தொடர்கள்
அழகு
மரம் நடு - விழித்தெழு - ப. ஒப்பிலி

நம்மில் பலருக்கும் காலநிலை மாற்றம் பற்றி சிறிதளவு தெரியும். ஆனால் தனி மனிதனாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உதாரணத்திற்கு கடந்த வருடத்தைவிட இந்த வருடம் கோடை வெய்யிலின் தாக்கம் அதிகம். இது எல்லோரும் பொதுவாக கூறும் ஒரு விஷயம். அதனை சமாளிக்க நம் கைகளிலேயே வழி உள்ளது என்பது பலருக்கு தெரியாது. மாசை கட்டுப்படுத்துவதற்கு மரங்கள் பெரிதும் உதவி செய்யும் என்பதுதான் இந்த கட்டுரையின் சாராம்சம்.

20260519222611101.jpg
முதல் உதாரணம்: அரச மரம். நகர்புறங்களில் காற்று மாசுபட செய்யும் நச்சுப் பொருட்களை உறிஞ்சி சேமிக்கும் திறன் கொண்டது இந்த மரம். ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இந்த மரமானது உயர்ந்த காற்று மாசு சகிப்புத் திறன் குறியீட்டு மதிப்புகளை கொண்டது.

அதிக அளவு குளோரோபில் (பச்சையம்) தக்கவைத்துக் கொள்ளும் திறன் கொண்ட இது, நச்சுத் தாக்கத்தின் போது அஸ்கார்பிக் அமில உற்பத்தியை அதிகரித்து இலைகளில் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. இதனால் வாகனங்களால் உருவாகும் துகள்மாசுகளை (PM10 மற்றும் PM2.5) வடிகட்டுவதிலும், வாயு வடிவிலான SO₂ (சல்பர் டைஆக்சைடு) மற்றும் NO (நைட்ரிக் ஆக்சைடு) போன்றவற்றை உறிஞ்சுவதிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

20260519222541245.jpg

போதிமரம் (Bodhi Tree) என அழைக்கப்படும் அரச மரம் இந்தியாவில் இந்து மதம், புத்த மதம் மற்றும் சமண மதங்களில் தெய்வமாக வழிபடப்படுகிறது. ஆனால் இதன் வலுவான மற்றும் பரவலாக விரியும் வேர் அமைப்பு காரணமாக, குறுகிய சாலை நடுப்பகுதிகள் அல்லது கட்டிட அடித்தளங்கள் மற்றும் கான்கிரீட் சுவர்களுக்கு நேரடியாக அருகில் நடுவதற்கு இது பொருத்தமற்றது. அது ஒன்று தான் குறை.

20260519222410421.jpg

அடுத்ததாக புளிய மரம். இந்திய சாலை ஒர ஆய்வுகள், புளிய மரம். அதிக அளவிலான வாகனப்புகை வெளியீடுகளை தாங்கும் திறன் கொண்டது என கூறுகின்றன. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சூழலில் ஏற்படும் கடுமையான மாசு தாக்கத்திலும், இதன் காற்று மாசு சகிப்புத்திறன் குறியீடு அடிப்படை மதிப்பில் மிக குறைந்த அளவிலேயே வீழ்ச்சி ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

20260519222338716.jpg
நாவல் மரம்: ஆய்வுகள் நாவல் மரம் அமிலத் தன்மை கொண்ட வாயு வடிவ மாசுக்களைத் தாங்கும் அதிக திறன் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. நச்சுத்தன்மை கொண்ட மாசுக்களின் தாக்கத்திலும் இது அதிக காற்று மாசு சகிப்புத் திறன் குறியீடு (APTI) மதிப்புகளைத் தக்க வைத்துக் கொள்கிறது.

இதன் தடிமனான, தோல் போன்ற தன்மை கொண்ட இலைகள் வலுவான உடலியல் சமநிலைத் திறனை (physiological buffering capacity) கொண்டுள்ளன. இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள SO₂ (சல்பர் டைஆக்சைடு) மற்றும் அமில மழையால் ஏற்படும் செல்கள் சிதைவு போன்ற பாதிப்புகளிலிருந்து தாவரத்தைப் பாதுகாக்கிறது.

20260519222458966.jpg


இதே போலத்தான் புங்கை மரமும் வாகை மரமும். இதில் சிறப்பு என்னவெனில் இந்த ஐந்து வகையான மரங்களும் வனத்துறையின் நாற்றங்கால்களில் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த செடிகளை வாங்கி வீட்டை சுற்றி நட்டாலே மாசு கட்டுப்படுத்தப்படும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.