தொடர்கள்
பொது
பறந்து சென்ற கிளி மனிதன் -மாலாஸ்ரீ

20260106190813273.jpeg

‘பறவை மனிதர்’ என்று கவனிக்கப்பட்டவர் ஜோசப் சேகர்.

சென்னை ராயப்பேட்டையில் ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கிய காமிரா பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து, அக்கட்டிடத்தின் மாடியில் தங்கியபடி, ஒருசில கிளிகளுக்கு உணவளித்து வந்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் அவரைத் தேடி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளிகள் வரத் துவங்கிவிட்டன. சேகரிடம் பல்வேறு வகையான காமிராக்களை சேமிக்கும் பழக்கமும் இருந்ததால், அவரை ‘காமிரா ஹவுஸ் சேகர்’ என்றே அழைத்தனர்.

நாளடைவில் சேகரைத் தேடி உணவுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் தேடி வந்ததால், அவரைப் பலரும் ‘பறவை மனிதர்’ (Bird Man) என்றே அழைத்தனர். சென்னை ராயப்பேட்டையில் சேகர் வாடகைக்கு வசித்து வந்த பழைய கட்டிடத்தை, அதன் உரிமையாளர் விற்பனை செய்யும் பொருட்டு, வீட்டை காலி செய்து தரும்படி கூறியுள்ளார்.

அப்படி இந்த வீட்டை காலி செய்துவிட்டு வெளியே சென்றால், ‘தன்னை தேடிவரும் கிளிகளுக்கு உணவளிக்க முடியாமல் போய்விடுமே’ என்பதால், தனது காமிரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் அக்கட்டிடத்தை வாங்கிவிடலாம் என்கிற சேகரின் கனவும் முயற்சியும் நிறைவேறவில்லை.

இப்பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாகவே சேகர் பல்வேறு விஷயங்களை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த பழைய வீட்டை காலி செய்தபின், கடந்த 2 ஆண்டுகளாக தன்னைத் தேடி வரும் கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 11-ம் தேதி தமிழகத்தின் பறவை மனிதரான சேகர் சென்னையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்.

பறந்து சென்ற கிளி மனிதன்