தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்

20230028102754742.jpg

ஓபிஎஸ் யை மிஸ்டர் ரீல் பார்க்க போன போது "எடப்பாடி யார் வேட்பாளர் என்று முடிவு செய்து விட்டாரா, அங்க என்ன பேசிக்கிறாங்க அது எனக்கு அப்பப்ப லைவா சொல்லுங்க "என்று சொல்லி ஃபோனை வைக்க, உடனே மிஸ்டர் ரீல் ஓபிஎஸ்யை ஒரு மாதிரி பார்க்க எங்களுடைய ஸ்லீப்பர் செல் ஒருத்தர் எடப்பாடி முகாமில் இருக்கார். அவர் சொல்றத வச்சு தான் நாங்க இங்க முடிவு பண்ணுவோம் "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் உங்களையும் தொத்திக்கிச்சா " என்று கேட்க அதற்கு ஓபிஎஸ் அது என்ன கொரோனா கிருமியா தொற்றிக்கொள்ள விவரம் சேகரிக்கனும் இல்ல அது முக்கியம் இல்ல என்றார் ஓபிஎஸ்.

அப்போது மிஸ்டர் ரீல் "உண்மைய சொல்லுங்க நீங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி போட போறீங்களா சும்னானம் காட்டியும் அடிச்சு விடுறீங்களா" என்று கேட்க அதற்கு ஓபிஎஸ் நாங்கள் நிச்சயம் வேட்பாளரை நிறுத்துவோம். பாரதிய ஜனதா போட்டியிட்டால் நாங்கள் அந்த வேட்பாளர் ஆதரிப்போம் என்றார். அப்போது மிஸ்டர் ரீல் "பாரதிய ஜனதா உங்களிடம் நாங்கள் போட்டி போட போகிறோம் என்று சொன்னார்களா "என்று கேட்க அவங்க தான் இன்னும் முடிவு பண்ணல இன்னும் நாள் இருக்கு என்கிறார்களே என்றார் ஓபிஎஸ்.

எனக்கென்னமோ நீங்க ஏதோ நாடகம் ஆடுற மாதிரி தெரியுது நீங்க போட்டி போடுறதா இருந்தா விருப்பம் மனு வாங்கி இருக்கணுமே ஓ நீங்க சின்ன கட்சி விருப்பமனு வாங்குற அளவுக்கு எல்லாம் ஆட்கள் இல்லை அப்படித்தானே "என்று நக்கலாக மிஸ்டர் ரீல் கேட்க டென்ஷனான ஓபிஎஸ் "யார் சின்ன கட்சி நாங்க தான் அதிமுக அத்தோடு ஒருங்கிணைப்பாளர் நான் தான் இது தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது "என்று சொல்ல உடனே மிஸ்டர் ரீல் "என்னது தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டதா இது என்ன புது கரடி "என்று அதற்கு ஓபிஎஸ்" கரடியும் இல்லை நரியும் இல்லை உண்மை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்று தான் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது "என்று சொல்ல அதற்கு மிஸ்டர் ரீல் "தவறான விலாசம் என்று எடப்பாடி தான் திருப்பி அனுப்பி விட்டாரே "என்று சொல்ல அப்போது ஓபிஎஸ் அவர் செய்வது உச்சகட்ட ஆணவம் என்று ஆவேசமாக சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் சரி அதை விடுங்க நீங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா தேர்தல் ஆணையம் தருமா அதை சொல்லுங்க என்று கேட்க கண்டிப்பாக தரும் அதனால் தான் குஜராத் பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். பாரதி ஜனதா போட்டியிட்டால் ஆதரிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இந்த விஷயம் எல்லாம் தேர்தல் கமிஷனுக்கு தெரியாமலா போய்விடும்" என்றார் ஓபிஎஸ்.

அப்போது மிஸ்டர் ரீல் தேர்தல் கமிஷன் பாரதி ஜனதா சொன்னால் தான் கேட்கும் என்கிறீர்கள் அப்படித்தானே என்று கேட்க மீண்டும் ஆவேசமான ஓபிஎஸ் இந்த சிண்டு முடியுற வேலை எல்லாம் வேண்டாம் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் தான் உண்மையான அதிமுக அதை வைத்து தான் சொல்கிறேன் என்று ஓபிஎஸ் சொல்ல ஆனா தலைமை கழகத்திற்கு எடப்பாடி தானே அடிக்கடி போய் வருகிறார். நீங்கள் கூட தலைமை கழகம் போவேன் என்று சொன்னீர்கள் போலீஸ் தான் அது உங்களுக்கு சம்பந்தமில்லாத இடம் அங்கெல்லாம் போகக்கூடாது என்று சொல்லியதே என்று மிஸ்டர் ரீல் ஞாபகப்படுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் அப்புறம் இந்த கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்கிறேன் என்றார் ஓபிஎஸ்.

