மம்முட்டி

ராஜ்குமார் இயக்கத்தில் தனுஷ் சாய்பல்லவி ஸ்ரீ லீலா நடிக்கும் தனுஷின் 55-வது படத்தில் மம்முட்டி இணைந்திருக்கிறார்.
மிருணாள் தாக்கூர்

"காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்று. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் "என்கிறார் நடிகை மிருணாள் தாகூர்.
மாளவிகா மோகனன்

"கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும் ரசிகர்களும் தான். அந்த வகையில் என் உடை விஷயத்தில் நான் கவனமாக இருக்கிறேன். என்னை பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே இலக்கு. எனவே ஒவ்வொரு ஆடையையும் பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்கிறேன் "என்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
யுவினா பார்த்தவி
2013-ஆம் ஆண்டு திருமதி தமிழ் என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் யுவினா பார்த்தவி. அதன் பிறகு இவன் வேற மாதிரி, வீரம், மஞ்சப்பை அரண்மனை ,கத்தி போன்ற படங்களில் நடித்தார். 18 வயதை நெருங்கும் யுவினா பார்த்தவி சமீபத்தில் வெளியான ரைட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசிய வீடியோ வைரல் ஆனது. . குழந்தை நட்சத்திரங்கள் கதாநாயகியாகும் சீசன் போல் தெரிகிறது.
கீர்த்தி சுரேஷ்

இனிமேல் மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுடன் தான் ஜோடியாக நடிப்பேன் என்று முடிவு செய்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர்களுடன் அடிக்கடி பேசிக் கொண்டு வருகிறார் நடிகை.
நயன்தாரா

'டாக்ஸிக்' படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 18 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டிருக்கிறது.
கல்யாணி பிரியதர்ஷன்

"மொழி எனக்கு ஒரு பிரச்சனையே கிடையாது" என்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
ரஜினியின் சினிமா வாரிசு
ரஜினியின் சினிமா வாரிசு என் மகனும் அவரது பேரனுமான வேத் என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். என் மகன் வளர்ந்த பின் சினிமாவில் தான் இருப்பார் என்கிறார்.
அஜித்

"படத்தின் பூஜை பிரமோஷன் எதற்குமே அஜித் வர மாட்டார். அப்படிப்பட்டவர் பின்னால் ஏன் தயாரிப்பாளர்கள் ஓட வேண்டும். கொஞ்சம் சுயமரியாதையோடு இருங்கள். தன்னை எது வாழ வைக்கிறதோ அதை அஜித் கண்டு கொள்ள மாட்டார். அதைத் தவிர்த்து மற்ற தொழிலில் எல்லாம் கவனம் செலுத்துவார் "என்கிறார் தயாரிப்பாளர் கேயார்.
படையப்பா 2

படையப்பா-2 படத்தின் முழு கதையும் ரஜினிகாந்த் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறார். .இயக்குனர் யார் என்பது தான் இன்னும் தீர்மானம் செய்ய வில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
சிவகார்த்திகேயன்

மீண்டும் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Leave a comment
Upload