தொடர்கள்
அனுபவம்
ஒரு தாயின் நம்பிக்கை !! - மாலாஶ்ரீ

20260804190143788.jpeg

நேபாள-சீனா எல்லைப் பகுதியில் ….. தனது 2 பெண் குழந்தைகளையும் பள்ளி சீருடையில் ஒரு தாய் அழைத்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது தனக்கு பின்னால் சேறும் சகதியுமான வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியானாள். சிறிதும் தாமதிக்காமல் தனது 2 பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சாலையிலிருந்து செங்குத்தான மலைப்பகுதியை நோக்கி ஓடுகிறார். வேகமாக ஓடும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த போதிலும், அவர் சற்றும் தளராமல் உடனடியாக எழுந்து இரு குழந்தைகளின் கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு மலையின் மேடான பகுதிக்கு விரைந்தார்.

அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்த அடுத்த 10 விநாடிகளுக்குள், அவர்கள் நின்றிருந்த அதே பாதையை பிரமாண்டமான வெள்ளமும், பாறைகளும், இடிபாடுகளும் முழுமையாக அடித்துச் சென்றன. அதிர்ஷ்டவசமாக அந்தத் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மலைப்பகுதிக்குச் சென்று உயிர் தப்பினர்.

எனினும், தனது 2 பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமே’ என்ற நம்பிக்கையில் தாய் உயிரை கையில் பிடித்தபடி மலையுச்சிக்கு ஏறி, தன்னையும் தனது 2 பெண் குழந்தைகளையும் ஒரு தாய் உயிருடன் காப்பாற்றி இருப்பது அனைவரையும் நெகிழ வைத்தது.

தாயின் நம்பிக்கை !!!