
கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையாகச் சென்ற 61 பயணிகள் கொண்ட குழுவில், 'ஹில்ஸ் & டிரெயில்ஸ்' (Hills & Trails) நிறுவனத்தின் இணை நிறுவனர் டாக்டர் மிலிந்த் சிட்லே, அவரது டாக்டர் மனைவி மேகா (நோயியல் நிபுணர்)
இந்த குழு பற்றிய எந்த தகவலும் இந்த கட்டுரை எழுதும் வரை வரவில்லை.
இந்த டாக்டர் மலைப்பகுதிகளை நன்கு அறிந்த தீவிர மலையேற்ற வீரர்
மருத்துவரான தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்ட 64 வயதான மிலிந்த் சிட்லேக்கு, இமயமலையில் மலையேற்றம் செய்வதில் பல தசாப்த கால அனுபவம் உண்டு.
இவர் 1983-ல் மும்பையில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்தார். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக இருந்தபோதே (1983-84) மலையேற்றத்தில் ஈடுபடத் தொடங்கிய இவர், டார்ஜிலிங்கில் உள்ள மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிகளை நிறைவு செய்தவர்.
1988-ல், 8,000 மீட்டர் உயரமுள்ள கஞ்சன்ஜங்கா சிகரத்தை நோக்கிய முதல் இந்தியக் குடிமக்கள் மலையேற்றக் குழுவில் (First Indian Civilian Expedition) மருத்துவக் குழு உறுப்பினராக (climbing doctor) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பயணத்தின்போது, நுரையீரல் வீக்கம் (pulmonary edema) மற்றும் உடல் வெப்பநிலை மிகக் குறைதல் (hypothermia) போன்ற கடுமையான உயரமான மலைப்பகுதி சார்ந்த உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளான மலையேற்ற வீரர்களை இவர் காப்பாற்றியதாக, அவரிடமிருந்து தகவல் அறியக் காத்திருக்கும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும், கடும் குளிரால் உடல் திசுக்கள் பாதிக்கப்படும் 'ஃப்ராஸ்ட் பைட்' (frostbite) பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட வீரர்களை மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு அழைத்து வரவும் உதவினார் என்று அவரது நண்பர் ஒருவர் கூறினார்.
இமயமலையில் மலையேற்றத்தையும் அவசர மருத்துவ சிகிச்சையையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதிலும், உயரமான மலைப்பகுதிகளில் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் அனுபவம் வாய்ந்த நாட்டின் மிகச் சில மருத்துவர்களில் இவரும் ஒருவர்; முதலுதவி மற்றும் மீட்புப் பணிகள் குறித்த தனது புத்தகங்களில் அவர் இக்கருத்துகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
1990-91 காலகட்டத்தில் மலையேற்ற வீரர்களுக்கான முதலுதவி முகாம்களை நடத்தத் தொடங்கியபோது, பல மலையேற்ற அமைப்புகள் அவரைத் தங்கள் அமைப்புகளுக்காகவும் இது போன்ற முகாம்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்த அழைத்தன; மிலிந்த் சிட்லேயும் எவ்விதக் கட்டணமும் இன்றி அவற்றை நடத்திக் கொடுத்தார்.
1997-ல் நடைபெற்ற எவரெஸ்ட் மலையேற்றப் பயணத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்; இமயமலைத் தொடரில் 3,000-க்கும் மேற்பட்ட மலையேற்றப் பாதைகள் மற்றும் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
பின்னர், 2005-ல் மலையேற்றத் துறையில் மதிப்புமிக்க தேசிய விருதான 'கிரிமித்ரா மலையேற்ற வீரர் விருது' (Girimitra Mountaineer Award) அவருக்கு வழங்கப்பட்டது. இமயமலையில் பல சவாலான மலையேற்ற மற்றும் ஏறுதல் குழுக்களை வழிநடத்துவதற்காக இவர் 18 முறைக்கும் மேலாக நேபாளத்திற்குச் சென்றுள்ளார்.
மும்பையிலிருந்து கோவா மற்றும் மும்பையிலிருந்து கன்னியாகுமரி வரை மிதிவண்டியிலும் பயணம் செய்துள்ளார். சிட்லே (Chitley), 'இமயமலைக் கழகம்' (Himalayan Club) போன்ற மலையேற்றக் கழகங்களில் உறுப்பினராகவும், 'அந்தேரி ஸ்போர்ட்ஸ் கிளப்'-பின் முன்னாள் தலைவராகவும் உள்ளார்.

Leave a comment
Upload