அவரது கருத்துக்களையும் அவரது சித்தாந்தத்தையும் பகிர்ந்து கொள்ளும் கட்சிகள் மற்றும் செய்யாதவர்கள், அவருக்கு அவரின் இந்தியாவுக்காக அவர் செய்த தியாகத்திற்கு நன்றி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

நேதாஜி சுதந்திர இந்தியாவுக்காக எதிர்பார்த்ததை நினைவுகூர வேண்டும்.

• அன்று இந்தியா மற்ற நாடுகளால் மதிக்கப்படும் ஒரு நவீன நாடாக மாற இருந்தது. எனவே அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி என்பது அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

• ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் கடமைகள் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதில் அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் அனைத்து சமூக அடுக்கு உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது, இது அனைத்து பின்தங்கிய மக்களுக்கும் அதிகாரம் மற்றும் விடுதலையைக் குறிக்கிறது.

• தனி நபராக அவர் ஒரு மதவாதி. இருப்பினும், சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார், அங்கு அனைத்து மதத்தினரும் அமைதியாகவும் பரஸ்பர மரியாதையுடனும் ஒன்றாக வாழ வேண்டும். இந்த மதிப்புகள் இந்திய தேசிய இராணுவத்திலும் அவரது சொந்த நடவடிக்கைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

• அவர் சோசலிசத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு அரசியல்வாதி, அவர் இந்தியாவை ஒரு நவீன, சோசலிசமாக - அல்லது இன்றைய அடிப்படையில் சமூக-ஜனநாயக - மாநிலமாக, அனைவரின் நல்வாழ்விற்கும் சம வாய்ப்புகளுடன் உருவாக்க வேண்டும் என்று கனா கண்டார். இந்தியாவின் சுதந்திரத்திற்கான அவரது போராட்டத்தில் அவர் தனது சித்தாந்தத்தையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் பகிர்ந்து கொள்ளாத பாசிச நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தார். அந்த நேரத்தில், ஒரு பொதுவான எதிரிக்கு எதிரான இந்த போராட்டத்தை ஆதரிக்கத் தயாராக இருந்தது இந்த நாடுகள் மட்டுமே.

20230027234624931.jpg

நேதாஜியை பற்றி அறிய இந்த ஒரு வார கட்டுரை போதாது.....

அடுத்த வாரம்......