தொடர்கள்
விகடகவியார்
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு லட்சம் பேர் ஃபெயில் !! - ஜாசன்

2026917075702858.jpeg

"இந்தியாவில் ஆசிரியர் பணியில் ஒருவர் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்" என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், "தொடக்க கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்ய வேண்டும். தகுதித் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21 ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையாக உள்ளது " என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்.

அதே சமயம் ஐந்தாண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஓய்வு பெறும் வரை பணியில் தொடரலாம். ஆனால், பதவி உயர்வு தேவை என்றால் தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறு தேர்வு எழுத விருப்பமில்லாதவர்கள் பணியில் இருந்து விலகலாம் அல்லது ஓய்வு கால சலுகைகளைக் கொடுத்து கட்டாய ஓய்வு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என கடந்த ஆண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கடந்த ஜூலை மாதம் நாலு மற்றும் ஐந்து தேதிகளில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 5 ஐந்தாம் வகுப்பு வரையில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு (SGT) தாள் 1 தேர்வு பட்டதாரி ஆசிரியருக்கு தாள் 2 தேர்வு நடத்தப்பட்டது.

இதில் முதல் தாள் தேர்வு 59,535 பேர் எழுதினார்கள். இரண்டாம் தாள் தேர்வு 1,60,929 பேர் எழுதினார்கள் என்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டு தேர்வுகளுக்கும் 150 மதிப்பெண் உள்ளடக்கியதாக இருந்தது.

தேர்வு முடிவுகள் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியானது. இதில் முதல் தாள் தேர்வில் 47,594 பேரும் இரண்டாம் தாள் தேர்வில் 60 ,732 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்ச்சி சதவீதம் என்பது 49.14 சதவிகிதமாக உள்ளது. அதாவது தேர்ச்சி தேர்வில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் ஆசிரியர்கள் ஃபெயில் ஆகியிருக்கிறார்கள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 என்பது தமிழ், ஆங்கிலம், உளவியல், சமூக அறிவியல் என நான்கு பாடங்கள் உள்ளடக்கியதாக உள்ளது. இது தமிழ் பாடத்திலிருந்து 30 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் உளவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா முப்பது மதிப்பெண்களுக்கும் சமூக அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் ரூ.150 மதிப்பெண்ணுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. டெட் தேர்வு முடிவுகளில் இடைநிலை ஆசிரியர் தேர்ச்சியை ஒப்பிடும் போது பட்டதாரி ஆசிரியர் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இது பற்றி ஆசிரியர்கள் குறிப்பிடுவது நாங்கள் பட்டம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வகுப்பறையில் ஒரே பாடத்தை எடுத்து வருகிறோம். மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு மீண்டும் முதலில் இருந்து பாடங்களை படிக்க வேண்டும். டெட் தேர்வு அவசியம் என்கிறது உச்சநீதிமன்றம். ஆனால், இது எங்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆசிரியர்கள். தேர்வு முடிவு ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது மாணவர்களை எவ்வளவு மார்க்? பாஸ் ஆகி விட்டீர்களா ? என்று கேட்பது போய் மாணவர்கள் ஆசிரியர்களை இப்போது அந்த கேள்வி கேட்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் ஒரு ஆசிரியர். தரமான கல்விக்கு தகுதித் தேர்வு அவசியம்தானே.

உச்ச நீதிமன்ற உத்தரவு சரியானது என்பது தான் பெரும்பான்மை பெற்றோர்களின் கருத்து. அதேசமயம் அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். 2013- ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வு எழுதி தகுதி பெற்ற ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாக விட்டது. ஆனால், வலுவான ஆசிரியர் சங்கங்கள் இதை அரசியல் ஆக்கும் என்று ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். மாணவரின் கல்வி பற்றி அவர்களின் அக்கறை இப்படித்தான் இருக்கிறது என்பது வருத்தப்படக் கூடிய ஒரு விஷயம்.