
இன்னைக்கு நாம பார்க்கப் போற சாதனைப் பெண் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர். தன்னுடைய பொழுதுபோக்கு, அதாவது தான் விரும்பிய ஒன்றை செய்து அதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி கின்னசிலும் இடம் பிடித்தவர் நிஷா ஸ்ரீகாந்த். இவரை நாம் அவருடைய பொம்மை தொழிற்சாலை அப்படின்னு சொல்ற அவருடைய பணி இடத்திலேயே சந்தித்தோம். சிறுவயதில் இருந்து பொம்மைகள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்.

கைல எது கிடைச்சாலும் அதனை பொம்மையாக மாற்றக்கூடிய ஆர்வமும், திறமையும் அவர்கிட்ட இருந்தது. ஆனாலும் படிச்சு,கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்கிட்டு இருந்தாலும் தன்னுடைய ஆர்வத்தையும் அந்த ரசிப்பு தன்மையும் கைவிட மனம் இல்லாமல் இந்த பொம்மை தயாரிப்பில இறங்கி இருக்கிறார்.

தோழியின் திருமணத்தில், ஒரு சின்ன கொலு மாதிரி ஒரு ஓரத்துல, கல்யாணம் குறித்த நிகழ்வுகளை பொம்மையாக வைத்து அதன் மூலம் கிடைத்த பாராட்டுகளையும் மேலும் நிறைய பண்ணனும் அப்படிங்கற ஒரு உந்துதலையும் பெற்று, இது தனியா ஒரு தொழிலா எடுத்துக்க கூடிய அந்த தைரியம் அவருக்கு வந்திருக்கு. உறவுக்கார பெண்கள் உற்சாகம் கொடுக்க, தன்னுடைய மாமன் மகனான கணவரின் ஆதரவும் சேர்ந்து கொள்ள ஸ்ரீ கோலாப்புரி பொம்மைகள் தொழிற்சாலை பிள்ளையார் சுழி இடப்பட்டு ஆரம்பமானது. ஒருவரோடு துவங்கிய இந்த தொழிற்சாலை இப்போது 10 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய பொம்மை தொழிற்சாலையில் அவரை நேர்காணல் செய்தோம். அந்தக் காணொளி வாசகர்களுக்காக இதோ...

Leave a comment
Upload