தொடர்கள்
விகடகவியார்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் - விகடகவியார்

2026917081113695.jpg

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னை எழும்பூரில் 'இண்டி' கூட்டணி கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் "தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் வாயிலாக 97 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டன. சென்னை கொளத்தூர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டன. சட்டசபை தேர்தலுக்கு முன் ஒரு பெண் என்னை தொடர்பு கொண்டு," கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம்" என்று சொன்னார். முதலில் நான் அதை அலட்சியப்படுத்தினேன். இரண்டு முறை அந்தப் பெண் திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார். இதை நேரடியாக அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்ல முடியாது என்பதால் நான் அமைச்சர் சேகர் பாபுவிடம் அந்த பெண்ணை பேச வைத்தேன். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோது அந்தப் பெண்மணி சொன்னதை அவரிடமே சொன்னேன். அதோ இருக்கிறாரே சேகர் பாபு அவரிடம் சொல்லுங்கள் என்றார். நான் மீண்டும் சேகர்பாவிடம் அதை சொன்னேன். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை தளபதி நிச்சயம் ஜெயித்து விடுவார் என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் திட்டமிட்ட சதியால் தான் ஸ்டாலின் தோற்றுப் போனார் " என்று பேசினார் திருமா. நான் ஐந்து நிமிடம் பேசியதுக்கே குளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள் என்று ஏதோ அவர் பேசியதால் தான் ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்று பெருமையாக ஜோசப் விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் திருமாவின் இந்த பேச்சை ஆளுங்கட்சி ரசிக்கவில்லை.

இப்போது இடைத்தேர்தல் வெற்றிக்கு விடுதலை சிறுத்தை கட்சி தான் காரணம் என்று திருமா சொல்லி ஆளுங்கட்சியை டென்ஷன் ஆக்கி இருக்கிறார்.

இப்போது இது புது குண்டு ?