தொடர்கள்
பொது
பறவைகள் பலவிதம் - ஸ்வேதா அப்புதாஸ் .

உலகத்திலே பல நாடுகளில் இருந்து ஆயிரம் கணக்கில் இடம்பெயர்ந்து பறவைகள் விரும்பி வந்து தங்கி செல்லும் நாடு நம் இந்தியா .

20260104232623791.jpg

அந்த பெருமையான விஷயத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறோமா என்பது மிக பெரிய கேள்வி குறி என்கிறார் சுற்றுசூழல் ஆர்வலர் சிவதாஸ் .

20260104232650665.jpg

" பறவைகள் பலவிதமும் இந்தியாவில் உள்ளன அதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் உயிர்சூழல் பகுதிகள் அதன் அமைப்பு வாழ்விடங்கள் உலகத்தில் உள்ள பல்வேறு பறவை இனங்கள் பறந்து வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கால சூழ்நிலைக்கு ஏற்ற படி செல்கின்றன என்பது ஆச்சிரியமான ஒன்று !.

20260104232721321.jpg

நம் நாட்டில் 72 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன அதில் கேரளா , கர்நாடக மற்றும் தமிழ்நாடு பறவைகளின் புகலிடமாக திகழ்கிறது .

வேடந்தாங்கல், கோடியக்கரை , பிச்சாவரம் ,

கர்நாடகாவில் ரங்கன் திட்டு , கேரளாவில் கடலாண்டி ஆகியவை பறவைகள் சரணாலயங்களாக திகழ்கிறது .

இதில் மிகவும் பாதுகாப்பானது நீலகிரி உயிர் சூழல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது .

20260104232800272.jpg

இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடம் நீலகிரி உயிர் சூழல் பகுதிகள் .

இங்குள்ள ஈர நில பகுதிகள் பல வகை பறவைகள் இன பெருக்கம் செய்ய ஏற்ற இடங்கள் .

2026010423282970.jpg

நீலகிரியில் சோலைக்காடுகள், புல்வெளிகள், ஈரநிலம் அதை சார்ந்த பறவைகள், முட்புதர் காடுகள், பசுமை மாற காடுகள், இலையுதிர் காடுகள், நீர்வாழ் இடங்களை சார்ந்து வாழும் பறவைகள் என காலநிலை, சூழல் தன்மைக்கு ஏற்ப வாழும் பறவை இனங்களை காணமுடியும்.

வலசை பறவைகள்

Steppe Eagle, kashmir fly catcher, blue capped red thrush, Eurssian wrynec, pintailed snipe.

Thrushes

Blue capped rock thrush

Indian blue robin

Nilgiri blue robin (endemic resident)

Nilgiri wood pigeon

Nilgiri blue fly catcher

Crested spotted Goshawk

Nilgiri Laughing thrush

Great Indian horn bill (நீலகிரி பார்லியார்பகுதிகளில் அதிகம் வர தொடங்கி உள்ளது. அழிவின் பிடியில் உள்ளது.

Black napped Monarch. பாதுகாக்க வேண்டிய பறவை. அழகான குரல் கொண்டு வசிகரிக்கும்.

20260104232900708.jpg

பறவைகள் உயிர்சூழல் பின்ன லில் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றது.தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்களை கட்டுப்படுத்துகின்றது.

விதை பரவலுக்கு , வன விரிவாகத்திற்கு பறவைகள் அவசியம்.

மனிதர்களுக்கு ப்ரோ டின், வளர்ச்சிக்கான சத்துக்கள் அடங்கிய உணவுகளில் பறவைகள் கோழிகள் இன்றியமையாதது.முட்டை, மற்றும் இறைச்சிக்காக அதிகம் கொல்லப்படுவது வருத்தமளிக்கிறது என்கிறார் .

20260104232933131.jpg

ஊட்டி பகுதியில் இருவாட்சி பறவை முப்பது வருடத்திற்கு முன் பார்க்க முடிந்தது தற்போது மிஸ்ஸிங் கூடலூர் ஓவேலி மற்றும் சிங்கார வன பகுதியில் பார்க்கமுடிகிறது .

தற்போது ஏரிகள் , குளங்கள் கழிவுகள் , ரசாயன பொருள்களால் பாதிக்கப்பட்டுள்ளது .

