
ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை நிதியத்தின் உலக மக்கள்தொகை குறித்த 2023-ம் ஆண்டு ஆய்வறிக்கையை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. அதில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக – ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்த சீன மக்கள்தொகை, கடந்த ஆண்டு முதன்முறையாக குறைந்தது. அந்நாட்டு மக்கள்தொகை சரிவு, அதன் பொருளாதாரம் மற்றும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடியாக இருப்பதாக கடந்த 19-ம் தேதி ஐ.நா. சபை கூறியுள்ளது.
2023-ம் ஆண்டு இறுதியில் உலக மக்கள்தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில் மூன்றி இரண்டு பங்கு மக்கள்தொகை இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும். இந்திய மக்கள்தொகையில் 25.40 கோடி பேர், 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் எனக் குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கள்தொகையின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவை ஐ.நா. சபை வெளியிட்டதாக கூறியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா சபையின் உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் இந்திய பிரதிநிதி ஆன்ட்ரியா வோஜன் கூறுகையில், ‘‘இந்திய மக்கள்தொகை வரைபடம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. கேரளா, பஞ்சாப்பில் அதிக வயதானவர்களும், பீகார், உ.பி-யில் அதிகளவு இளைஞர்களும் உள்ளனர். ஆனால், நாடு முழுவதும் 15-24 வயது வரை 25.40 கோடி இளைஞர்கள் இருப்பதால் – புதுமையான, புதிய சிந்தனை மற்றும் நிரந்தர தீர்வுகளின் ஆதாரமாக இந்தியா விளங்கும்!’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுபற்றி சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லியில் வசிக்கும் சிலரிடம் கேட்டபோது, அனைவரும் ஒட்டுமொத்தமாக ‘‘என்னது… உலக மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் பிடிச்சிருக்கா..? போச்சுடா… ஏற்கெனவே இங்கு பொருளாதார மற்றும் பணவீக்கம் அதிகரிச்சிருக்கு. சென்னை, கொல்கத்தா, மும்பையின் முக்கிய நகரங்களில் போதிய இடவசதி இன்றி, ஒண்டு குடித்தன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். நிச்சயமாக இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதகமாகத்தான் இருக்கும். ஒருவேளை, இந்தியாவில் நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான நிதியுதவி பெறும் நிலை ஏற்படும்போது, இங்கு மக்கள்தொகை எண்ணிக்கையை கூறி, பன்னாட்டு மற்றும் உலக வங்கியின் நிதியை கடனாக பெறுவதற்கு சாதகமாக இருக்கலாம். வேற என்ன உபயோகம் ?????
தில்லு முல்லு படத்தில் வரும் ஒரு டயலாக் நினைவுக்கு வருகிறது.....
"சட்டைல என்ன படம் ?? பூனை சார். அதுல என்ன அவ்ளோ பெரும கெட் அவுட் !!!!"

Leave a comment
Upload