
வேங்கை வயல் சம்பவம் குறித்து திருமாவளவனிடம் கேள்வி.
இந்தக் கேள்விக்கெல்லாம் அவரிடம் பதில் இருக்காது சனாதன தர்மம் மனுநூல் இப்படி ஈஸியா கேள்வி கேளுங்க நிருபர்களே
சட்டப்பேரவையில் மூன்று சட்ட திருத்தம்
நேரா ஆளுநர் மாளிகைக்கு போனதும் செத்துப் போயிடும் இது தேவையா
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் மருத்துவப்படி உயர்வு முதல்வர் அறிவிப்பு
பாவம் ரொம்ப ஏழைங்க முதல்வர் கருணை காட்டி இருக்கிறார்.
வணிகவரி நிலுவை 27,527 கோடி பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல்
ஆட்சிக்கு தான் நிலுவை கட்சிக்கு கரெக்டா வசூல் ஆயிடும்.
ஆளுநராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி.
நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு ஆளுநர் கோரிக்கை வைப்பாரா
எனக்கு சலிப்பு ஏற்படும் போது பதவி விலகுவேன் ஆளுநர் ஆர் என் ரவி
அந்த இனிய நாள் என்னாள் என்று திமுக காத்துக் கொண்டிருக்கிறது ஆளுநரே
ஆளுநர் விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம் கேரள முதல்வர்.
ஆனா இதே மாதிரி முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்கக் கூடாது.
பாரதிய ஜனதாவுக்கு என்னை கண்டால் பயம் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா
ராகுல் காந்தியை பார்த்தால் உங்களுக்கு பயம் அப்படித்தானே தலைவரே
தேர்தலில் தோற்ற அண்ணாமலை முன்பாக முன்னாள் முதல்வரான நான் கைகட்டி நிற்கணுமா பாரதிய ஜனதாவிலிருந்து விலகிய ஜெகதீஷ் ஷட்டர் கேள்வி
அண்ணாமலை சீக்கிரம் இவர் பற்றி ஒரு வீடியோ ரிலீஸ் பண்ண போறார் பாருங்க
ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் சென்றாரா அண்ணாமலையிடம் அதிகாரிகள் சோதனை.
அதெல்லாம் தேர்தல் செலவு பணமில்லை வக்கீல் நோட்டீஸ்க்கு நஷ்ட ஈடு தர எடுத்து போன பணம் அதிகாரி கண்டுக்காதீங்க.
தமிழக ஆளுநர் இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு பேசுகிறார் வைகோ
ஆமாம் தலைவரே உங்கள பாத்து அவர் காப்பி அடிக்கிறார்.
அதிமுக என்ற நெருப்போடு அண்ணாமலை விளையாட வேண்டாம் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
ஆனா இந்த நெருப்பு டெல்லி தலைவர்களை பார்த்தா அணைந்து போயிடுது அது எப்படி அண்ணே
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பொருட்கள் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை.
தலைவரே இது ஒன்றிய அரசு திட்டம் இது எப்போ திராவிட மாடலுக்கு வந்து சேர்ந்தது.
தபால் மூலம் மட்டுமே ஓட்டுனர் உரிமம் பதிவு சான்று விநியோகம் போக்குவரத்து துறை முடிவு.
அப்போ மாமுலும் தபால் மூலம் தான் அனுப்பனுமா என்று கேட்கிறார் அப்பாவி பொது ஜனம்.
எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி.
ஆமா இனிமே பெருசா பெரிய வேலை எதுவும் இல்லையே டைம் பாஸ் ஆகனும் இல்ல அதான்.

Leave a comment
Upload