
நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தின் சியாப்ருபேசிப் பகுதியில் உயிர் தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பூனை முனகும் சத்தம் கேட்டது மனிதாபிமானத்துடன் இந்த பூனையை காப்பாற்றலாம் என்று அவர்கள் போன போது அங்கு இருந்தது பூனை அல்ல ஒரு சிறுமி. அந்த சிறுமியின் பெயர் மனீஷா என்கிறார்கள்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்த சிறுமியை இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டு, அவரை பத்திரமாக கொண்டு செல்ல ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக உடனே அந்த சிறுமி அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து மீட்பு குழுவினர் சிறுமியை தங்கள் மீட்பு முகாமுக்கு கொண்டு சென்று தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த சிறுமிக்கு நினைவு திரும்பியது. அவருக்கு வேகவைத்த அரிசி நீரை உணவாக கொடுத்து அவரைக் கொஞ்சம் தேற்றினார்கள் .ஆனாலும் அந்த பாதிப்பில் இருந்து அந்த சிறுமி மீளவில்லை. சனிக்கிழமை பிற்பகல் அவர் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். உரிய சிகிச்சைக்கு பிறகு மனிஷா குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

Leave a comment
Upload