தொடர்கள்
அழகு
“இயேசுநாதர் பிறப்பு பொம்மைகளும் எங்கள் கொலுவில் அடக்கம்” அணு விஞ்ஞானி முனைவர் வெங்கடரமணி - பால்கி

2026916084220692.jpg
விகடகவி வாசகர்களுக்கு பரிச்சியமானவர் தான் அணு விஞ்ஞானி முனைவர் வெங்கடரமணி.

79+ வயதிலும் இவரது சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத விநாயக சதுர்த்தி கொண்டாடுவது எப்படி என்று கொண்டாடி காட்டியவர். (விகடகவி இதழ் லிங்க் https://www.vikatakavi.in/magazines/496/16448/eco-friendly-ganpati.php )

இப்படித்தான் நெவர் கிவ் அப் என்ற அதீத விடா முயற்சி கொண்டு ஒரு தினம் ஐம்பது கி.மீ தூரம் நடக்க முயன்றவர், 39.58 கி.மீ தூரத்தை 9 மணி 9 நிமிடங்களில் இதுவரை நடந்துள்ளார்.(விகடகவி இதழ் லிங்க் https://www.vikatakavi.in/magazines/476/15879/atomic-scientist-in-his-second-innings.php )

அவரிடமிருந்து ஐந்து நாளுக்கு முன்னால் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத நவராத்திரி கொலு கொண்டாட்டம் என்ற தலைப்பிட்டு அவர்து வீட்டு கொலுவைப் பார்க்க அழைத்திருந்தார்

அதில்,

  1. கொலு பொம்மைகளில் பல 40 முதல் 50 வருடங்கள் வரை பழமை ஆனது; சில 100 வருடங்கள் பழமையான ஆனது.
  2. இயேசுநாதர் பிறப்பு பொம்மைகளும் எங்கள் கொலுவில் அடக்கம்
  3. ஒரு ஆன்மீக சூழலை உருவாக்க வேண்டி, கடவுள்களின் படங்களை தோரணமாக கட்டி உள்ளோம்; தசாவதாரம், நவகிரகங்கள், பிரதோஷம், ஆடிப் பூரம் வளையல் அலங்காரம், அன்னாபிஷேக அலங்காரம், காய்கறி பழங்களால் ஆன ஷாகம்பரி அலங்காரம், மேற்கு வங்காளம், ஒடிஷா மாநிலங்களில் துர்கா பூஜை, போன்றவை இதில் அடங்கும்
  4. பயன்படுத்திய பேப்பர், ந்யூஸ் பேப்பர்களால் செய்யப்பட்ட ஒரு மாதிரி (model) ஊர், இக்கொலுவில் இடம் பெற்றுள்ளது (மாசுபாடு இல்லாத அலங்காரத்திற்கான உந்துகோல்) (பயன்படாத பொருட்களின் அளவைக் குறை, மறுபடியும் பயன்படுத்து, மறு சுழற்சி செய் என்ற கருத்தைக் கொண்டது

போன்ற நிறைய புது முயற்சிகள் பளிச்சிட்டன.

அவருடன் பேசுகையில் இன்னும் பல விஷயங்கள் கிடைத்தன.

சுற்றுச்சூழலுக்கேத்த கொலு.. விழிப்புணர்வு கொலு….

2026916083050392.jpg

ஒரு ஆன்மீகச் சூழலை உருவாக்க, கடவுள்கள், அவதாரங்கள், நவக்கிரகங்கள் மற்றும் துர்கா பூஜை தொடர்பான புகைப்படங்களை (கழிவுத் தாள்களில் ஒட்டி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

“இவற்றைத் தமிழர்கள் மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறோம்” என்று பெருமிதமாக சொல்கிறார். பாராட்டப்படவேண்டிய விஷயம் தான் இது.

இந்திய கலாச்சாரம் குறித்த விஷயங்களை கருப்பொருளாக (theam) வைத்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கொலுப் படிகள், உலோகச் சட்டங்கள் (slotted angles) மற்றும் தகடுகளைக் (plates) கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

“கடந்த காலங்களில், காகிதத்தை மட்டுமே பயன்படுத்தி 'அணுசக்தி நகர்' (Anushaktinagar) மற்றும் 'பார்க்' (BARC) வளாகத்தின் முழுமையான மாதிரியை நான் உருவாக்கியுள்ளேன்” என்றவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்,2015-ஆம் ஆண்டு முதல், பத்லாபூர் கிழக்குப் பகுதியில் (Badlapur East) நாங்கள் நவராத்திரி கொலுவைக் கொண்டாடி வருகிறார்

இந்த ஆண்டு, 11 படிகள் (7+4) அமைக்கப்பட்டுள்ளன;

