தொடர்கள்
அரசியல்
கருத்துக் கதிர்வேலன்

2026917081744684.jpeg

அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் வெற்றி மகா ஊழல் -எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.

'வெற்றி மகா ஊழல் ? ' நல்லா இருக்கு பேரு !!

இந்தியாவில் பண வீக்கம், விலைவாசி உயர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு.

இதெல்லாம் தெரிந்தும் வாக்காளர்கள் இடைத்தேர்தலில் அவர்களை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் ?

கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் கைது.

கரப்பான் பூச்சி தொல்லை ஜாஸ்தி ஆயிடுச்சு !!

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது .எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு தொடர் தோல்விகள் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு.

தோல்வியில் ஏதோ சாதனை செய்யப் போறாரோ என்னவோ ?

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சிறந்த தலைவர்களை உருவாக்குவோம் அண்ணாமலை அறிவிப்பு.

ஆகட்டும் பார்க்கலாம் !!

சிறப்பு ' டெட்' தேர்வில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஆசிரியர்கள் பெயில்

ஆனால், சம்பளம் போதவில்லை என்று இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் !!

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள்

நல்ல தலைவர் ?

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் வெளியேற தயாராக இருக்கிறார்கள் அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் விட இடைத்தேர்தல்கள் தான் அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது ?

மூடர் கூட்டத்திடம் சிக்கி சீரழிகிறது தமிழகம்.ஸ்டாலின் காட்டம்.

அதாவது, அவருக்கு ஓட்டு போடலையாம் ?

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையில் மின் தடை

அதாவது பொதுமக்களும் அமைச்சர்களும் ஒன்று தான் பாரபட்சம் கிடையாது என்கிறார்கள் !!

விடுதலை சிறுத்தைகட்சி எங்களுக்கு தூணாக நிற்கிறது அமைச்சர் ராஜ்மோகன்.

அதுக்கிடக்கட்டும், இன்னொரு தூண் பாட்டாளி மக்கள் கட்சி என்கிறார்களே உண்மையா ?

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.

அதான் அந்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ரெடி பண்றது தானே !!