
“கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக, கழிவுப் பொருட்களைக் கொண்டு விநாயகர் சதுர்த்தி (5 நாட்கள்) மற்றும் நவராத்திரி (9 இரவுகள்) பண்டிகைகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்காரங்களை நான் செய்து வருகிறேன் என்று ஆரம்பிக்கிறார் நமக்குப் பரிச்சயமான 79 வயது மட்டுமே நிறம்பிய நெவர் கிவ் அப் என்று மய்யப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையின் (https://www.vikatakavi.in/magazines/476/15879/atomic-scientist-in-his-second-innings.php) ஹீரோ, பாபா அடாமிக் ரிசர்ச் மய்யத்தின் அணு விஞ்ஞானியும், இன்னாள் கர்நாடக இசையில் திருப்புகழ் பரப்பும் திருப்பணியென்ன? ரேக்கி மாஸ்டராகவும், பயிற்சி பெற்ற யோகா மாஸ்டராகவும் அந்த துறையில் பிறரை ஈடுபடுத்துவதோடல்லாமல், புதிய பயிற்சியாளர்களை உருவாகுவதென்ன என பன்முகக் கலைஞருமான டாக்டர் வெங்கடரமணி.
அவரே தொடர்கிறார்…..
“இதில் ஒரு பக்கம் அல்லது இரு பக்கமும் எழுதப்பட்ட காகிதங்கள், செய்தித்தாள்கள், பழைய காலெண்டர்கள், தண்ணீர் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட தேநீர்/காபி/தண்ணீர் காகிதக் கோப்பைகள், பாட்டில் மற்றும் டூத்பேஸ்ட் மூடிகள், பயன்படுத்தப்பட்ட உலோகக் கம்பிகள், பரிசுப் பொட்டலத் தாள்கள், ரேஸர் பிளேடுகள், மாலைக்கான மணிகள், அட்டைப் பெட்டிகள் போன்றவை அடங்கும்”.
“மேலும், பயன்படுத்தப்படாத ஸ்டூல்கள் மற்றும் பலகைகள் போன்றவற்றையும் நான் பயன்படுத்துகிறேன்”.
அப்ப இந்த வருஷத்துக்கு என்ன ஸ்பெஷல்? என்ற போது,
“இந்த ஆண்டு, ஒரு குளத்திற்குள் அன்னப் பறவையின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இதன் அடிப்பகுதி (base), 2-3 வயதுடைய குழந்தைகள் பயன்படுத்திய, தற்போது பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் ஸ்டூல் ஆகும்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அலங்காரத்தை முழுமையாக முடிக்க வேண்டிய மொத்த வேலையில் 60% நிறைவடைந்ததை இந்தப் புகைப்படம் காட்டுகிறது” என்று அதனைக் காட்டுகிறார்.

எங்கள் விநாயகர் சிலையும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததே; ஏனெனில் அது உலோகத்தால் செய்யப்பட்டது என்று பெருமிதப்படுகிறார். (படம் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது]
விசர்ஜனத்தின்(கரைத்தல்) போது ஒரு வாளி நீரில் கரைக்கப்பட்டு (அல்லது மூழ்கடிக்கப்பட்டு), பின்னர் துடைத்து உலர்த்தி, அடுத்த ஆண்டு மீண்டும் பயன்படுத்துவதற்காக உள்ளே வைக்கப்படும்.
2016 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' (ஆங்கிலம்) மற்றும் 'யஷோபூமி' (இந்தி) ஆகியவை நடத்திய திறந்தவெளிப் போட்டிகளில் (மும்பை அளவில்) நான் முதல் பரிசை வென்றுள்ளேன் என்று பூரிப்புடன் சில்கிறார்.
மேலும், பத்லாபூர் அளவில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் முதல் பரிசு மற்றும் இரண்டு ஆறுதல் பரிசுகளை இது வரை பெற்றுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களால் எந்தப் பண்டிகையையும் கொண்டாட முடியவில்லை என்று சொன்னவர், அந்த இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு (2026) மீண்டும் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தொடங்குகிறோம் என்று கூறினார்.
2023-ல், கழிவுப் பொருட்களைக் கொண்டு 4 அடி உயரமுள்ள யானை உருவத்தை உருவாக்கியதற்காக,அந்த யானை அலங்காரத்திற்காக 2023-ல் மும்பை மற்றும் பத்லாபூர் ஆகிய இரு நிலைகளிலும் பரிசுகள் கிடைத்தனவாம்.
விநாயகரைச் சுமந்து செல்லத் தயாராக இருக்கும் இந்த அன்னப் பறவை அலங்காரம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் என மீண்டும் காட்டுகிறார்.
இது போல நீங்களும் பண்ணலாமே எனத் தூண்டுகிறார் தூய்மையான சுற்றுச் சூழல் விரும்பி.

[வெங்கடரமணி தம்பதியருடன்]
14 செப்டம்பர் விநாயக சதுர்த்தி வருதே… நாமும் இதே மாதிரி தயாராகலாமே!!!!!

Leave a comment
Upload