தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

2023032117172984.jpg

திரிஷாவின் கெமிஸ்ட்ரி

20230321181937961.jpg

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 28-ஆம் தேதி வெளியாகிறது இந்தப் படத்துக்கான முன்னோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை திரிஷா எனக்கும் கார்த்திக்குக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி பற்றி எல்லோரும் பேசினார்கள் என்று குறிப்பிட்ட நடிகை திரிஷா இந்தப் படத்தில் வெறித்தனம் கொண்ட சண்டைக் காட்சிகள் இருக்கின்றது திரையரங்குகளில் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கும் போது உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவடையும் என்று சொல்லியிருக்கிறார் நடிகை திரிஷா.

20230321173816154.jpg

கார் எங்கே

தமிழில் முகமூடி படம் மூலம் நடிகை ஆனார் பூஜா ஹெக்டே இந்தி,தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் கூட நடித்தார் சல்மான் கான் உடன் இவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பட தயாரிப்பாளர் இவருக்கு ஒரு காரை பரிசாக வழங்கியதாக ஒரு செய்தி வெளியானது. பூஜா ஹெக்டே அந்த செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு அனுப்பி கார் இன்னும் அனுப்பவில்லையே என்று கேட்டிருக்கிறார்.

20230321172702423.jpg

கங்குவா

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் கங்குவா இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இந்தி நடிகை திஷா பதானி 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. பத்து மொழிகளில் 3d தொழில்நுட்பத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

20230321172838437.jpg

இப்போ இல்லை

பிரபல இந்தி நடிகை ஹீமா குரோஷி தமிழில் காலா அஜித்தின் வலிமை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் திருமணத்துக்கு அவசரப்பட மாட்டாராம் அவருக்கு பொருத்தமான நபரை தேடிக் கொண்டிருக்கிறாராம் கிடைத்தால் திருமணம் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்கிறார்.

20230321173936849.jpg

கமல் ஜோடி நயன்தாரா

இந்தியன் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பவர் மணிரத்தினம் நாயகன் படத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைகிறார்கள். முதலில் கமலுக்கு ஜோடி திரிஷா என்று பேசப்பட்டது. இப்போது படம் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவுடன் பேசிக்கொண்டிருக்கிறது.

20230321173339613.jpg

கர்ப்பிணி நடிகை

நடிகை இலியானா விஜயின் நண்பன் படத்தில் ஜோடியாக நடித்தவர். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இலியானா இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாக பதவி உயர்வு பெற போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், கணவர் யார் என்ற தகவல் இதுவரை அவர் சொல்லவில்லை அது மட்டும் சஸ்பென்ஸ்.

20230321173451492.jpg

போர் தொழில்

சரத்குமார் அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் போர் தொழில்.ஆதித்யா குழுமம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது இந்தப் படத்தின் நாயகி நிகிலா விமல்.

20230321173751188.jpg

சூது கவ்வும் இரண்டாம் பாகம்

சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை விஜய் சேதுபதிக்கு பதில் சத்யராஜை வைத்து எடுக்க இருக்கிறார்கள் கூடவே மிர்ச்சி சிவா கருணாகரன் ராதாரவி ஆகியோரும் நடிக்கிறார்கள். சூது கவ்வும் முதல் பாகத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி.ஆனால் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் இயக்குகிறார் இவர் யங் மங் சங்படத்தை இயக்கியவர்.