வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்னை மரியாளின் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மிக முக்கியமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருவது மிக சிறப்பான ஒன்று.

தென்னகத்தின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது வேளாங்கண்ணி .
உலகத்தில் இருந்து வரும் அனைத்து பக்தர்களும் நம்பிக்கையுடன் சந்திப்பது அன்னை மரியாளின் அற்புத சுரூபத்தை தான் . இந்த சுரூபம் மரத்தால் வடிவமைக்க பட்டது .அன்னைக்கு தங்கத்தால் இழையப்பட்ட பட்டு தங்க நிற புடவை தான் அணிவிக்க படுகிறது .

குழந்தை ஏசுவையும் அதே தங்க புடவை தான் அரவணைத்துள்ளது .அந்த புடவையை யார் அன்பளிப்பாக அன்னைக்கு கொடுக்கிறார்களோ அவரின் பெயர் பதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று பதிக்கப்பட்டுள்ளது .
தங்க நகைகள் அணிந்து காட்சியளிக்கம் அன்னையின் முகத்தை பார்த்து வேண்டுதல்களை உருக்கமாக ஏறெடுக்கிறார்கள் பக்தர்கள் .
16 ஆம் நூற்றாண்டில் அன்னை மரியாள் காட்சி கொடுத்து சப்பாணி சிறுவனை குணப்படுத்தியது.
பால் கார சிறுவனுக்கு காட்சி கொடுத்தது மற்றும் போர்த்துகீசிய மாலுமிகளை பயங்கர புயல் வெள்ளத்தில் இருந்து அன்னை காப்பாற்றினார்.
அதன் பின் உருவான அற்புத ஆலயம் ஆரோக்கிய அன்னையின் ஆசீருடன் தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதை நேரில் உணர்ந்து வருகின்றனர்.
இந்த வருடம் 454 வது ஆண்டு விழாவை இந்த பேராலயம் சிறப்பிக்கிறது என்று சொன்னாலும் அதை சரியாக ஊர்ஜிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்இங்கு பணிபுரியும் குருக்கள்.
பழம்பெரும் பேராலயமாக இருந்தாலும் வேளாங்கண்ணி ஆலயம் இன்றுவரை புதுமையாக தான் காட்சியளிக்கிறது என்று கூறுகிறார்கள் இங்கு விஜயம் செய்யும் பக்த கோடிகள்.
இந்த வருடம் வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னை வீற்றிருக்கும் முக்கிய ஆலயம் புதுப்பிக்க பட்டிருப்பது மிக சிறப்பான ஒன்று.

