தொடர்கள்
கொடுரம்
புலியை பிடிக்க -ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மூன்று மாநிலங்கள் சங்கமிக்கும் நகரம் .
இந்த நகரம் முழுவதும் வனத்தால் சூழப்பட்ட பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தும் மூன்று மாநில வாசிகள் இங்கு செட்டிலாகியிருக்கிறார்கள் . அதில் மிக அதிகமாக கேரளவாசிகள் இங்கு செட்டிலாகி நீலகிரி வாசிகளாக வாழ்ந்துவருவது வித்தியாசமான ஓன்று .

20260803132027758.jpeg
வனம் சூழப்பட்டாலும் காபி ,தேயிலை மற்றும் அரிசி வாழை விவசாயத்தை செய்து வருகின்றனர் .
தேயிலை ,காபி எஸ்டேட்டுகளில் இலங்கை அகதிகள் செட்டில் ஆகியுள்ளனர் .
கூடலூர் ஒரு குட்டி கேரளவாக தான் திகழ்கிறது . இந்த பகுதி முழுவதும் காடுகள் சூழப்பட்டதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது இயல்பு .
காட்டு யானைகளின் விசிட் என்பது சர்வசாதாரணமாக உள்ளது அதனுடன் இங்கு வாழும் மக்கள் போரடிவருவது ஒரு தொடர் கதை .
என்னதான் வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விராட்டினாலும் மீண்டும் கூலாக அவை ஊருக்குள் வந்துவிடுவது சகஜமாக நடந்துவருகிறது .
சிறுத்தை , புலி , கரடி என்று விசிட்டர்கள் கூடலூர் பகுதியில் முக்கியமாக ரப்பர் மற்றும் தேயிலை எஸ்டேட்டுகளினுள் சர்வசாதாரணமாக வந்து போவது தொடர் கதை .
ஏற்கனவே யானை தாக்கி தோட்ட தொழிலாளர்கள் இறந்து போன சோக நிகழ்வுகள் நடந்துள்ளன . வனவிலங்கு மனித மோதல் இந்த பகுதியில் தொடர்கிறது அதை தடுக்க இப் பகுதி மக்கள் போராடிவருவதும் சகஜமாக உள்ளது .
கடந்த மாதம் இரு மனித உயிர்கள் புலிக்கு இறையாகியுள்ளனர் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன .
பத்து வயது மதிக்க தக்க புலி தான் இந்த இரு அப்பாவிகளை கொன்றுள்ளது .

20260803132928762.jpeg
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கூடலூர் ஓவேலி பகுதியில் உள்ள லாரிஸ்டன் எஸ்டேட் பில்ட் 4 பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற 58 வயது தோட்ட தொழிலாளி தான் தோட்டத்திற்கு தண்ணீர் உற்ற வீட்டின் அருகில் இருந்த ஓடையில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பொழுது புலி தாக்கப்பட்டு இறந்துபோனார் .கூடலூர் வாசிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் .
வனத்துறையினர் ட்ரோன் மூலம் புலியை தேடும் படலத்தை துவக்கி புலி தென்பட்டதாக தெரியவில்லை .
இந்த புலி கிலியில் இருந்து மீளமுடியாமல் இருக்க அதற்குள் 21 ஆம் தேதி அதே பகுதியில் 51 வயது ரவிக்குமாரை புலி பிடித்து போய் கொன்று பாதி உடலை காணவில்லை என்பது ஷாக்கான விஷயம் .

20260803133052287.jpeg
இந்த தகவல் பரவ கூடலூர் முழுவதும் மக்கள் கொதித்து போய்விட்டனர். உள்ளூர் வாசிகள் மிக பெரிய போராட்டத்தில் வனத்துறைக்கு எதிராக இறங்க சட்டமன்றத்தில் தொகுதி எம் எல் ஏ திரவிடாமணி குரல் எழுப்ப உரிய நடவடிக்கை வனத்துறையால் எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் கூறினார் .
உடனே முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின் பேரில் நான்கு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது .கொடூரம் நடந்த பகுதியை சுற்றி நான்கு கூண்டுகள் அமைக்கப்பட்டு புலியை பிடிக்கும் படலம் தொடர்ந்தது .
வன துறை ஆட்கொல்லி புலியை பிடித்த பாடில்லை என்று போராட்டத்தில் குதித்தனர் .இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்தது போலீஸ் .

