
மதுரா - துவாரகா மன்னன்...
மனம் மயக்கும்...மாயக் கண்ணன்...!
கான மயிலிறகு சூடிய ...
கார்மேக வண்ணன்...!
கோகுலக் கண்ணன்…
மணம் கமழும் ...பூமாலை சூடிய
புல்லாங் குழலிசை வித்தகன்…!
அனந்த கிருஷ்ணனை...
ஆனந்தக் கண்ணனை...
அகத்தினில் நினைந்து விட்டால்...
அகம் - அன்பினால்... மகிழ்ந்திடும்...!
புறம் - அழகினால்...மலர்ந்திடும்...!
அமைதி அணிகலனால்...
அகிலமே அலங்காரம் பூண்டிடும்...!
ஜெகத்தினில் உயிர் காக்கும்...
ஜெகநாதன்...!
ஜனங்களின் துயர் போக்கும்...
ஜனார்த்தனன்...!
தெய்வீக வடிவான ...
தேவகி வசுதேவர் மைந்தன்...!
யதுகுலத் திலகன் ....
யசோதை நந்த பாலகன்...!
நலம் காத்திடும்...
நந்த கோபாலன்...!
நன்மை பெருக்கிடும்...
நவநீத கிருஷ்ணன்...!
கொடுங்கோலன் கம்சனின்
குற்றங்களைக் கண்டித்து... அழித்தவன்...!
இந்திரனின் சினத்தினில் ...
சிக்குண்ட .... மானிடரை...
கோவர்த்தன மலையையே...
தன் சுண்டு விரலால்...
வெண் கொற்றக் குடையாக்கி ...
காத்திட்டக் கோவிந்தன்...!
நஞ்சு காளிங்கனின் ...
தீஞ் செயல்களினால் ...
அல்லலுற்ற...மாந்தரை....
காளிங்க நர்த்தனமாடி ....
மூர்க்கத்தை முறித்து...
காத்திட்ட முகுந்தன்...!
தன் வறுமையிலும்...
அன்பு நட்புடன்...
ஒரு பிடி அவல் அளித்த ...
உத்தமர் குசேலரை...
அரியணையில் அமர வைத்து...
அழகு பார்த்து...செல்வ வளம் அளித்து...
உபசரித்த... உன்னத நண்பர் -ஸ்ரீ கிருஷ்ணர்…!
கோவிந்த நாமமே...
அருள் மழையைக் கொணர்ந்திடும்...
ஆனந்த கானம்...!
பாண்டவர் … கௌரவர் படைகள்…
பதினெட்டு படை அமைப்புகளாக...
பதினெட்டு நாட்களாக… களம் கண்ட...
பாரதப் போரில் …
பாண்டவர்கள் பக்கம் நின்று ...
தர்மத்தை நிலை நாட்டிய …
பார்த்தசாரதி...!
அதர்மத்தை அழித்திட்ட ...
பரந்தாம பூபதி...!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்
அருளுரைகளே...
அருட் பாதை காட்டிடும்...
புனித கீதை...!
மனதார பயின்று வந்தால்...
மனக் கவலைகள் மறைந்தோடும்...!
தொடர்ந்து தியானித்து வந்தால்...
துயரங்கள் தொலைந்தோடும்...!
ஹரே கிருஷ்ண...ஹரே கிருஷ்ண...
கிருஷ்ண...கிருஷ்ண...ஹரே...ஹரே...
ஹரே ராம...ஹரே ராம...
ராம ராம... ஹரே ஹரே ...!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ...!
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....!
தொடர்கள்
கவிதை

Leave a comment
Upload