இப்போதைக்கு உங்கள் திட்டம் தான் என்ன என்று மிஸ்டர் ரீல் கேட்க என் திட்டம் ஒருங்கிணைந்த அண்ணா திமுக டிடிவி தினகரன் சசிகலா ஆகியோர் கொண்ட ஒருங்கிணைந்த அண்ணா திமுக எடப்பாடிக்கு அனுமதி இல்லை ஜெயக்குமாருக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்று ஓபிஎஸ் சொல்ல உங்களையெல்லாம் எடப்பாடி வேண்டாம் என்கிறார் பதிலுக்கு நீங்கள் அவரை வேண்டாம் என்கிறீர்கள் இதில் என்ன புதுமை இருக்கிறது என்று மிஸ்டர் ரீல் அலுத்துக் கொண்டார்.

கூடவே தினகரன் பாருங்க நாங்க போட்டி போடுவோம் சொன்னாரு வேட்பாளர் அறிவித்து விட்டார். ஆனா நீங்க போட்டி போடுவோம்னு சொல்றீங்களே தவிர வேட்பாளரா இன்னும் அறிவிக்கவில்லை என்று மிஸ்டர் ரீல் சொல்ல அப்போது ஓபிஎஸ் டிடிவி தினகரன் நானே ராஜா நானே மந்திரி எங்க கட்சி அப்படி இல்லை பொதுக்குழு செயற்குழு உயர்மட்ட குழு மாவட்ட செயலாளர்கள் இப்படி பலர் ஆலோசனை பண்ணி முடிவு செய்ய வேண்டும் என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் இப்ப நீங்க சொன்ன உயர்மட்ட குழு பொதுக்குழு செயற்குழு மாவட்ட செயலாளர் இது எல்லாமே எடப்பாடி கிட்ட தான் இருக்கு உங்ககிட்ட அப்படி யாரும் இருக்குற மாதிரி தெரியலையே என்று சொல்ல அப்போது ஓபிஎஸ் இதற்கு காலம் தான் பதில் சொல்லணும் என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல் சரி அதை விடுங்க லேட்டஸ்ட்டா பண்ருட்டி உங்களுக்கு என்ன யோசனை சொல்லி இருக்கிறார் அவர் சொல்படி தான் நீங்க நடக்குறீங்களாமே என்று கேட்க உடனே ஓபிஎஸ் மிஸ்டர் ரீலை ஏற இறங்க பார்த்துவிட்டு இதெல்லாம் அரசியல் ரகசியம் இது எல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது என்று சொல்ல அப்போது நீங்கள் சொல்ல வேண்டாம் நான் உங்களை இப்போது மூன்று கேள்வி கேட்கிறேன் அந்த மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் போதும் என்று மிஸ்டர் ரீல் சொல்ல தாராளமாக கேளுங்கள் என்று ஓபிஎஸ் சொன்னதும் முதல் கேள்வி இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்க நிச்சயமாக போட்டியிடப் போகிறோம் ஓபிஎஸ் பதில் சொல்ல பாரதி ஜனதா வேட்பாளரை நிறுத்தினால் என்று மிஸ்டர் ரீல் இரண்டாவது கேள்வி கேட்க நிச்சயம் ஆதரிப்போம் என்று சொல்லஉடனே மிஸ்டர் அவ்வளவு தான் கேள்வி என்று எழுந்து விட ஓபிஎஸ் உடனே அந்த மூன்றாவது கேள்வி என்னை கேட்கவே இல்லையே என்று நீங்கள் சொன்ன இரண்டு கேள்விக்கு பதில்தான் மூன்றாவது கேள்விக்கு பதில் என்பது எனக்கு தெரியும் அதனால்தான் கேட்கவில்லை என்று ஒரு மாதிரி குழம்பி மிஸ்டர் ரீல் கிளம்பினார்.