
வால்மீகி இராமாயணத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஜடாயு என்னும் ஓர் உன்னதகழுகு ஆகும்.இப்பறவை இராமரின் தீவிர பக்தரும் கூட.. இராமரும் இலட்சுமணரும் சீதாவுடன்பஞ்சவடிக்குள் நுழைகிறார்கள். அங்கு ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஜடாயு ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறது.இதைக் கண்ட அவர்கள் அதை முதலில் அவர்கள் அதனை ஒருசக்திவாய்ந்த அசுரனாக நினைக்கிறார்கள். ஜடாயுவின் உடல் மிகப் பெரியதாக இருந்ததால், அது அமர்ந்திருந்த முழு ஆலமரத்தையும் அதன் சிறகு மூடியிருந்தது. ஜடாயுவின் இறக்கைகள், அலகுகள் மற்றும் கூர்மையான நகங்கள் சக்திவாய்ந்தவை. ஆனால்மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் பகுத்தறியும் சக்தி இருந்தது. அவர்கள் கொண்டிருந்ததெய்வீக சக்தி போற்றுதலுக்குரியது.
இராமர் ஜடாயுவை தனது தந்தையின் நண்பர் என்பதைக் அறியவருகிறார்.அதன்பிறகு இராமனுக்கு அதன் மீது அதிக மரியாதை ஏற்படுகிறது.
பண்டையக்கால மன்னர்களில் மிகவும் பிரபலமானவர் பிரஜாபதி காஷ்யபர்.அவருக்குமுன்பு தக்ஷ பிரஜாபதி இருந்ததாகவும், அவருக்கு அறுபது மகள்கள் இருந்ததாகவும், இந்தஅறுபது பேரில், பிரஜாபதி காஷ்யபர் 8 பேரை மணந்துக் கொண்டதாகவும் இராமனிடம்கூறுகிறது ஜடாயு.
இந்த உலகில் காணப்படும் அனைத்து பறவைகள், விலங்குகள், மனிதர்கள், பாம்புகள் ஆகிய அனைத்தும் அந்த. 8 மனைவிகளில் ஒருவரிடமிருந்துஉருவானவைதான்தான் என்று மேலும் ஜடாயு கூறுகிறது.
வினதா என்னும் தன் பாட்டிக்கு கருடன்,அருணன் என்ற இரண்டு மகன்கள்பிறந்ததாகவும் ,அவர்களில் தான் அருணனுக்கு பிறந்தவன் என்றும்,தன் மூத்த சகோதரர்தான்சம்பாதி என்றும் ஜடாயு மேலும் கூறுகிறது.
பஞ்சவனக் காட்டில் விலங்குகளும், கொடூரமான ராட்சதர்களும் நிறைய உள்ளார்கள் என்று அவர்களை எச்சரிக்கும் ஜடாயு, அவர்களை அங்கு பாதுகாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறது. இதனைக் கேட்ட ஸ்ரீ ராமர் மகிழ்ச்சியடைகிறார். ஜடாயு தசரதருடனான தனது அன்பையும் நட்பையும் இராமனுக்கு விரிவாக விளக்குகிறது.

சீதையை இராவணன் பலவந்தமாக தூக்கிச் செல்கிறான், அவள் மிகவும்சோகமாகவும் பயமாகவும் இருந்தாள். அவள் புலம்பிக்கொண்டே, காட்டில் உள்ள அனைத்துமரங்கள், கொடிகள், பறவைகள் மற்றும் விலங்குகளிடம் தனது துயர நிலையை ஸ்ரீ ராமரிடம்தெரிவிக்குமாறு சொல்லிக் கொண்டே செல்கிறாள். அப்போதுஅதை ஜடாயுவும் காணநேருகிறது.
சீதையைக் காப்பாற்றப் போரிடும் ஜடாயு இராவணனால் தாக்கப்பட்டு இறக்கிறது.இது காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழியில் இந்நிகழ்வு நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. இங்கு அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோயில், ராமாயணகாலத்தில் சீதையை மீட்கச் சென்ற ராவணனுடன் போரிட்டு வீழ்ந்த ஜடாயுவுக்கு, ஸ்ரீராமபிரான் தன் கைகளால் ஈமக்கிரியைகள் செய்ததாகக் கூறப்படுகிறது. வரலாற்றுச்சிறப்புமிக்க 108 வைணவத் திவ்ய தேசங்களில் இவ்விடமும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
'திரு' (ஸ்ரீ) 'புள்' (பறவை/ஜடாயு) 'குழி' (குழி/பள்ளம்) எனப் பெயர் பெற்ற இத்தலம், பாதிரி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டது. சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது, தடுத்துப் போரிட்ட ஜடாயுவின் இறக்கைகள் வெட்டப்பட்டு, இங்கு வந்து இராமனுக்காகக்காத்திருந்தன. ஜடாயு இராமனிடம் சீதை தூக்கிச் செல்லப்பட்ட செய்தியைக் கூறி ஜ்டாயுஉயிர் நீத்த இடம் இது . ஜடாயுவின் இறுதிச் சடங்குகளை இராமர் ஒரு குழியில்(திருப்புட்குழி) இங்கு வைத்துச் செய்தார். இதற்காகத் தன் அம்பால் இங்கு ஜடாயுபுஷ்கரணியை உருவாக்கினார் என்கிறது வரலாறு.
ஜடாயுவின் ஈமக்கிரியையின்போது எழுந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல், ஸ்ரீதேவிமற்றும் பூதேவி தாயார்கள் சுவாமியின் வலதுபுறத்திலிருந்து இடதுபுறத்திற்கு மாறியதால், இக்கோயிலில் தாயார் சன்னதி சுவாமியின் இடதுபுறம் அமைந்துள்ளது சிறப்பம்சம். விஜயராகவப் பெருமாள், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்து, வெற்றியளித்து இங்கு விஜயராகவனாகக் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்திலிருந்து பாலு செட்டி சத்திரம் வழியாக வேலூர்செல்லும் சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இத்திருத்தலம்அமைந்துள்ளது.

பஞ்சவடிக்குள் நுழைந்த அவர்கள். அங்கு "பர்ணசாலை" ஒன்றைக்கட்டுகிறார்கள்.அது வரை காணப்படும் ஜடாயுவை பின்னர் காணவில்லை.பின்னர் சீதையைக்கடத்திய ராவணனுடன் சண்டையிடும் ஜடாயுவைப் பற்றித்தான் நாம் கேள்விப்படுகிறோம்.
யாரும் ஒரு பறவையை எரிக்க மாட்டார்கள். ஆனால், ஜடாயுவின் இறுதிச் சடங்கை, ஸ்ரீ ராமர் தனது தந்தையின் உடலைப் போலவே கருதிச் செய்தது ஜடாயு செய்த பாக்கியமே.

Leave a comment
Upload