
நேபாளம்-திபெத் எல்லையில் நேபாள நாட்டின் திரிசூலி துங்கே (Trishuli Dhunge) பகுதியில் உள்ள அக்ரிகல்சுரல் டெவலப்மெண்ட் வங்கி (Agricultural Development Bank) கிளையில் இருந்த லாக்கர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது இதில் அந்த வங்கி லாக்கர்கள் உடைந்து சேதமாகிவிட்டன.
அந்த வங்கி லாக்கர்களில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கப் பணத்தை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. இப்புகாரின்பேரில் நேபாள போலீசாரின் 8 மணி நேர தொடர் போராட்டத்துக்கு பின், வங்கியின் கட்டிட இடிபாடுகளில் சேதமடைந்த வாடிக்கையாளர்கள் லாக்கர்களில் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கப் பணம் எவ்வித சேதமும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டன.
ரசுவா (Rasuwa) பகுதியிலிருந்த ஒரு வங்கியின் இரும்பு லாக்கர் பெட்டகம், வெள்ளத்தின் வேகத்தில் திரிசூலி ஆற்றில் பல மைல்கள் அடித்துச் செல்லப்பட்டு, தாதிங் (Dhading) மாவட்டத்தின் பெல்குகோலா என்ற இடத்தில் கரை ஒதுங்கியது. அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், லாக்கரை உடைத்து, அதிலிருந்த நேபாள நாட்டு மதிப்பில் 92.68 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம்) கொள்ளையடித்து சென்றனர்.
இதுபற்றிய வீடியோ வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, நேபாள போலீசார் துரித நடவடிக்கை எடுத்து 29 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நேபாள நாட்டு மதிப்பில் 92.68 லட்சம் மீட்கப்பட்டது.நேபாள நாட்டு வெள்ளத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் அலமாரி (அல்லது) லாக்கர் அடித்து வரப்பட்டதில், சுமார் 150 சவரன் தங்க நகைகள், வெள்ளி மற்றும் லட்சக்கணக்கில் நேபாள நாட்டு பணம் இருந்துள்ளது.
அவற்றை திரிசூலி பகுதியை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்து, தானே வைத்துக் கொள்ளாமல், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, அதன்மூலம் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க நேபாள போலீசாரை தொடர்பு கொண்டார்.
அதனுள் இருந்த ஜெய்ஶ்ரீ தங்க நகைக்கடை ரசீதை வைத்து, சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க நேபாள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment
Upload