
நல்ல மனம் என்றும் வாழும்...!
நாடு போற்ற என்றும் வாழும்...!
நற்றமிழ் என்றும் வாழும்...!
நான்மறை என்றும் வாழும்...!
கற்றவர் அப்துல் கலாம் புகழ் வாழுமே என்றென்றும்...!
ஏவுகணை தந்தார் அவர்,
விண்வெளி ஆய்வுக்கு...!
"ஏவுகணை மனிதர்" ஆனார்
அன்றே இந்தியாவிற்கு...!
ஜனங்களின் அதிபதியாய்
மனதில் நின்றதனால்,
"மக்கள் ஜனாதிபதி" யாய்
மதிப்புமிக நிற்கின்றார்..!
மனித மாண்போடு,
மரமும் நடச் சொன்னார்...
வாழும் காலம் நீ, மரம்
ஒன்றாவது வைத்துவிடு..!
வரும் காலம் உன்
சந்ததிகள், உனை
நினைக்க வைத்துவிடும்..!
தேசத்தின் பலம் தான்
இளைஞர் என்றார்...!
தேசத்தின் நெஞ்சில்
ஊக்கத்தை விதைத்து,
"கனவு காணுங்கள்" என ஏக்கத்தை ஏற்றினார்...!
நம்பிக்கையுடன் வாழ்வை
சந்திக்க துண்டும்,
சிந்திக்க வைக்கும்
அவரின் வரிகள் சில...!
சிந்திக்கத் தெரிந்தவர்க்கு, ஆலோசனை தேவை இல்லை...!
துன்பங்களை சந்திக்கத்
தெரிந்தவர்க்கு, தோல்விகள் வாழ்வில் இல்லை..!
கைரேகை கண்டு உன் எதிர்காலத்தைக் கணிக்காதே...!
கையே இல்லாதவர் கூட ,
எதிர்காலம் கண்டது உண்டு..!
அழகைப் பற்றி கனவு காணாதீர்..
கடமையை அது பாழாக்கிவிடும்..!
கடமையைக் கனவு காணுங்கள்..
வாழ்வை அது அழகாக்கிவிடும்..!
கனவு காண்பது , தூக்கத்தில்
நீ காண்பது அல்ல...!
தூங்கவிடாது செய்யும் எதுவோ, அதுவே இலட்சியக் கனவு...!
அரிதாய் காண்போம் நல்ல மனிதர்கள் நாட்டில்...!
பெரிதாய் இல்லை,பெயர்
சொல்லும் பட்டியல்...!
பெயர் சொல்லும் மனிதராய்
நாம் வாழும் காலம்,
கண்டோம் அப்துல் கலாம்
எனும் மாமனிதரை நாமும்...!பிறந்தநாள் காணும் அவருக்கு
சூட்டி மகிழ்வோம் புகழாரம்...!!
பாலா கோவை

Leave a comment
Upload