தொடர்கள்
பொது
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரி கொலு: பக்தி நயமும் பாரம்பரியமும்! - வேங்கடகிருஷ்ணன்

2026915221515948.jpg

மயிலாப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது மாடவீதிகளும், அங்கு அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கோவிலும் ஆகும். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு திருவிழா பக்தர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பாளுக்குச் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்களும், பக்திப் பூர்வமான வழிபாடுகளும் கோவிலின் ஆன்மீகச் சூழலை மேலும் மெருகூட்டுகின்றன. பாரம்பரிய கொலு பொம்மைக் காட்சிகளுடன், தமிழகத்தின் தொன்மைச் கலைகளைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொலு மண்டபம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

202691522164233.jpg

மாலை நேரங்களில் ஒளிரும் வண்ண விளக்குகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் சென்னைவாசிகளின் பிரதான ஆன்மீகக் கூடமாக கபாலீஸ்வரர் கோவில் மாறிவிடுகிறது. பாரம்பரியமும் பக்திப் பெருக்கும் சங்கமிக்கும் இந்த நவராத்திரி திருவிழா, ஆன்மீக அன்பர்கள் அனைவரும் கட்டாயம் கண்டு களிக்க வேண்டிய கண்கொள்ளாக் காட்சியாகும்.