தொடர்கள்
கதை
கொல்லத்தான் நினைக்கின்றேன் - பா.அய்யாசாமி

20260520061221943.jpeg

மாதவனுக்கு இன்றுமுதலிரவு. மகிழ்ச்சிக்கடலில் திளைத்திருந்தான். தான் நேசித்த ரதியைக் கரம் பிடித்திருந்தால் அதிகபட்சம் என்ன கிடைத்திருக்கும் ? வாழ்நாள் முழுவதும் காதல் மன்னன்
என்கிற பட்டத்தைத்தவிர. வாழ்க்கைக்குத் தேவையானப் பணம்,வசதிகள் இவளிடம் நிறையவே இருக்கிறது. குடும்பத்திற்கு ஒரே மகள், ஆஸ்தியோடு வந்த ஆசை மனைவி, அப்படியே வாழ்க்கையில் செட்டிலாகிட வேண்டியதுதான் என மகிழ்ந்து கனவில்மிதந்திருந்தான்.

இனி நடப்பது யாவும் நல்லாதே நம் வாழ்வில், என மகிழ்ந்து அலங்காரக்கட்டிலில்சிவகாமியின் வருகைக்காக கதவைப் பார்த்தபடியே, இடுப்புப்பகுதியில் வைத்தியிருந்ததைஅவ்வப்போது தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தான் மாதவன்.

கதவு திறக்கப்பட்டது, குட்டிப்பெண் ஓடிவந்து ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுச்சென்றது,கதவைத் தாழ் போட்டு வந்து கடிதத்தைப் பிரித்துப் படித்தான்.

"மாதவா, உன் பெயர் சொல்லக்கூட எனக்கு விருப்பமில்லை,
அத்தனை வெறுக்கின்றேன் உன்னை தற்போது. காதலிப்பது ஒருத்தியை,
வசதியானவள் என தெரிந்து அவளிடம் விலைப்போன உன்னை
விலைமகன் என்றே சொல்வேன். ன் வாழ்க்கையைப் பாழ்படுத்தியது போல
வேறு யார் வாழ்க்கையிலும் நீ விளையாடக் கூடாது. நாளை வழக்கமாக நாம் சந்திக்கும் இடத்திற்கு வரவும் எனவும், தவறினால் சிவகாமியிடம்
அனைத்து உண்மையையும் நானே கூறி விடுவேன் என்று
கடிதத்தில் எழுதியிருந்தாள் இல்லை மிரட்டியிருந்தாள் காதலி ரதி.

படித்ததும் வியர்த்தது மாதவனுக்கு,காதலை மறைத்துதான்
நடந்தது இந்த கல்யாணம், உண்மையைச் சொன்னால் உடனே கோபித்துக் கொண்டு இவளும் சென்று விடுவாளோ என்ற பயமும், ரதி சிவகாமியிடம்
அனைத்தையும் சொல்லிவிட்டால் என்ன செய்வது சொத்தில் சல்லிக் காசும் தேறாதுஎன்ற பீதியும் அவனை கவலையுறச்செய்ததில் முதலிரவு கனவு சுக்கு நூறாகிப் போனது.

கதவு தட்டப்பட்டதும் திறந்தவன் உடல் நலமில்லை என கூறி படுத்துக்கொண்டான். மனத்தில் ரதி மீதான காதல் அழிந்து அவள் மீது கொலை வெறியாக மாறியிருந்தது. நாளை அவளை சந்தித்து தன் வாழ்வில் இருந்தே துறத்துவதுதான் இதற்கான வழி என்று

யோசித்தவாறே தூக்கமிழந்துப் போனான் மாதவன்.

“ரதி, நீ என் வாழ்க்கையில் இப்போதில்லை, ஒதுங்கி விடு.

இல்லையேல் உன்னைக் கொலைசெய்யவும் தயங்க மாட்டேன்,என் பிடிவாதம் நன்கு அறிவாய் நீ என மிரட்டினான்.

அவனைப் பற்றி நன்கு அறிந்த ரதி பாவத்தில் பெரிய பாவம் கொலை செய்வது, இரண்டாவது பொய் பேசுவது இரண்டையும் செய்யத் துணிந்து விட்டவன் “பணத்திற்காக காதலைத் தூக்கி எறித்தவன் நீ கொலை செய்யவும் துணிந்தவனாகத்தான் இருப்பாய்.

ஆனால்,என்னைக் கொன்று என்ன நீ அனுபவிக்கப்போகிறாய்,

அவசியமில்லை ஆயுதம் எடுத்து செய்தால் மட்டும்கொலையல்ல, உண்மையை மறைத்து உயிர்களின் மனத்தை காயப்படுத்துவதும் பொய்யாக வாழ்வதும் கொலையை விட கொடுமையானது.

சிவகாமியிடமாவது உண்மையைச் சொல்லி விடு, நான் உன்னை விட்டு விலகிடுவேன், உன் வாழ்க்கையும்சிறக்கும் தவறினால் என் மரணத்திற்கு காரணம்நீதான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன், அப்போது உனக்கு தண்டனையும் கிடைக்கும், உன் எதிர் கால வாழ்வும் கேள்விக் குறியாகும் என்றவள் ,“ உன்னை நம்பி காதலித்த பாவத்திற்கு நீயாவது நல்லா
இருந்து வாழ்ந்து விட்டுப்போ” என கூறினாள் ரதி.

உன்னை நம்பி வந்தவளிடமாவது உண்மையை பேச சொல்கிறேன் முடிவு உன் கையில்....என்றாள் ரதி.

சரி முயற்சி செய்கிறேன் என்றவனிடம், இன்றே நீ சிவகாமியிடம் சொல்லி அவள் என்னிடம் பேச வேண்டும், என நிபந்தனையும் விதித்தாள்.காதலில் பிரிந்தாலும் அவன் சிவகாமியுடன்
உண்மையாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்....

பாலை எடுத்துக்கொண்டு வந்த சிவகாமியிடம் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று மாதவன் சொன்னதும்,

என்ன சொல்லப்போறீங்கனு எனக்கு தெரியும், நீங்க முதலில் பாலை குடியுங்கள், பிறகு சொல்லுங்கள் என்றாள் சிவகாமி.

சற்றே ஆறுதலடைந்த மாதவன், ரதியைப்பற்றி சொல்லத் துவங்கி அப்படியே படுக்கையில்சரிந்தான்.

அவனாவது நல்லா இருக்கட்டும்னுதான் நினைத்தேன், ஆனால் என்னை கொல்லத்துணிந்த பிறகு அவனுக்கு மன்னிப்பே கிடையாது என நினைத்த ரதி வேறு ஒரு திட்டம் தீட்டினாள் சிவகாமியுன் உதவியோடு.

மாதவன் காதலித்தபோது தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டி ரதிக்கு எழுதிய பழைய கடிதத்தை அங்கே வைத்த சிவகாமி,

“ரதி அக்கா நீங்க சொன்ன மாதிரியே செய்துட்டேன்..என்றாள் சிவகாமி.

ஆறு மாதம் போகட்டும் உங்கள் காதலை நான் முடித்து வைக்கிறேன் என தனது தம்பியின் காதலி சிவகாமியின் திருமணத்திற்கு உத்திரவாதமளித்தாள் ரதி.