தொடர்கள்
அழகு
கணபதி Vs கண்ணன் - மோகன் ஜி, ஓவியம்: தேவா

ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். ஆவணியில் இருவரின் கொண்டாட்டங்களும்.

20260804134827272.jpeg

கணபதி Vs கண்ணன்

கொழக்கட்டை ஸாஃப்ட்டு-

சீடையோ வெரி ஹார்டு

எலிவாகனம் மாயைக்கு மருந்து-

கலிநாசனம் கிருஷ்ண பருந்து

தண் தொந்திக்குள்ளே மூவுலகம்-

மண் வாய்திறந்தோ பூதரிசனம்

சத்ய பிரம்மச்சாரி-

நித்ய பிரம்மச்சாரி

ஆல மரத்தடி வாசி-

நீல களேபர நேசி

பாரதம் எழுதலாச்சு-

பரமகீதை சொல்லியாச்சு

நெளியும் நாக யக்ஞோப வீதினம்-

காளிங்க நாக மேறியே நர்த்தனம்

விஷ்ணு சக்கரம் விழுங்கிய பாலன்

விஷமத் திருட்டு வெண்ணை வாயன்

அருகம்புல் நேசன்-

அருந்துளசி வாசன்

தோப்புக்கரணம் ரசிப்பான்-கை

கூப்பித் தொழவே வருவான்

கணபதியும் கண்ணனும் ஒன்று

கணமேனும் மறவாமை நன்று