மலைகளின் அரசியின் ஆபரணமாக விளங்கும் நீலகிரி மலை ரயில் உலக பிரசித்தி பெற்றது.
நீலகிரி மலை ரயில் ஒரு ஸ்விஸ் என்ஜினீயர்களின் சிறந்த தயாரிப்பு.

இந்த மலை ரயிலை உருவாக்கின ஸ்விஸ் நிறுவனம் மூடப்பட்டு விட்டது.
அதே சமயம் 120 ஆண்டுகளாக நீலகிரி மலை ரயில் இந்த மலை மாவட்டத்தில் ஊர்ந்து தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி சொன்னாலும் இவர்களுக்கு ஒரு உந்துதலாக செயல் படுபவர்கள் உள்ளூர் பாரம்பரிய மலை ரயிலின் நிறுவனர் நட்ராஜும் உள்ளூரில் உள்ள சில மூத்த பத்திரிகையாளர்களும் தான் என்று சொன்னால் மிகையாகாது.
பிரிட்டிஷார் இந்த மலை ரயிலை இரண்டு கட்டமாக உருவாக்கினார்கள்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 1891 ஆம் கட்டுமான பணிகளை துவக்கி 1899 ஆம் வருடம் ஜூன் 15 ஆம் தேதி இந்த ரயில் பயணம் துவங்கியது.

பின்னேர் குன்னூர் முதல் ஊட்டி பெர்ன்ஹில் ரயில் நிலையத்தை 1908 செப்டம்பர் 15 ஆம் தேதி திறந்து வைத்தனர்.
ஒருமாதம் கழித்து அக்டோபர் 15 ஆம் தேதி ஊட்டி ரயில் நிலையம் திறக்கப்பட்டு ரயில் ஊட்டி வந்து சேர்ந்தது.
இந்த வருடம் மலை ரயில் ஊட்டி வந்து சேர்ந்த 118 ஆம் வருடத்தை சிறப்பிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46 கிலோமீட்டர் இந்த ரயில் பயணம் செல்கிறது.
208 வளைவுகளை இந்த ரயில் பாதையில் உள்ளது.
250 பாலங்கள் 16 டனல்களில் பயணிக்கிறது இந்த அழகிய மலை ரயில்.

2005 ஆம் ஆண்டு ஜூலை டர்பனில் நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ பாரம்பரிய ரயிலாக அங்கீகரித்தது.
23 நீராவி என்ஜின்கள் மலையில் ரயில் பெட்டிகளை தள்ளி கொண்டும் இழுத்து கொண்டும் பயணித்து வந்தன.
இதில் 23 என்ஜின்கள் தயாரிக்க பட்டன. அதில் 17 என்ஜின்கள் 1914 முதல் 1952 ஆம் ஆண்டு இடையில் Swiss Locomotive &Machine Works (SLM ) Winterthur, Switzerland நிறுவனத்தில் நேரடியாக தயாரிக்க பட்டு இறக்குமதி செய்யப்பட்டு நீலகிரி மலையில் பயணித்து வந்தன.

6 என்ஜின்கள் அதே ஸ்விஸ் வடிவில் நம் இளம் பொறியாளர்களின் கை வண்ணத்தில் the Golden Rock Railway Workshop திருச்சியில் 2011மற்றும் 2022 உருவாக்கி அந்த என்ஜின்கள் பயணித்து வருகின்றன.
அதிலும் ஆயில் பர்னெர் என்ஜின் பயணிக்கிறது.
நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் ஸ்விஸ் என்ஜின்களின் வயது மூப்பு காரணமாக ஓய்வு கொடுக்க பட்டு சில என்ஜின்கள் ரயில் நிலையங்களில் காட்சி பொருளாக நிற்கின்றது.
குன்னூர் ஊட்டி வரை டீசல் என்ஜின் பயணிக்கிறது.
இந்த டீசல் என்ஜின்களாள் பாரம்பரிய அந்தஸ்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.
தென்னக ரயில்வே புதுப்பிப்பு என்ற பேரில் இந்த ரயிலின் பழைய ஸ்டைலை மாற்றி வருவது தேவையற்ற பண விரயம் புது கட்டுமானங்கள் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீலகிரி மலை ரயில் ஊட்டி வந்து 118 ஆம் வருட நாளை பகல் 12 மணிக்கு ரயில் குன்னூரில் இருந்து வந்தவுடன் சுற்றுலா பயணிகளை வைத்து கேக் வெட்டி கொண்டாடினார் பாரம்பரிய அறக்கட்டளை நிர்வாகி நட்ராஜ்.

