தொடர்கள்
கதை
வளர்ப்பா....வார்ப்பா  – பா.அய்யாசாமி 

2026080509212307.jpeg


என்னங்க நீங்க உட்கார்ந்து பேப்பர் படிக்கிறதினாலே நாட்டுப் பிரச்சனைகள் குறையப் போகுதா ? இல்லை, வீட்டு வேலையெல்லாம் தானாகவே நடந்திடுமா? எப்பப்பாரு டிவியிலேயும் மொபைல்லேயும் அரசியல் பற்றிய பேச்சுத்தான், பேப்பரைத்திறந்தாலும் அதேதான் என அலுத்துக்கொண்டாள் சாராதா,

இன்றைக்கு அதுதானே தீவிரமாக நடக்குது. அதனாலே அதில் ஒரு ஆர்வம் கவலைஉனக்கு என்ன ? ஒரு கவலையும் இல்லை, வீட்டு வேலைகளைத் தவிர என்றுபடபடவென்று பேசினான் சங்கர் .

வீட்டில் கொஞ்சமாச்சம் ஒத்தாசையாக இருந்தால் என்ன? எனக்கு இன்றைக்குஉடம்புக்கு முடியலை, அத்தைதான் சமைக்கப் போறாங்க, கொஞ்சம் அடுப்படியிலேகூடமாட இருந்து அவங்களுக்கு உதவி செய்யுங்கள், பேப்பரை அப்புறம் படிக்கலாம்என்று சாராதா கூறியதும்

என்ன உடம்பிற்கு என அக்கறையாக மனைவியை விசாரித்தான் சங்கர்.

இந்த கீரைக் கட்டைப் பாருடா, ஒரு கட்டு பத்து ரூபாய் விற்றது இப்போது இருபது ரூபாய்என்றபடி வாங்கி வந்தார் தாத்தா.

வண்டி வாகனம் என எந்த வசதிகளும் இல்லை தாத்தா

அந்த கிராமத்திலேருந்து தலையிலே சுமந்துகிட்டு வந்து இங்கே விற்கிறாங்க , அதான்அதிகமாக இருக்கு. பராவல்லை தாத்தா, இதுவாவது சுத்தமாக கிடைக்கிறதே என்றான் எட்டாம் வகுப்பு படிக்கும் பெயரன் சாய்.

சமர்த்துடா என் செல்லம், நல்லா புரிதல்டா உனக்கு என அவனைப் பாராட்டினாள் பாட்டி

பாட்டி வயது எழுபதை தாண்டியவர், சமையல் அளவுகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி,ஆனால் கைகளைத் தூக்கியோ, அல்லது, கிடுக்கியைப் பிடிக்கவோ முடியாதுஅப்படி ஒரு வலி கை விரல்களில் வந்து விடும்.


மனைவி சொன்ன பின்பு பாத்திரங்கள் கழுவும் இடத்திலிருந்த பாத்திரங்களைக் கழுவவந்த சங்கரைப் பார்த்து, பாவம் நீ ஏண்டா இதெல்லாம் செய்கிறாய், இதெல்லாம்பெண்கள் வேலை போ போ, நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற சங்கரின் அம்மா, சமைக்கும்போது வா, கொஞ்சம் அடுப்பில் ஏற்றி இறக்கிக் கொடுடா, உன் அப்பாவிற்கு அது கூட வாராது , வெந்நீர் மட்டும்தான் போடத் தெரியும் என்று தாத்தாவைகிண்டலடித்தாள் பாட்டி.

அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த சாரதா, இதெல்லாம் பெண்கள் வேலைஎன்பதை காதில் வாங்கியவள் எழுந்து வந்து விட்டாள்.

அத்தை, அது என்ன பெண்கள் வேலை ஏன் ஆண்கள் செய்யக் கூடாதா ? வீட்டுவேலைகள் பொதுவானது, கூட இருந்து உதவி செய்தால் குறைந்து ஒன்றும்போயிடமாட்டார் உங்கள் பிள்ளை.

நான்தான் இருக்கேன்லே, அதான்மா சொன்னேன். என்றாள் அத்தை.


அப்படி வீட்டு வேலை ஒன்றுமே தெரியாத மாதிரி வளர்த்து இருக்கீங்க, உடம்பிற்குமுடியலை என்றால் நீங்கள்தானே கஷ்டப் படுவீர்கள், இதே அவருக்கு சமையல் தெரிந்துஇருந்தாலோ, சிறு வயதினிலே வீட்டில் துடைத்துப் பெருக்க பழக்கப் படுத்தியிருந்தாலோநன்றாக இருந்திருக்கும் என்றாள் சாரதா.

