தொடர்கள்
பொது
“ கண்களை இருட்டாக்கும் வாகன முகப்பு விளக்குகள் “ - ஸ்வேதா அப்புதாஸ்

இப்பொழுதெல்லாம் வாகனங்களில் ஏகபட்ட முகப்பு விளக்குகள் ஒளிருகின்றன.
எதற்கு இவ்வளவு வெளிச்சம் என்று தெரியவில்லை.
முக்கியமாக வெள்ளை எல். இ. டி லைட்டுகள் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு மிக இடைஞ்சலை ஏற்படுத்தி விடுகிறது என்பது உண்மை.

20260518233430526.jpeg
ஒரு காலத்தில் சாதாரண மஞ்சள் பல்புகள் மட்டுமே வாகனங்களில் இருக்கும் உடன் மிஸ்ட் லைட் இருப்பது சகஜம்.
சமீபத்தில் வைட் எல். இ. டி லைட்டுகளை வாகனங்களில் பொருத்தி கொண்டு பயணம் செய்ய எதிரில் வரும் வாகனங்களை பற்றி கவலை படுவதில்லை.
எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசி ஒரு நிமிடம் பார்வை மங்கி சாலையே தெரியாமல் இருண்டு போக ஓட்டுனர்கள் வாகனத்தை ஓட்ட திணற வேண்டியுள்ளது கண்கள் மங்கி பார்வை இழந்தது போல கண்கள் கலங்க விபத்தும் நடந்துள்ளது.

20260518233510586.jpeg
சில வருடங்களுக்கு முன் இந்த எல். இ. டி வெள்ளை ஹெட் லைட் பொருத்த கூடாது என்று தடை விதித்தது மத்திய அரசு.
அதே சமயம் மத்திய அரசு சட்டத்தை கட்டாயமாக்காமல் இருக்க எல்லா வாகனங்களிலும் எல். இ. டி வைட் லைட் பிரகாசித்து கொண்டிருக்க இரவில் வாகனம் ஓட்டுபவர்கள் உசுரை கையில் பிடித்து கொண்டு வாகனங்களை ஓட்டுவது மிக ஆபத்தாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

20260518235037987.jpeg
ஒரு காலத்தில் கர்நாடக அரசு போக்குவரத்து துறையில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற பார்டர் பூசப்பட்டு அல்லது கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
அப்பொழுது முகப்பு விளக்குகள் சாலையை நோக்கி ஒளி ஒளிரும் அதனால் எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுனர்களின் கண்கள் கூசாமல் வாகனத்தை ஈசியாக இயக்க ஏதுவாக இருந்தது.
பின்னர் வாகன ஹெட் லைட் நடுவே ஒரு வட்ட கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வெளிச்சம் கண்களை கூசாமல் பார்த்து கொண்டது அது தான் 'ஐ புல்'.
தற்போது அந்த வெளிச்ச தடுப்பு மிஸ்ஸிங் வாகனங்களில் டிம் , டிப் இருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் வெளிச்சம் குறைக்க பட்டு வந்தது. தற்போது நோ டிம் டிப் . அது இருந்தும் எவரும் யூஸ் செய்வதில்லை.

20260518233610764.jpeg
தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு இந்த பிரகாச முகப்பு விளக்குகளால் ஏகபட்ட தொல்லை இதனால் பல விபத்துகள் ஏற்படுகிறது என்கிறார்கள்.
கோவையில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டிவைடரில் போகன் வில்லா செடிகள் மற்றும் சிறிய மரங்கள் வளர்ப்பதால் ஓரளவுக்கு வாகன ஓட்டிகள் கண் கூசாமல் ஓட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20260518233917294.jpeg
மைசூரில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையில் டிவைடரில் செடிகள் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசி ஏகபட்ட இடைஞ்சல் ஏற்படுகிறது.
இதனால் கோர விபத்துகளும் ஏற்படுகிறது.
சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஆகிய மலை பிரதேச சாலைகளில் இரவில் பயணிப்பது ஆபத்து தான்.