அன்னையின் நடு பீடம் மற்றும் ஆலயம் முழுவதும் புது ராஜஸ்தான் மார்பிள்களால் பொருத்த பட்டு புதுமை அடைந்துள்ளது.
16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் அன்னை மோர் சிறுவனுக்கும் , ஒரு சப்பாணி சிறுவனுக்கு காட்சி கொடுத்து நாகை செல்வந்தரின் மூலமாக ஓலை வேயப்பட்ட சிற்றாலயம் கட்டப்பட்டு அங்கு சிறுவன் பார்த்த அன்னை மரியாளின் உருவத்தை மரத்தால் இந்த செல்வந்தர் உருவாக்கவைத்து இந்திய பாணியில் தங்க வர்ணத்தில் புடவை கட்டப்பட்ட சுருப்பதை இந்த சிற்றாலயத்தில் வைத்து வழிபட்டார் மற்ற கிராம மக்களும் தினமும் வந்து வழிபட துவங்கியுள்ளனர் .
பின் போர்த்துகிசிய மாலுமிகள் புயலில் சிக்கி தவித்த பொழுது நம்பிக்கையுடன் அன்னையிடம் மன்றாடிய பொழுது புயல் நின்று வேளாங்கண்ணி கிராமத்து கடற் கரைக்கு வந்து சேர்ந்த போது அந்த நாள் செப்டம்பர் 8 ஆம் தேதி மாதாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலுமிகள் ஆலயத்தை புதுப்பித்து பீடத்தில் ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை பீங்கான் டைல்ஸ் மூலம் அலங்கரித்துள்ளனர்.
1920 ஆம் வருடத்தில் ஆலயத்தின் கிழக்கு பகுதி விரிவாக்க பட்டது.
1928 முதல் 1933 வரை பேராலயத்தின் இரண்டு இறக்கை பகுதிகள் கட்டப்பட்டு சிலுவை தோற்றத்திற்கு மாறியது.
1974 - 1975 ஆம் வருடங்களில் பேராலயயத்தின் பின் புறம் இரண்டு அடுக்கு பேராலயமாக உருவெடுத்து தொடர் திருப்பலிகள் பல மொழிகளில் கொண்டாடப்பட்டு அதிக பக்தர்களை அரவணைத்து அருள் மழையை பொழிந்துவருகிறார் அன்னை !.
1981 ஆம் ஆண்டு பேராலய ஓட்டு கூரை முழுவதும் கான்க்ரீட் கூரையாக புதுப்பிக்கப்பட்டது.
2015 மற்றும் 2016 ஆம் வருடம் பேராலய சுவர் முழுவதும் கொத்தப்பட்டு புதிய பிளாஸ்டரிங் சுண்ணாம்புக் காரை மற்றும் மாசிக்காய் கலவை கொண்டு முழுவதும் பூசப்பட்டு புதுப்பிக்க பட்டுள்ளது.
பேராலயத்தை கடல் ஈர காற்றில் இருந்த பாதுகாக்கும் புதிய பிளாஸ்டரிங் முறையில் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த பணியை செய்தவர் மைசூரை சேர்ந்த கட்டிட கலைஞர் குண்டுராவ்.
அதன் பின் இந்த வருடம் பேராலய பீடம் ஆலயம் முழுவதும் ராஜஸ்தான் மார்பிள் பொருத்தப்பட்டு நவீன பெயின்டிங் பூசப்பட்டு புதுப்பிக்க பட்டு கடந்த மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்று கிழமை புனித படுத்த பட்டது.

இந்த மார்பில் பணியை செய்தவர் கோவையை சேர்ந்த அதிசயா கன்ஸ்ட்ரக்ஷன் அவருக்கு அன்னை மிக பெரிய புதுமையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
அன்னை மரியாள் மோர் கொடுத்த சிறுவனுக்கு காட்சி கொடுத்த குளம் இன்னும் நீர் உற்றுடன் இருக்கிறது அதில் இருந்து தான் புனித நீர் வழங்கப்பட்டுவருகிறது .தற்போது அந்த குளம் பெரிய டேங்க் போல கட்டப்பட்டு பெரிய கண்ணாடி குளம் முழுவதும் பொருத்தப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அந்த குளத்தையும் தஞ்சை ஆயர் சகாயராஜ் புனிதப்படுத்தியுள்ளார் .

வருடந்தோறும் பக்தர்களின் வருகை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முதியோர் முதல் சிறு குழந்தை வரை ஆரோக்கிய அன்னையை காண வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமில்லாமல் இந்து, முஸ்லீம் மற்றும் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களும் நம்பிகையுடன் அதிகம் விஜயம் செய்யும் மாதா கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிழாவை முன்னிட்டு வேளை நகர் பளிச் என்று இருப்பது மிக சிறப்பான ஒன்று.
அதே சமயம் கடற்கரை, பஸ் நிலையம் பகுதியில் குப்பை கழிவுகள் இருக்கத்தான் செய்கிறது.
ஹோட்டல்கள், உணவு விடுதிகளின் உணவு தரமானதா என்றால் ஒரு கேள்வி குறி தான் ?.