இதனால் பறவைகளின் வருகை குறைந்து விட்டது .

பசுமைமாறா காடுகள் மற்றும் உயரமான வன பகுதியில் 'ரெட் பியோட்' ஹார்ன் பில் ஆகிய பறவைகள் சைலன்ட் வேலி கோத்தகிரி பகுதியில் பாரக்கமுடியும் .

தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பறவைகள் வந்து செல்வதற்கு ஏற்ற காலங்கள் .

பறவைகள் மனிதனின் வாழ்கையிக்கு உகந்ததாக இருக்கிறது .கொசு மற்றும் பெரும்பாலான ஆபத்தான பூச்சிகளை பறவைகள் சாப்பிடுவதால் நமக்கு பாதிப்புகள் குறைவதை பார்க்க முடிகிறது .

பலதரப்பட்ட பழ தாவரங்களில் பறவைகள் பழங்களை பறித்து அதன் கொட்டைகளை வேறு இடத்தில் போட அங்கு புதிய மரம் வளர்ந்துள்ளன .

இப்படி தாவரம் வளர்வதிலும் பறவைகள் உகந்தவையாக இருக்கிறது என்கிறார் சிவதாஸ் .

மேலும் கூறும்போது , " ஆர்டிக் மற்றும் அண்டரிக்காவில் வாழும் பறவைகள் பென்குயின் பனி பிரதேசத்தில் வாழ்கின்றன உலக வெப்பமடையும் போது அதன் வாழ்வு கேள்விக்குறியாகிவிடுகிறது .

கடல் வாழ் பறவைகள் கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவு போன்ற உபாதைகளால் பாதிப்புக்குளாகின்றன.

20260104233041730.jpg

ஊட்டி ஏரிக்கு காஷ்மீரில் இருந்து பறவைகள் வந்து சென்றுகொண்டிருந்தன , தற்போது ஏரியில் கழிவு நீர் கலந்து மாசு ஏற்பட்டுள்ளதால் பறவைகள் வருகை காண்பதில்லை .

சில வாத்துகள் , நாரைகள் வந்து சென்றாலும் அவைகளின் ஆயுள் காலம் மிக குறைவு தான் " என்கிறார் .

ஒரு ஆறுதலான விஷயம் சிட்டு குருவிகளின் எண்ணிக்கை கூடியிருப்பது காரணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வீடுகளில் சிட்டு குருவி வந்து தங்க இடவசதி செய்யப்பட்டுள்ளது .

கான்க்ரீட் கட்டிடங்களின் வருகையால் சிட்டு குருவி காணாமல் போகிறது .

20260104233216400.jpg

கிராமங்களில் கூட கான்க்ரீட் கட்டிடங்கள் உருவாகியுள்ளதால் சிட்டு குருவிகளின் புகலிடம் தடைபடுகிறது .

இந்தியாவில் மட்டும் 1300 வகை பறவைகள் வந்து போய்க்கொண்டேருக்கின்றன .

தமிழ் நாட்டில் 350 வகை பறவைகள் உள்ளன அதில் 50 வகை இடம்பெயரும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏரி குளம் குட்டைகளில் கழிவு நீர் , ரசாயனம் கலக்கல்லால் இனப்பெருக்கம் பாதிக்கப்ட்டுள்ளது .

நீலகிரியில் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது .

பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை புலி போன்ற மிருகங்கள் உண்டு இறந்து போக அந்த மாமிசத்தை கழுகுகள் உண்ணும் பொழுது அவை இறக்கின்றன .

பாம்பு போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும் கழுகுகள் முதுமலை காடுகளில் உள்ளன .

அவைகளும் குறைந்துள்ளன .

அதே போல மயில்களும் பாம்புகளை பிடிக்கும் பறவை பாம்பு கடியில் இருந்து நம்மை காக்கிறது !.

20260104233251655.jpg

பறவைகளை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மறக்கக்கூடாது என்கிறார் சிவதாஸ் .

20260104233322926.jpg

பறவையை கண்டான் விமானம் படைத்தான் விமானங்கள் அதிகம் பறக்க பறவைகள் காணாமல் போவது சரியா ?!.

விமானத்தை பறவை தொட்டால் விமானம் பறக்கமுடியாது .

பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும் .