20260518234048138.jpeg
முக்கியமாக வாகனங்களின் முகப்பில் எல். இ. டி வைட் லைட் ஒளிர்ந்து எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூச செய்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஏகபட்ட கோர விபத்துகள் நிகழ்ந்துள்ளது.
எல்லா சாலைகளிலும் இரவில் பறக்கும் ஓமினி பஸ்களில் ஒளிரும் மிக பிரகாசமான அலங்கரிக்க பட்ட விளக்குகளால் ஏகபட்ட இடைஞ்சல் கண் கூசல் எரிச்சலில் வாகனங்களை மிக சிரமத்துடன் ஓட்டுகிறார்கள் விபத்துகளையும் தவிர்க்க முடியவில்லை .
20260518235246318.jpeg
இதற்கு என்னதான் தீர்வு என்று புரியாமல் கண் கூசி நீலகிரி வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரை நேரில் சந்தித்து பேசினோம்,

20260518234125959.jpeg
"வாகனங்களில் கண்கள் கூசி எரிச்சல் ஏற்படுத்தும் முகப்பு விளக்குகளை தவிர்க்க அதிகாரிகள் நாங்கள் மிக முக்கிய ஆலோசனை நடத்தினோம் சரியாக நீங்கள் அதே விஷயத்தை கூறுகிறீர்கள் அனைத்து வாகனங்களிலும் இன்கேண்டிசன்ட் லைட் தான் போடனும் ஆனால் இப்பொழுது கண்ணே கூசுவது மாதிரி எல். இ. டி மற்றும் ஆலோஜின் லைட்டுகளை மாற்றி கொள்கிறார்கள். அதனால் எதிரே பயணிக்கும் ஓட்டுனருக்கு கண் கூசி கண்ணே தெரியாமல் போகும் டூ வீலரா இருந்தா தடுமாறி கீழே விழுவார்கள் கார் மற்றும் பெரிய வாகனமா இருந்தா தடுமாறி சைடில் போய் ஒரு விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது அது கீழ் பிரதேசத்தில் அதே மலை பிரதேசத்தில் ஒரு பக்கம் பள்ளமாக இருக்கும் மறு பக்கம் மேடாக இருக்கும் பள்ளத்தில் 20260518234155785.jpegகவிழ்ந்தால் மிக பெரிய கோர விபத்து நடக்கும்.

அதனால் யாரும் கண் கூசுவது போல லைட்டை போட கூடாது.
எதிரே யாராவது பிரகாசமா வரும் போது டிம் டிப் பண்ணலாம் அதை எவரும் பின்பற்றுவதில்லை.
விபத்தை தவிர்க்க எல். இ. டி மற்றும் ஆலோஜின் பல்ப் பொருத்துவதை வாகன ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் முற்றிலும் நிறுத்த வேண்டும்.


இதை தவிர்க்க வில்லை என்றால் அபராதம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்யயிருக்கிறோம்.
தேசியநெடுஞ்சாலைகளில் நான்கு மற்றும் எட்டு வழி சாலைகளில் சென்டர் டிவைடரில் செடிகள் வளர்ப்பது எதிரே வரும் பிரகாச வாகனங்களின் லைட்டை தடுக்கிறது.
இங்கு உள்ள சிங்கிள் மலை சாலைகளில் அது வாய்ப்பில்லை
நீலகிரி போன்ற மலை பிரதேசங்களில் பயணிக்கும் ஆமினி பஸ்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது ஓட்டுனர்கள் மற்றவர்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து வாகனத்தை இயக்குவது தங்களின் பொறுப்பான கடமையாக செயல் படுத்த வேண்டும்.
20260518235131551.jpeg
விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் அதற்குள் தங்களின் முகப்பு பிரகாச விளக்குகளை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயம்" என்று மிக பொறுப்பாக கூறினார் பிரபாகர்.
வாகனங்களில் பொருத்தப்படும் முகப்பு விளக்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் சேல்ஸ் கடைகளை அரசு கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுப்பது பல கண்களையும் உயிர்களையும் காப்பாற்றுவதற்கு வழிவகுக்கும்.