
கோவிலுக்குள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்தை சுற்றி ஏராள விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இது சரி தவறு என்ற நோக்கத்தில் விவாதங்கள் ஒரு புறம் இருக்க......
ரீல்ஸ் போடும் மக்களும், கூட்டத்தில் லைவ் காட்டும் பக்தர்களும் ஒரு புறம் தொல்லை கொடுத்தாலும், கைப்பேசி என்பது அத்தியாவசியமானது என்பதி எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் செருப்பு வைப்பது போல கவுண்டர்கள் வைத்து கைப்பேசி பாதுகாப்பதில் பல அசெளகரியங்கள் இருக்கிறது.
ஏற்கனவே கூட்டத்தை கட்டுப் படுத்தும் சிரமத்தில் இது வேறு என்று நொந்து கொள்ளும் நிலையில் பக்தர்கள்.
ஆன்மீக காரணங்கள், அமைதி, சாந்நியத்தியம், தெய்வீகம் எல்லாவற்றையும் மீறி இது ஒரு தேவையில்லாத ஆணி என்பது தான் பலரது எண்ணம்.
இன்னொரு கோணத்தில் தானியங்கி கைப்பேசி பெட்டகங்கள் வைத்திருந்து அதையும் இலவசமாக இருந்திருந்தால் ஒரு வேளை இத்தனை எதிர்ப்பு இருந்திருக்காதோ என்றும் தோன்றுகிறது.
இந்து மதம் கொடுக்கும் அதீத சுதந்திரத்தால் மட்டுமே இந்த கோவில் கைப்பேசி அலப்பறைகள் இருக்கிறதோ என்றும் ஒரு புறம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியோ அவசர கோலத்தில் முடிவெடுத்து ஜகா வாங்கும் த வெ க திட்டங்களைப் போல் இதுவும் திரும்பப் பெறப்படும் என்றே பேசிக் கொள்கிறார்கள்.

Leave a comment
Upload