அவன் படிப்பானா இல்லை இதெல்லாம் செய்வானா? அவனுக்கு அக்கா,தங்கை எல்லாம்இருந்தார்கள் அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்றாள் அம்மா

அவர்களும் தானே படித்தார்கள். பெண்கள் என்ன நாம் இவர்களுக்கு அடிமைகளா ? வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள்தான் செய்யணும் என வீட்டு வேலையில்ஆண்களுக்கு ஏன் விதிவிலக்கு? என கேட்டாள் சாரதா

அப்படியே சொகுசா வாழ்ந்திட்டான் அவன் அப்பா மாதிரி என்ற அத்தை தனது மாமியாரை மறைமுகமாகச் சாடினாள்.

இல்லை நீங்கள் அப்படி வளர்த்துட்டீங்க, அத்தை. என்றாள் சாரதா

இரண்டுமே ஒன்றுதான் வீட்டு வேலைகள் செய்வதையே நீங்கள் அடிமை என நினைத்தீர்கள் எனில், படித்தது ஒன்று, வேலைப் பார்ப்பது வேறு என மனத்திகுப் பிடிக்காத வேலையை தனக்காகவும், நமக்காகவும் செய்கிறாரே அப்பா அதுவும் அடிமைத் தனம்தானே என்றபடி சாப்பிட்டுக்கொண்டிருந்த சாய் எழுந்து கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சாப்பிட்டத் தட்டை சுத்தம் செய்து அதற்கான இடத்தில் பொறுமையாக சப்தமில்லாமல் வைத்தான் சாய்

இந்த வார்த்தைகள் சாயிடமிருந்து வரும் என யாரும் எதிர்பர்க்கவில்லை,சில நிமிடம் வாதமின்றி அமைதியானது வீடு. சாரதாவின் கணவன் சங்கர் மீதான பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது.

ஆமாம் சாராதா, நீ சொல்கிறது சரிதான், சாய் சொல்வதும் சரிதான் . காலத்திற்கேற்பஎல்லாம் மாறும் போது, இது மட்டும் மாறாமல் அப்படியே இருக்கு. வேலைக்குப் போகிறபெண்கள்தான் வேண்டும் என்று கேட்கிற ஆண்கள், வீட்டு வேலைகளைபகிர்ந்துக்கொள்ள முன் வருவதில்லை. மனைவி என்பவள் அடிமையோ, தாழ்வானவரோ,பலவீனமானவரோ இல்லை,அவர்களும் இல்லறத்தில் ஓர் அங்கம் என்றும், பரஸ்பரம் அன்புகாதல் காமம் மட்டும் அல்ல வாழ்க்கை, அவர்களுக்கான மரியாதையும் சேர்ந்தது என்றபுரிதல் வேண்டும் என்றாள் அத்தை.

சங்கர்,அப்பாவைப் பார்த்தான், அப்பவோ அம்மாவைப் பார்த்து, மரியாதை மனத்தில் உண்டு என்பது போல அப்பா தன் தோள்களை உயர்த்தினார்.

இவரோ எனக்கு ஒரு ஒத்தாசையும் செய்ததில்லை,அதிகாரம் செய்தே காலம் ஓடிவிட்டது, அனால் என் மகன் சுந்தரிடம் வேலைகளைச் சொன்னால் சரியாக செய்துக்கொடுப்பன் என்றாள் அத்தை

நம்ம சாய் அப்படி இல்லை அத்தை, எல்லா வீட்டு வேலைகளும் அவனுக்கு தெரியும்படி நான் சொல்லிக்கொடுத்துள்ளேன்,தானாகவே முன் வந்து வீட்டு வேலைகளைச்செய்வான்.சமைக்கச்சொல்லி அளவுகளை மட்டும் சொன்னால் போதும்அருமையாகச் செய்திடுவான்

என்றாள் சாரதா சின்ன வயசிலேயே பிள்ளையை வறுத்தெடுதிருக்கிங்க என்றார் தாத்தா

இல்லை இல்லை வளர்த்தெடுத்திருக்கிறாள் என் மருமகள் என்றாள் அத்தை

இரண்டும் இல்லை நான் அவனை எதிர்க்காலச் சமுகத்திற்கேற்றபடி வார்த்தெடுத்திருக்கிறேன் என்றாள் மிகுந்த நம்ம்பிகையோடு சாரதா

இருங்கப்பா..... தமிழ் விளையாடுது, நோட் செய்துக்கிறேன் என்றான் சாய் .