தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260519194145365.jpeg

சிவசேனை மீண்டும் உடைகிறது.

பாஜக டைம் பாஸ் பண்ண மீண்டும் ஆரம்பித்து விட்டது !!

இனி வரும் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் திமுக குழு அறிக்கை தாக்கல்.

இப்பவே நம்ம தனித்து தான் இருக்கிறோம் உடன்பிறப்பே !!

மின் கட்டணத்தை உயர்த்த தமிழக வெற்றிக்கழக அரசு முடிவு அமைச்சர் மழுப்பல் பேட்டி.

ஆமா உயர்த்தப் போறோம்னு வெளிப்படையாகவா சொல்லுவாங்க ? அப்படி இப்படி தான் சொல்லணும் !!

சைலன்ட் மோடில் இருந்து எப்போது வெளியே வருவார்? திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி.

தலைவரே அவர் பேசினால் உங்களை தான் கலாய் பார் அப்படியே இருக்கட்டும் விடுங்க !!

நீட் மறு தேர்வுக்கான பாதுகாப்பு விதிகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது அண்ணாமலை கருத்து.

தலைவரே போன வருஷம் நீங்க வேற மாதிரி பேசினீங்க. ஆனா இப்பதான் கரெக்ட்டா பேசுறீங்க !!

சட்டமன்ற உறுப்பினருக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

திமுகவை எப்படி கலாய்க்கணும் எடப்பாடி பேசினா என்ன செய்யணும் இதற்கெல்லாம் எப்ப பயிற்சி தலைவரே ?

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.

இன்னுமா அவரை நம்புறீங்க !!

நீட் மறு தேர்வுக்கான வினாத்தாள் ராணுவ விமானத்தில் வந்தது.

இதெல்லாம் ரொம்ப ஓவர் !!

ராகுல் காந்தி தலைமையில் இன்று மாணவர்கள் மாநாடு.

அவங்கள வச்சு தான் இனிமே அரசியல் பொழைப்புன்னு தலைவர் தெரிஞ்சுகிட்டார். ஆனால் ரொம்ப லேட்டா தெரிஞ்சுகிட்டார்.

சட்டசபையில் நடக்கும் சில நிகழ்வுகள் ஆட்சி மாற்றத்திற்கே வழி வகுத்து விடும் சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் பேச்சு.

இது யாருக்கான மெசேஜ்ன்னு தெரியல?

வரி உயர்த்தப்படாது மக்கள் நல திட்டங்கள் தொடரும் அமைச்சர் வில்சன் உறுதி.

நெசமாவா ?

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் தேர்தலை எதிர்த்து வழக்கு.

தீர்ப்பு வரதுக்குள்ள எப்படி இரண்டு மூணு தேர்தல் நடந்து முடிஞ்சிடும் !!

இண்டியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக சொல்லவில்லை பா. சிதம்பரம்.

அப்படி சொல்லிட்டா தமிழக வெற்றிக்கழகத்தை சேர்த்துக்கலாம் என்பது தானே உங்க பிளான் ?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தாமாக ஜி.கே. வாசன் அறிவிப்பு.

அச்சச்சோ இனிமே பாஜக ஜெயிக்க முடியாதா ? ஆட்சிக்கு வர முடியாதா ?