தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ருக்மணி வசந்த்

20260803163749245.jpg

சூர்யாவுடன் இணைந்து சிலிர்க்க வைக்கும் ஒரு காதல் கதையில் நடிக்க ஆசைப்படுகிறார் ருக்மணி வசந்த்.

பூர்ணா

20260804165857953.jpg

ஜெயிலர் 2 படத்தில் 'அல்ல போலலே பாடலுக்கு ஆடி இருக்கிறார் பூர்ணா. பாடலைப் பார்த்தவர்கள் அவர் நடனம் சூப்பர் என்று பாராட்டுவதால் குஷியாகி இருக்கிறார் நடிகை.

அதிதி

20260804165653924.jpg

காதலால் தான்பட்ட அவஸ்தைகளை வெளிப்படுத்திய அனுபமாவிற்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் நடிகை அதிதி. "பல பெண்களும் ஆண்களும் இதே விஷயத்தை எதிர் கொண்டு வருகிறார்கள். ஆனால், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது" என்கிறார் நடிகை.

சைத்ரா ஆச்சர்

20260804170157488.jpg

சைத்ரா ஆச்சர் சேலையுடன் படு கவர்ச்சியான, லோ நெக் ப்ளவுஸ் அணிந்து விதவிதமான போஸ்க்களில் படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திணற அடித்திருக்கிறார். இதனால் இணையத்தில் சூடு பறக்கிறது.

சர்தார் 2

20260804170357900.jpg

கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா ,மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு ஆகியோர் நடித்த சர்தார் 2 இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ்

நடிகர் நானியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் தி பேரடைஸ் என்ற தெலுங்கு படத்தில் குத்தாட்டம் போட்டு உள்ளார். பாடல் வெளியான 2 மணி நேரத்தில் 1.6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

அமலா ஷாஜி

20260804165402502.jpg

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி .இவருக்கு 4.2 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். .தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் விக்ரம் பிரபுவின் 26-வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அமலா ஷாஜி. .விக்ரம் பிரபுக்கு ஜோடியாக இந்த படத்தில் சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.

காயடுலோஹர்

20260803163937389.jpg

விமான பயணத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பு காயடுலோஹருக்கு கிடைத்தது. அந்தப் படத்தை தனது இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து உள்ளார் நடிகை. "நான் இன்னும் கனவுலகத்தில் இருந்து மீளவில்லை. மிகப்பெரிய ரசிகையாக இருந்து எப்படியோ ஒரு விமானத்தில் ரஜினிகாந்த் சாருக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது. நான் கனவுலகுக்கு போய் விட்டேன்" என்கிறார் நடிகை.

ஜெயிலர்- 2

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் -2 அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று படப்பிடிப்புக்குழு அறிவித்திருக்கிறது.

நயன்தாரா

20260804163817781.jpg

இந்த ஓணத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யானைத் தந்தம் நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். அனுவர்த்தன் என்ற பேஷன் டிசைனரால் உருவாக்கப்பட்ட இந்த சேலை தங்க நிறத்தில் பார்டரைக் கொண்டு இருந்தது.

கீர்த்தி ஷெட்டி

20260804164616841.jpg

கீர்த்தி ஷெட்டியின் ஓணம் ஸ்பெஷல் உடையில் ஆடையை விட நகைகள் தாராளமாக இருப்பது போல் தெரிவதாக அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் பலரும் பதிவிட்டு இருந்தனர்.

மமீதா பைஜூ

2026080316420112.jpg

மலையாளத்தில் 'பெத்லகேம் குடும்ப யூனிட் ',தமிழில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் 'என ஒரே நேரத்தில் இரண்டு ஹிட்களை கொடுத்துள்ளார் மமீதா பைஜூ. அதனால் அவருக்கு இந்த ஓணம் ஸ்பெஷல். ஆனாலும் ரொம்ப சிம்பிளாக கட்டம் போட்ட கசவு சேலை, அதற்கு ஜோடியாக கண்ணாடி வளையல் என்று சிம்பிளாக ஓணம் பண்டிகை கொண்டாடியிருக்கிறார்.

நவ்யா நாயர்

20260804163943654.jpg

இளம் நடிகைகள் அனைவரும் புடவையில் ஓணம் படங்களை பதிவிட மூத்த நடிகையான நவ்யா நாயர் ஒரு மாற்றத்திற்காக சுடிதார் அணிந்து ஓணத்தை கொண்டாடி இருக்கிறார்.