தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

மிருணாள்தாக்கூர்

20260519194333517.jpeg

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிப்பது உறுதி என்கிறார்கள் .சம்பளம் சாய்பல்லவியை விட அதிகமாம். இந்தப் படத்தில் தன் அழகைவிட தனது திறமை அதிகம் பேசப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை.

ஸ்வாசிகா

20260519194836529.jpeg

நூறு சாமி படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்கிறார் ஸ்வாசிகா. அவர் ரொமான்ஸ் காட்சியில் எப்படி? என்று கேட்டதற்கு "அவருக்கு 100 மார்க் தரலாம். ஆனால், அவர் ரொமான்ஸ் செய்கிறார் என்றே தெரியாது அவ்வளவு இயல்பாக இருக்கும் "என்கிறார் நடிகை.

கீர்த்தி சுரேஷ்

20260519195051903.jpeg

உலக கடல் தினத்தை முன்னிட்டு ஆழ் கடலுக்குள் ஸ்கூபா டைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு வியக்க வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மஞ்சிமா மோகன்

20260519195210955.jpeg

திருமணத்திற்கு பிறகு ஒதுங்கி இருந்த மஞ்சிமா மோகன் டயட், உடற்பயிற்சி என்று உடலை சிக்கென வைத்துக் கொண்டு விட்டார். 'நான் நடிக்க ரெடி' என்று எல்லோருக்கும் தகவல் அனுப்பி இருக்கிறார் நடிகை.

சம்யுக்தா மேனன்

20260519195400137.jpeg

விஜய் சேதுபதியுடன் ' ஸ்லம் டாக்' படத்தில் நடித்திருக்கும் சம்யுக்தா மேனன் படம் தொடர்பான விழாவுக்கு நைட்டி போன்ற உடையில் வந்து எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார். அந்த நைட்டி பட்டு துணியில் நெய்யப்பட்டதாம்.

த்ரிஷா

மீண்டும் அதிர்ஷ்ட நாயகியாகிவிட்டார் திரிஷா. அவர் நடித்த கருப்பு படம் ஹிட் ஆகிவிட்டது. எனவே தனுஷ் தனது அடுத்த படத்தின் ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் திரிஷாவின் முன்னாள் நண்பரான ராணா டகுபதியும் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

பூஜா பாலேகர்

20260519195601436.jpeg

ராம்கோபால் வர்மாவின் கண்டுபிடிப்பான பூஜா பாலேகர் கவர்ச்சி காட்டுவதில் தாராளமய கொள்கை கொண்டவர் என்பதுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு சிறந்த தற்காப்பு கலைஞர். மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர் என்பது பலருக்கு தெரியாது.

ப்ரீத்தி முகுந்தன்

20260519195835732.jpeg

கன்னட படமான 'கண்ணப்பா' படத்தில் அறிமுகமாகி 'பிளாஸ்ட்' படத்தில் அதிரடி காட்சிகளில் நடித்த ப்ரீத்தி முகுந்தனிடம் காதல் பற்றி கேட்டால் "இன்னும் எனக்கு எந்த இளிச்சவாயனும் கிடைக்கல "! என்று சொல்லி சிரிக்கிறார்.

யாத்ரா

20260519200014361.jpeg

தனுஷ் மகன் யாத்திரா சினிமாவில் அறிமுகமாவது என்று முடிவு செய்துவிட்டார். இதற்காக பிரபல நடன இயக்குனர் ஒருவரிடம் நடனம் கற்றுக் கொள்கிறார். அவருக்கான கதை கூட ரெடி, அவரை இயக்கப் போவது அவர்கள் டாடி தனுஷ் தானம்.

கீர்த்தி சனோன்

20260519200255877.jpeg

ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் நடித்த படத்தின் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறும் போது ரசிகர்களிடம் சிக்கி தவித்தார் ராஷ்மிகா. அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார் கீர்த்தி சனோன். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகிறது.

பணம் குவிக்கும் நடிகைகள்

நடிகைகள் பலன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சப்ஸ்கிரிப்ஷன் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பிரத்யோக புகைப்படங்கள், தனிப்பட்ட தகவல்கள், ரசிகர்களுடன் நேரடி தொடர்பு போன்ற பிரத்தியோக வசதி இந்த சந்தா தாரர்களுக்கு கிடைக்கும் .இதன் மூலம் மாதம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை நிரந்தர வருமானம் அவர்களுக்கு கிடைக்கிறது.

கயல்

20260519200729758.jpeg

தெலுங்கில் பிசியாக இருந்தாலும் தமிழில் நடிக்கவே எனக்கு விருப்பம். அதுவும் குறிப்பாக 'அலைபாயுதே ' மாதிரி படத்தில் நடிக்க எனக்கு ஆசை என்கிறார் நடிகை கயல்.