
ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது டேங்கர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்தான்.
இந்த விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
சிறுவனின் தந்தை என் மகனுடன் நான் கடைசி பயணமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்த வேதனை கருத்து தான் உச்ச நீதிமன்றத்தை சிந்திக்க வைத்தது.
சம்பவம் நடந்த இடத்தில் சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடமோ அல்லது நடைபாதையோ இல்லை.
இந்தியாவில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் தங்களது எல்லைக்குள் சுதந்திரமாக நடமாடும் உரிமை உண்டு. சாலை என்பது வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் தொடர்புடையது என்றது என்ற நமது எண்ண ஓட்டத்தை முதலில் நாம் அகற்ற வேண்டும்.
இது மிகவும் அவசியமானது கட்டாயமானது கூட. நடைபாதை என்பது நடை பயணிகளுக்கு தான்.
நடைபாதையே இல்லை என்பது நமது அடிப்படை உரிமையை பறிப்பதாகும்.
சட்டப்பிரிவு 19(1)(D)-ன் கீழ் முதன்மையான நகரம் உரிமை என்பது நடப்பதற்கான அடிப்படை உரிமையாகும்.
இது வாகனங்களில் பயணிக்கும் உரிமைக்கும் முந்தியது.
பாதசாரி முதல் வாகனம் இரண்டாவது என்பதுதான் உரிமை விஷயத்தில் சட்டம் சொல்கிறது.
இந்த விலைமதிப்பற்ற உரிமை பாதுகாப்பான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட நடைபாதையை அணுகுவதை உறுதி செய்வது அரசின் கடமை.
1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச்சட்டம் நடப்பதற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் சட்டமாக ஒருபோதும் இருந்ததில்லை.
உண்மையில் மோட்டார் வாகன சட்டம் பல வழிகளில் நடப்பவர்களின் விலைமதிப்பற்ற உரிமைகளை சிதைத்துள்ளது.
நடப்பதற்கு பாதுகாப்பான மற்றும் வசதியான நடைபாதைகள் இல்லாததும் அவை இருந்தாலும் கூட நடைபாதைகளை மோட்டார் வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்துவது என்பதை ஒரு சட்ட மீறலாக கூட மோட்டார் வாகனத்தை ஓட்டுபவர் நினைத்துப் பார்ப்பதில்லை.
ஒரு சாலை என்று இருந்தால் அங்கு பாதுசாரிகள் நடப்பதற்கு தனியாக நடைபாதை ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கட்டாய கடமை அதுதான்.
அவர்களின் பணியும் கூட. நடைபாதையில் நடப்பதற்கான அடிப்படை உரிமை என்பது மோட்டார் வாகனங்களின் சிறப்புரிமையை விட முக்கியமானது.
இந்த விவகாரத்தை தனிப் பொது வழக்காக மாற்றி இந்தியாவில் பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிக்கையை மத்திய அரசும் சட்ட ஆணையமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ்.சந்தூர்கர் ஆணையிட்டுள்ளனர்.
நடைபாதை நடப்பதற்கு நடைபாதை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக இதேபோல் நீதிபதிகள் நிறைய உத்தரவுகள் பிறப்பித்து இருந்தாலும் அந்த உத்தரவுக்கு அடிபணிந்து நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காவல்துறையால் அகற்றப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
நடைபாதை நடப்பவருக்கே என்ற செயல்பாடு நிரந்தரமாக்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் உண்மையில் மகிழ்ச்சி தான்.

Leave a comment
Upload