2026916083258860.jpg

அதனுடன் ஒர புதுப்பிக்கப்பட்ட நகரின் மாதிரியும் இடம்பெற்றுள்ளது. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றும் விதமாக, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக படிகளை மூடுவதற்கு நாங்கள் வெள்ளை வேட்டிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்

இந்த நகரின் மாதிரி 2019-இல் உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இது சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் வண்ணம் பூசப்பட்டு, புதிய கட்டிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

2026916083331135.jpg

பழமையான பொம்மைகள் பற்றி…

“இதில் உள்ள பொம்மைகளில் சில சென்சுரி போட்டவை, அதாவது 100 ஆண்டுகள் பழமையானவை” என்றவரிடம், எப்படி? என்றதும்,

ஒன்று, தன் பாட்டியிடமிருந்து கிடைத்தாம், மற்றொன்று, அவரைவிட 10 வயது மூத்த அவரது அலுவலக நண்பரிடமிருந்து கிடைத்தது; அவருக்கும் இது அவரது பாட்டியிடமிருந்து கிடைத்ததாகும் என்ற ஆதாரம் தந்துவிட்டார்.

இந்த கொலுவில் பல பொம்மைகள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானவை.

“எப்படி ஏசுநாதர் பிறப்பு பற்றிய பொம்மைகள் கொலுவில் இடம் பெற்றன? என்றேன்

2026916084100325.jpeg

“நான் பெங்களூரில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, இரண்டு கிறிஸ்தவப் பள்ளிகளில் பயின்றேன்.

அவற்றில் ஒன்றான 'மெத்தடிஸ்ட் மிஷன்' பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை வகுப்புகளுக்குச் சென்றபோது, ​​அங்கு பாடல்கள், பைபிள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டேன்.

தேவாலயங்களில் பாடல்களைப் பாடியும், பைபிளை வாசித்தும் வந்தேன்.

எனவே, கிறிஸ்துவைப் பற்றிய தாக்கம் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது”.

தனது மகள் பிரபா தூங்குவதற்கு முன், அவளுக்காக இந்தப் பாடல்களைப் பாடுவாராம்.

நாங்கள் எங்கள் வீட்டில் புகைப்படங்களை வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம் என்று தொடர்ந்தார்.

1990-ஆம் ஆண்டில், பாந்த்ரா மவுண்ட் மேரி சாலையில், இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் பொம்மைத் தொகுப்பை வாங்கியிருக்கிறார்கள்.

உங்களில்லத்தில் கொலு எப்போதிலிருந்து வைக்கிறீர்கள்?

பிரபாவிற்கு ஒரு வயது பூர்த்தியானபோது, ​​அவளுக்கு இந்து விழுமியங்களையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுக்கும் நோக்கில், 1988-இல் 'கொலு' வைக்கும் வழக்கத்தைத் தொடங்கினோம்.

மணமான பிரபாவும் பல ஆண்டுகளாக அமெரிக்காவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி கொலுவைக் கொண்டாடி வருகிறார். இதன் மூலம் இந்த மரபு அவளது தனது மகன் மற்றும் மகளுக்கும் சென்றடைவதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இந்த கொலுவில் மலைக்க வைத்த விஷயம் என்னவென்றால்….

இந்த கொலு அமைப்பை முழுமையாக வைத்தவர் 79 + வயது இந்த இளைஞரே.

அவரும் அவரது 68 + வயது மனைவியும் இணைந்து பொம்மைகளை பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து, சுத்தம் செய்த பின் அடுக்கியிருக்கிறார்கள். இந்தப் பணியை முழுமையாக முடிக்க இவர்களுக்கு ஒரு வாரம் தேவைப்பட்டிருக்கிறது.

2026916084352773.jpg

நவராத்திரி முடிந்தபின் உலோகச் சட்டங்கள் மற்றும் தகடுகளைக் கழற்றி, பொம்மைகளைச் சேதமடையாமல் கவனமாகப் பொதிந்து பெட்டிகளில் வைப்பது ஒரு சவாலான காரியம் தான் காத்திருக்கிறது இந்த இளைஞர்களுக்கு.

அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பூக்கள் மிகவும் பழமையானவை; அவற்றை நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம் நுணுக்கமான தகவலையும் பகிர்கிறார் வெங்கடரமணி.

சரி அவர் வீட்டு கொலுவை உலா வருவோமே. அவரது வாய்மொழியாகவே. இதோ அந்த வீடியோக்கள்.

ஐம்பதுக்குள் ஆயாசமாகிவிடுகிரார்கள் இன்றைய இளைஞர்கள். இவர்களோ இந்த வயதிலும் நம்ம பாரம்பரியத்தை விட்டுக்கொடுப்பதில்லையே. யோசிக்கவேண்டிய விஷயம்.