
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் அண்ணாமலை உள்பட 72 பொறுப்பாளர்களை நியமித்தார் தற்சமயம் தனது தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
அண்ணாமலை தலைமையின் மீது ஏற்பட்ட வருத்தம் காரணமாக இந்த முடிவு எடுத்து இருப்பதாக அவரது ஆதரவாளர்களே கருத்து சொல்கிறார்கள்.
அதிமுகவுடன் கூட்டணி என்றதும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டது கிணங்க அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை டெல்லி பாஜக தலைமை நியமித்தது.
அண்ணாமலைக்கு உரிய கௌரவம் தரப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.
தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜக அவரை ஆளுநராக நியமித்தது. அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட எல். முருகன் சந்தித்த தேர்தலிலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றி இல்லை.
எல்.முருகனை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கி மத்திய அமைச்சர் ஆக்கியது. டெல்லி தலைமை. அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் அவருக்கு பெரிய பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து கொள்கிறார்.
கட்சி வளர்ச்சிக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்று டெல்லி தலைவர்களிடம் தமிழகத் தலைவர்கள் புகார் சொன்னது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் போது பிரதமர் படத்தை கூட பயன்படுத்தாமல் தன் படத்தை பயன்படுத்தி தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்று அப்போதே அண்ணாமலை மீது புகார் சொல்லப்பட்டது. இப்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து கோயம்புத்தூரில் குடியேறினார் அண்ணாமலை .
நயினார் நாகேந்திரன் எடப்பாடி இருவரும் சேர்ந்து தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு இல்லாதது போல் செய்து விட்டார்கள். தவிர கோவை மாவட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் வேலுமணி கோவையில் அண்ணாமலை வளர்ச்சியை விரும்ப மாட்டார்.
டெல்லியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அண்ணாமலைக்கு தேர்தல் வாய்ப்பு இல்லாதபடி செய்து விட்டார் வேலுமணி.
மாநிலத் தலைமை டெல்லி தலைமை இரண்டுமே தன்னை ஒதுக்குகிறது என்பதை புரிந்து கொண்டு தான் அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்கிறது கமலாலயம் வட்டாரம்.

Leave a comment
Upload