
ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்று திமுகவிற்கு அழுத்தம் தரும் காங்கிரஸ் கட்சியின் காரணமாக திமுகவால் தொகுதி பங்கீடு விஷயத்தை சுமூகமாக முடிக்க முடியவில்லை.
ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் கூட சம்பிரதாயமாக முதலமைச்சர் ஸ்டாலினை அவரால் சந்திக்க முடியவில்லை.
திமுக தற்சமயம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி குழு விரைவில் அமைப்போம் அவர்கள் பேசி முடிவு செய்வார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.
தேமுதிக இன்று அறிவிக்கிறேன் நாளை கூட்டணி முடிவு அறிவிப்பேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கடைசியில் "தை மாசத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்கிறது ஏன் அவசரப் படுகிறீர்கள் "என்று நிருபர்களிடம் சமாளிக்க ஆரம்பித்து இருக்கிறார். தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் .
திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் தேமுதிக கேட்டாலும் தற்சமயம் ஒன்பது தொகுதி ராஜ்யசபா வாய்ப்பு என்று பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறைத்துக் கொள்ள சம்மதித்தால் உங்களுக்கு மேலும் சில தொகுதிகள் தரப்படும் என்று உத்தரவாதத்தை தந்திருக்கிறார் திமுக தலைவர்.
அதிமுகவை பொருத்தவரை காங்கிரஸ் என்ன செய்கிறது என்று காத்திருக்கிறது.
தேமுதிக பொருத்தவரை எடப்பாடி அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவர்களாக பேசட்டும் என்று காத்திருக்கிறார்.
எல்லாமே காங்கிரஸ் முடிவை பொருத்து தான் என்பதுதான் இப்போதைக்கு நிதர்சனம்.
காங்கிரஸ் மீது திமுக கொஞ்சம் வருத்தத்தில் தான் இருக்கிறது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்க்கும் போது திமுக அங்கு ஒதுங்கியும் பதுங்கியும் இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வெங்கடேசன் கூட காங்கிரஸ் உறுப்பினர் மாணிக் தாக்குருடன் சேர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
திமுக உறுப்பினர்கள் யாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.
இதையும் காங்கிரஸ் கவனித்து வருகிறது.
எனக்கு சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல அஞ்சுகிறது பாஜக என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து மட்டும் சொல்லி பதிவிட்டார் அத்தோடு அவர்கள் நடவடிக்கை முடிந்து விட்டது.

Leave a comment
Upload