வேளாங்கண்ணிக்கு உரித்தான சாலையோர காலை உணவு கையேந்திபவன்களில் சூடான புட்டு, ஆப்பம், இட்டிலி,வடை, தோசை என்று தினமும் களைகட்டிவருகிறது அது தரமானதா என்பதை எவரும் கண்டுகொள்வதில்லை.

சிற்றுண்டி சாலைகளில் காலையில் பூரி மசால் ரெடியாக இருக்க பூரி சாலை ஓரத்தில் கண்காட்சியாக குவித்து வைக்கப்பட்டு அதன் மேல் வாகன புகை தூசிகள் படர்ந்த வண்ணம் இருக்கிறது .

அதே போல கடற்கரை ஓரத்தில் புரோட்டா சர்க்கஸ் ஸ்டைலில் பறந்து சென்று ரெடியாகி பக்தர்களை ருசி பார்க்க வைக்கிறது.
இதையெல்லாம் உற்று கவனிக்கிறதா இங்கு இயங்கும் சிறப்பு பேரூராட்சி அலுவலகம் என்பது முக பெரிய கேள்வி குறி ?.
வேளை நகரை சுற்றி ஏகப்பட்ட விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள் பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப வாடகை எகிறுவதை கண்டு கொள்ள எவரும் இல்லை.
பேராலய பயணிகள் விடுதியின் பராமரிப்பு சற்று வருத்தமளிக்க செய்கிறது .
அன்னை மரியாளின் ஆசீர் பெற பக்தர்களின் வருகை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முதியோர் முதல் சிறு குழந்தைகள் வரை ஆரோக்கிய அன்னையை காண வந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழா நாட்களான இந்த நாட்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து பக்தர்களின் கூட்டம் தினமும் அதிகமாகி கொண்டேயிருக்கிறது.

கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் அன்னையின் பிறப்பு விழா கொண்டாட்டம் ஆரம்பமானது .மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியேற்றி பத்து நாள் விழாவை துவக்கி வைத்தார் ஆலயம் முழுவதும் மின் ஒளி அலங்காரத்தால் ஜொலிக்கிறது .

இந்த துவக்க விழாவில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பாதயாத்திரையாக வந்து கலந்து கொண்டார் .
தினமு ஒன்பது நாட்களுக்கு பகல் 12 மணிக்கு ஜெபமாலை வழிபாட்டுடன் தினமும் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
."அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே " என்ற பாரம்பரிய பாடல் கோவிந்தனின் குரலில் ஒலித்து கொண்டேயிருக்கிறது தினமும் இந்த நிகழ்வை காண ஆயிரம் கணக்கில் பக்தர்கள் குழுமி நிற்கின்றனர் .

அதே போல தினமும் மாலை நவநாள் திருப்பலி மறையுரை நற்கருணை ஆசிருக்கு பின் தேர்பவனி இரவு 8 மணிமுதல் 9 மணிவரை நடைபெறுகிறது .இதில் புனித மைக்கேல் சம்மனசு,புனித செபாஸ்டின் ,புனித அந்தோனியார் ,புனித ஜோசப் தொடர்ந்து அன்னை மரியாளின் சுரூபம் தாங்கிய தேர் பவனியாக செல்கிறது .

அனைத்து சப்பரங்களும் பெண்கள் ஆண்கள் என்று தோளில் தாங்கி வருகின்றனர் . அன்னை மரியாளின் சப்பரத்தை 100 பேர் தாங்கி சுமந்து வருவது ஆச்சிரியமான ஓன்று .
நாம் பேராலய அதிபர் அருட்தந்தை இருதயராஜை சந்தித்து பேசினோம்,

