தொடர்கள்
வலையங்கம்
தாயின் கேள்விக்கு என்ன பதில்

வலையங்கம் -2

20260106180438972.jpeg

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித் குமார் நகை திருட்டு புகார் காரணமாக விசாரித்தபோது 2025 ஜூன் 27-இல் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தற்சமயம் அப்படி ஒரு நகை திருட்டு சம்பவமே நடக்கவில்லை புகாரே பொய் என்று நீதிமன்றத்தில் சிபிஐ சொல்லி இருக்கிறது.

அஜித்குமாரின் தாய் நேற்றைய தினம் நிருபர்களை சந்திக்கும் போது பொய் புகார் கொடுத்த நிகிதா என்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். காவல்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டிருக்கிறார். அப்பாவி அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு அந்தத் தாயின் கேள்வியில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு சிபிஐ மற்றும் நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுப்பது என்பது தான் அந்தத் தாயின் கேள்விக்கு பதிலாக அமையும்.

தாயின் கேள்விக்கும் சரி, நீதி நியாத்திற்கும் சரி, நடவடிக்கை ஒன்று தான் இந்த அராஜகத்திற்கு ஒரே தீர்வு.