ஆர்யா
பா.ரஞ்சித் இயக்கி வரும் 'வேட்டுவம்' படத்தில் ஹீரோவாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார். வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா

தனுஷின் 56-வது படத்தில் வடிவேலு நடிக்கிறார். எல்லா ஹீரோக்களுடன் நடித்த வடிவேலு தனுஷுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார். இப்போது அதுவும் நிறைவேற போகிறது.
மிருணாள் தாகூர்

"கடந்த 9 மாதங்களாக நான் எந்த படத்திலும் ஒப்பந்தமும் ஆகவில்லை. அர்த்தமுள்ள ஒரு கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன் "என்கிறார் மிருணாள் தாகூர்.
தமன்னா

"மனதில் முக்கிய வேண்டுதலை முன்வைத்து ஆன்மீக தலங்களுக்கு சென்று வருகிறேன். துர்க்கை அம்மனுக்கு மூன்று நாட்கள் விரதமும் இருக்கிறேன். காலை உணவை தவிர்க்கிறேன் "என்ற தகவலை தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் நடிகை தமன்னா. அந்த வேண்டுதல் என்னவாக இருக்கும்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆஷிகா ரங்கநாத்

`"சினிமா என்பது பெருங்கடல். இங்கு நீந்துவது என்பது பெரிய விஷயம். ரசிகர்களின் அன்பு கிடைக்க போராட வேண்டும். அப்படி கிடைத்துவிட்டால் அந்தப் பிரபலம் அதிர்ஷ்டக்காரர். அந்த வகையில் சினிமாவில் இருப்பது ஒரு பாக்கியம் "என்கிறார் நடிகை ஆஷிகா ரங்கநாத்.
சோபிதா துலிபாலா

"ஒரு நடிகரை காதலிக்கோ திருமணமோ செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருந்த நீங்கள் எப்படி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டீர்கள் ? " என்று ஒரு நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு "நாம் மனிதர்கள் தானே! காலப்போக்கில் மாறத்தான் செய்வோம் .வாழ்க்கை ஒரு வானிலை போல், பருவநிலை மாறும் போது நமது திசையும் மாறும். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை மாற்றிக் கொள்வதில் தவறில்லை " என்று பதில் சொல்லி இருக்கிறார் நடிகை.
ரிது வர்மா

வேலையில்லா பட்டதாரி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ரிது வர்மா .விக்ரமுடன் இவர் நடித்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போய் இருக்கிறது.ஆனாலும் தெலுங்கு படங்கள், வெப் சீரிஸ் என்று பிஸியாக தான் இருக்கிறார்.
வித்யா பாலன்

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் சிகரெட் பிடித்து புகையை ரஜினி முகத்தில் ஊத வேண்டும் என்று சொன்னபோது முதலில் தயங்கினாலும் பிறகு சினிமா தானே என்று அவர் முகத்தில் புகையை ஊதினாலும் அவர் கை நடுங்கியது என்கிறார் இயக்குனர் நெல்சன்.
ஜெயிலர் 2

ஜெயிலர் 2 ,முதல் நாள் உலக அளவிலான முன் பதிவில் 30 கோடி வரை வசூலை எட்டி இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வெளிநாட்டு முன்பதிவுகள் மட்டும் 20 கோடியை தாண்டி இருக்கிறது.
கதாநாயகன்
ஹைட் அண்ட் சில்க் என்ற பட்டுப்புடவை நெய்யும் நெசவாளரில் வாழ்க்கை பின்னணியில் உருவாகும் படத்தில் மண்டாடி படத்தில் வில்லனாக நடித்த சுஹாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். இந்தப் படம் தமிழ் மட்டும் தெலுங்கில் தயாராகிறது.
ஸ்ருதிஹாசன்

இந்தியா இங்கிலாந்து பின்னணியில் உருவாகும் ஒரு ஆங்கில படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார் சமந்தா. தற்சமயம் அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இப்போது அந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

Leave a comment
Upload