20260803133233315.jpeg
இதை எதிர்த்து அனைத்து கட்சிகள் மற்றும் வணிகர் சங்கம் இணைந்து கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். புலியை பிடிக்க அல்லது கொல்ல வேண்டும் என்று கூடலூர் மக்களும் இணைந்து 48 மணிநேர பந்த் அறிவித்து கூடலூர் முழுவதும் கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதி முழு பந்த் நடைபெற்றது . அனைத்து கடைகள் போக்குவரத்து பெட்ரோல் பங்க் மூடப்பட்டிருந்தது . மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராடினார்கள்

. 20260803140404636.jpg
அதிர்ந்து போன வனத்துறை புலியை பிடித்தே ஆகவேண்டும் என்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர் .தேனீ ,மதுரை ,கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்ச்சி பெற்ற வன ப்பணியாளர்கள் துல்லியமாக சுடும் துப்பாக்கியை கையாளும் நிபுணர்கள் புலிக்கு மயக்க ஊசி செலுத்தும் கால்நடை மருத்துவர்கள் குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தற்போது 200 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமெராக்கள் 5 ஜி எஸ் எம்.கேமெராக்கள் ட்ரான் கேமெராக்கள் கண்காணிப்பில் உள்ளன .
13 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன சில்வர் கிளவுட் ,தெய்வமலை, ஏழுமுறம்,தொரப்பள்ளி , காபி மற்றும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது .
அதே சமயம் புலி கிடைத்த பாடில்லை. வழக்கமாக புலி ஒரு நாளைக்கு
30 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி தெரியுமாம் அப்படியிருக்கு அவ்வளவு ஈசியாக பிடிக்க முடியாது என்கிறார் ஒரு கால் நடை மருத்துவர்
புலி மிகவும் கூலாக நடந்து செல்லும் மிருகம் அதே கூலாக வந்து கூண்டில் சிக்கினால் தான் பிடிபடும் . அதனுடைய இடம் ஓர் அளவுக்கு ஊர்ஜிதப்படுத்தினால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கலாம் என்கிறார் ஒரு வனத்துறை நபர் .
ஆட்கொல்லி புலியாக மாறிவிட்டால் மனிதர் இருக்கும் இடத்திற்கு காட்டாயம் வருமாம் அப்படி இந்த புலியும் தானாக வந்து கூண்டில் சிக்கினால் தான் கூடலூர் வாசிகள் நிம்மதியாக தூங்குவார்கள் .
லாரிஸ்டன் எஸ்டேட் பள்ளி மாணவர்களை கடந்த ஒருவாரமாக வனத்துறையினர் அவர்களின் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர் .
நாம் கூடலூர் தி மு கா பிரமுகர் பாண்டியார்ஜிடம் பேசினோம் ,
" எங்க கூடலூர் பகுதியில் புலி தாக்குவது , யானை தாக்குவது என்பது ஒரு தொடர் கதை .மனித மிருக மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . தற்போது ஒரு புலி இரண்டு உயிர்களை பறித்து சென்றுள்ளது வனத்துறை தக்க நடவடிக்கை எடுத்து அந்த புலியை பிடித்தே ஆகா வேண்டும் . இந்த அப்பாவி உயிர்கள் பறிபோக கூடலூரே கொதித்து எழுந்துவிட்டோம் அனைத்து கட்சி வியாபாரிகள் ஓன்று சேர்ந்து தான் 48 மணிநேர பந்த் நடத்தினோம் .நம்ம எம் பி ராசா நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உதவி ஆறுதல் தெரிவித்து சென்றார் .
அந்த ஆட்கொல்லி புலியை உயிருடன் அல்லது கொல்ல வேண்டும் .
எங்க போராட்டத்திற்கு பெற்றோர்கள் முழு ஆதரவு கொடுத்து இரண்டு நாள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பவில்லை .
சில வருடங்களுக்கு முன் பந்தலூரில் மகாலக்ஷ்மி என்ற பெண்ணை புலி கொன்றது அப்பொழுதும் போராடினோம் .மீண்டும் புலியால் அசம்பாவிதம் நடந்தால் கூடலூர் வாசிகள் கொதித்து எழுந்துவிடுவார்கள். முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் டோக்ரா இங்கு வந்து ஜஸ்ட் ஆய்வு நடத்தி விட்டு சென்று விட்டார் .போராடும் எங்களை பார்க்கவேயில்லை விமானத்திற்கு நேரமாகிவிட்டது என்று சென்று விட்டார் .

தற்போது புலியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் வன துறையினர் இறங்கியுள்ளனர் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அந்த புலியை கொன்றால் தான் இங்கு மக்கள் நிம்மதி அடைவார்கள் "என்கிறார் .

முதுமலையில் இருந்து புலியை பிடிக்க இரண்டு கும்கி யானைகள் பொம்மன் மற்றும் உதயன் தற்போது தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன .

20260803141344543.jpeg
புலியின் கிலியில் இருந்து கூடலூர் வாசிகள் இன்னும் மீளவில்லை .
இன்னும் புலிவருது பயம் இருந்து கொண்டே இருக்கிறது .