" அன்னை வேளாங்கண்ணி மாதாவின் திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது .தமிழக அரசு ,மற்றும் மாவட்ட நிர்வாகம் காவல் துறை மற்ற அனைத்து துறைகளும் மிக சிறப்பாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளன .
பக்தர்கள் வந்து போக தென்னக ரயில்வே மிக சிறப்பாக ரயில்களை நேரடியாக வேளை நகருக்கு இயக்குவது மிக சிறப்பு.
பேருந்து போக்குவரத்தும் அருமை . பேராலய வளாகம் மிக சுத்தமாக பாராமரிக்க படுகிறது .பேராலயம் ஒரே நபரால் ராஜஸ்தான் பளிங் கற்களால் புதுப்பிக்க பட்டுள்ளது . மாத குளம் அனைவரும் பார்க்கும் வகையில் பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது .
கொடியேற்றம் 29 ஆம் தேதி மாலை துவங்கியது தினமும் பகல் 12 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு வருகிறது .
உபயதாரர்கள் அன்பளிப்பாக வழங்கும் கொடிகள் ஒன்பது நாட்கள் ஏற்றப்படும் .
7 ஆம் தேதி 12 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு
மூன்று முறை ஏற்றி இறக்கி ஏற்றுவது வழக்கம் இது உலகத்தில் எங்குமே நடப்பது இல்லை என்பது அதிசயமான ஒன்று.

மேலும் பத்து மொழிகளில் ஜெபமாலை ஜெபிக்கப்படுகிறது .
பல புதுமைகள் அன்னை நடத்தி வருகிறார் ஆரோக்கிய தாய் உடல் சுகம் ,மனசுகம் அன்னை வழங்கிவருகிறார்கள் .சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் இருந்து ஒரு இந்து மத தம்பதி இங்கு வந்து வெள்ளி தொட்டில் வழங்கி நன்றி செலுத்தினார்கள் .இந்த தம்பதிக்கு 33 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வேளாங்கண்ணி மாதவிடம் நம்பிக்கைவைத்து உருக்கமாக ஜெபித்து அன்னையின் ஆசீர் பெற்று குழந்தை பிறந்துள்ளது என்ற ஆச்சிரியம் மெய்சிலிர்க்க வைக்கிறது . இந்த ஆண்டு மிக சிறப்பாக மாதாவின் பிறந்த நாள் நடைபெறுகிறது .மற்ற ஒரு தகவல் அடுத்த வருடம் தஞ்சை மறைமாவட்டத்தின் 75 வது ஜூபிலி சிறப்பிக்க படுகிறது அதனால் இந்திய ஆயர் பேரவை ஜனவரி 17 முதல் 25 ஆம் தேதி வரை இங்கு நடைபெறுவது மிக சிறப்பான ஒன்று " என்று கூறினார் .

வேளாங்கண்ணி நகருக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பேராலய வளாகத்தை சுற்றி வர பெரியோர்,முதியோர் வசதிக்காக பேட்டரி கார்கள் இயங்குகிறது கடந்த ஜூன் மாதம் இங்கு வந்த நம் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே .டி.பிரபாகர் பேராலயத்திற்கு நேரில் இந்த பேட்டரி கார்களை பேராலயத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
லட்சக்கணக்கில் பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள் .7 ஆம் தேதி திருவிழா பெரிய தேர் பவனி மாலை நடைபெறும் பக்தர்களின் வெள்ளத்தில் அன்னை பவனியாக வருவார் .

8 ஆம் தேதி அன்னை மரியாளின் பிறந்தநாள் சிறப்பிக்கப்படும் .
மத்திய ,மாநில அரசுகள் அந்த நாள் அரசு விடுமுறையை அடுத்த வருடம் முதல் அறிவித்தால் பக்கதர்களுக்கு மிக உதவியாகவும் இருக்கும் அன்னை மரியாளுக்கு அரசு பிறந்த நாள் பரிசாக அதை செய்தால் இன்னும் சிறப்பு சேரும் என்கின்றனர் பக்தர்கள் .
பக்தர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அன்னை மரியாள் வேளை நகரில் வீற்றிருக்கிறார் எந்நாளும் !.

Leave a comment
Upload