பெங்களூரில் இருந்து வந்த சுற்றுலா பயணி சிறுமி பிஹெபியா கேக் வெட்டி சிறப்பித்தார்.
இவரின் அப்பா பெய்ரூஸ் அம்மா ஹமீத் மற்றும் சகோதரி மரியா கூறும் போது,
நாங்க குன்னூரில் இருந்து இந்த ரயிலில் பயணித்தோம் ரொம்பவே சூப்பராக இருந்தது. இந்த ரயிலில் பயணம் செய்ய எவ்ளோ கனவு கண்டுள்ளோம். இன்று எங்க கனவு நிறைவேறி அதிலும் இந்த அழகிய ரயிலின் 118 வது பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டி மகிழ்ந்ததை மறக்க முடியாது " என்று கூறினார்கள்.
நீலகிரி பாரம்பரிய ரயில் அறக்கட்டளை நிர்வாகி நட்ராஜ் கூறும் போது,
" பாரம்பரிய ரயிலின் 118 ஆம் ஆண்டு கொண்டாடுகிறோம்.
கடந்த முப்பது வருடங்களுக்கு முன் Heritage Steam Engin Chariot Trust துவக்கி NMR day என்பதை அனுசரித்து வருகிறோம்.
சுற்றுலா பயணிகள் அதிகம் இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்று Heritage chariot என்ற ரயிலை நாங்க ரன்னி மேடு வரை பயணிக்க செய்தோம்.
அந்த ரயிலில் யுனெஸ்கோ பாரம்பரியத்தை பிரமோட் பண்ணும் ராபர்ட் லீ வந்திருந்தார்.
முன்னால் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் இங்கு வந்த போது மனு கொடுத்தோம்.
அப்பொழுது இருந்த டி ஆர் எம் ஓ ஷர்மா மற்றும் சீனியர் பி ஆர் ஓ, ஓம்பிரகாஷ் முயற்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நம்ம எம். பி, எம். எல். ஏ சப்போர்ட் செய்து 2005 யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது.
நான்கு கோச் தான் பயணிக்கிறது ஐந்து கோச் கேட்டிருக்கிறோம்.
நம்மிடம் இரண்டு நிலக்கரி என்ஜின் உள்ளது.
ஏழு ஆயில் பர்னர் என்ஜின் உள்ளது மற்றும் ஐந்து டீசல் என்ஜின் உள்ளது.
இப்படியிருக்க உலக சுற்றுலா பயணிகளை உலக நீராவி பயணத்தினுள் கொண்டுவரலாம்.
இந்த ரயில் மூலம் அந்நியச்செலாவணியை உயர்த்தலாம் " என்று கூறினார்.
இந்த அழகான மலை ரயில் பல முறை நிறுத்தப்படும் தருவாய்க்கு வந்தது.
கலைஞர் முதல்வராக இருக்கும் போது தமிழக அரசு எடுத்து நடத்த முன் வந்தார்.
அதே போல கூடலூர் வழியாக மைசூருக்கு இந்த ரயில் பயணிக்க பிரிட்ஷார் பிளான் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலை ரயில் பரம்பரியதுடன் பாதுகாக்க படவேண்டும் என்கின்றனர் சுற்றுலாபயணிகள்.
அதிக கட்டணம் என்பதாலும் நேரமாற்றம் அரசு ஊழியர்கள், கல்லுரி மாணவர்கள் என்று பயணித்த காலம் கனவாகி போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment
Upload