தொடர்கள்
சினிமா
ஜெயிலர் 2 ! ரஜினி மேஜிக் தொடர்கிறதா ???- லைட் பாய்

2026917072438449.jpeg

2023 ஆம் ஆண்டு அவரே இயக்கி வந்த ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சி. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பு.

ஜெயிலர் 2 படத்தில் வர்மனுக்கு மேலே உள்ள சிலைக் கடத்தல் நெட் ஒர்க், பெரிய தலைகள், மூலப் புள்ளி இவற்றை வைத்து இந்த இரண்டாம் பாகம் விரிகிறது.

வேலைக்கு போகும் மருமகள், பள்ளிக்கு போகும் பேரன், வீட்டைப் பார்த்துக் கொள்ளும் மனைவி என்ற சூழலில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்கிறார் முத்துவேல் பாண்டியன் என்ற ரஜினி.

முத்துவேல் பெயர்க்காரணம் புரியாவிட்டால் ஒன்றும் குடிமுழுகி விடாது தொடரலாம்.

அங்கிருந்து சின்ன சின்ன சண்டைகளில் துவங்கி பெரிய தாதாவுடன் மோதும் கிளைமேக்ஸ் தான் ஜெயிலர் 2.

சினிமா விமர்சனம் என்பதல்ல நோக்கம்.

2026917060103220.jpg

ஒவ்வொரு முறையும் எப்படி ரஜினி மேஜிக் வேலை செய்கிறது என்பது தான் விஷயம்.

ரஜினி என்ற பிம்பத்தை ஒவ்வொரு படத்திலும் எப்படி அதன் இயக்குனர்கள் கையாள்கிறார்கள் என்பதை பொறுத்துத் தான் ரஜினியின் வெற்றி இருக்கிறது.

அவரைச் சுற்றிலும் உள்ள மாஸ், எதிர்பார்ப்பு அன்றாட பத்திரிகை செய்திகளையும் அவரை உசுப்பு விட்டு டம்மி பீஸ் என்று காட்டி விடும் அல்லு சில்லு அரசியல்வாதிகளையும் தாண்டியது.

2026917074330913.jpg

பாமக பெட்டியை தூக்கி ஓடியதில் இருந்து அவரை மெரீனாவில் காவிரியில் போராட வைத்ததிலிருந்து, வழுக்கத் தலை சத்யராஜெல்லாம் அவரைப் பற்றி அசிங்க அசிங்கமாக பேசியதில் இருந்து, போயஸ் தோட்ட சிக்னலில் அவரை நிற்க வைத்ததிலிருந்து, அவரது மனைவியின் பேராசைக்கு அவரை பலிகடா ஆக்கி விமர்சித்ததிலிருந்து, சமீபத்தில் விஜய்க்கு எதிராக அவரை கொம்பு சீவ வைத்த வரைக்கும், அவர் படத்தில் சொன்னது போல ஐம்பது வருடங்களாக அவரை ஒடுக்க தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது,

பாபா படத்தோடு அவருக்கு பை பை என்று நினைத்த கோஷ்டியும் இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு ரஜினி படமும் அவரது அத்தியாயத்தை அடுத்தது அடுத்தது என்று நீட்டிக் கொண்டு போவதற்கு அவரது இறை நம்பிக்கையும் காரணம் புத்திசாலித்தனமான இயக்குனர்களும் காரணம்.

ஜெயிலர் 2 படம் எப்படி. ??

2026917074419865.jpg

கதைக்கு ஏற்றாற் போல மாஸ் சீன்கள் வைப்பது ஒரு வகை. மாஸ் சீன்களை முடிவு செய்து விட்டு அதை சுற்றிலும் கதை பின்னுவது இன்னொரு வகை. அப்படிப்பட்ட ஒரு திரைக்கதையை ரஜினி போன்ற ஹெவி வைட்டை வைத்துக் கொண்டு புனைவது சுலபம் தான்.

ஆனால் சிரிப்பு வராத டார்க் காமெடி வகையை வைத்துக் கொண்டு, ஏராள கதாபாத்திரங்களுக்கு நடுவே வித்தை செய்திருக்கிறார் நெல்சன்.

படம் அந்த குத்து பாடல்கள் நீங்கலாக விறுவிறு ரகம் தான். பாப்கார்ன் விற்பதற்காக போட்ட அந்த பாடல்கள் அநிருத் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பிடிக்கும்.

பின்னணி இசை மிரட்டியிருக்கிறார் அநிருத்.

எடிட்டர் நீளத்தை குறைக்காமல் தூங்கி விட்டது தெரிகிறது.

கடைசியில் பீடா விற்கும் கெட்டப்பில் ஷிவ்ராஜ்குமார், தொப்பையுடன் அங்கிள் பன்னாக இருக்கும் மோகன்லால், ஆடு மேய்க்கும் ஜாக்கி ஷ்ராஃப், இதெல்லாம் போதாதென்று விஜய் சேதுபதி, அந்த ஏதோ யுனிவர்சாமே, இந்த அலப்பறைகள் கொஞ்சம் எரிச்சலூட்டவது உண்மை.

தப்பிப்பது ஹிரித்திக் ரோஷன் மட்டுமே. கொஞ்சம் அதிகமாகவே வருகிறார்.

கிச்சு கிச்சு நாமே செய்து கொள்வதைப் போல அலப்பறை சீன்கள் இதெல்லாம்.

விக்ரம் படத்தில் கமலுக்கு கொஞ்சமே கொஞ்சம் தலை காட்டி கமல் படம் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது போல இல்லை. ரிபீட்டடாக பார்க்க முடியுமா என்றால் உதைக்கிறது. உதாரணத்திற்கு தெறி படத்தில் அந்த மேம்பாலம் படத்தில் விஜயும், மொட்டை ராஜேந்திரனும் வரும் மாஸ் சீன், அல்லது தெருவில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை காப்பாற்றும் சமந்தா விஜய் சீன் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அப்படியான காட்சிகள் எதுவும் இருப்பதாக சொல்ல முடியாது.

2026917073322293.jpeg

இது முழுக்க முழுக்க ரஜினி தோன்றும் நெல்சன் படம்.

ஜெயிலர் 2 ரசிகர்களை ஏமாற்றாது என்பது மட்டும் கியாரண்டி.

சுஜாதா சொல்வது போல ஜெயித்த விஷயத்தை அலசக் கூடாது.

ரஜினி மேஜிக் தொடர்கிறது. அஷ்டே !!!!