தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள் : எழுத்தாளர் என் ஆர் தாசன் - அம்பத்தூர் ரங்கராஜன்

202691609121172.jpg

உருவகக்கதைகளுக்குரிய மொழி உரை வீச்சு வசனகவிதை எழுதியவர். அரசுப்பணி. வல்லிக்கண்ணன், அவன் தன் எழுத்துகளுக்கு உரிய மதிப்பை யும், உரிய கவனிப்பையும் பெறாதவன் என குறிப்பிட்டார்.

கவிஞரின் கண்ணதாசன் இதழில் அதிகம் எழுதியவர். பிறமொழிக்கவிதைகளை தமிழாக்கம் செய்தவர். ரவீந்திரநாத் தாகூரின் கலீல் கிப்ரான் கவிதைகளின் தாக்கத்தினால், தாசனும் தத்துவச்சிந்தனைகளும், வாழ்க்கை அநுபவங்களும் செறிந்த வசனக்கவிதைகளை சொற்கோலம் என்ற பெயரில் அதிகமாகவே எழுதி இருக்கிறார்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வராகங்கள் தன்னுடைய கதை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பில். “பாலச்சந்தர் செய்தது தவறு” என கண்டறிந்து பாலச்சந்தருக்கு அபராதம் விதித்தார். இந்த விஷயம் திரைத்துறையில் 1975_76ல் அதிகம் பேசப்பட்டது.

அகிலன் தொகுத்த சிறந்த கதைகளில் இவர் கதை இடம் பெற்றுள்ளது.

இவர் 1994ல் காலமானார்.

இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில் சந்தித்த போது ஆட்டோகிராப் வாங்கினேன்.

2026916090926136.jpeg

பி.கு : அந்த பாலச்சந்தர் வழக்கு விஷயத்தின் முழு விவரத்தையும் நமது கட்டுரையாளர், அம்பத்தூர் ரங்கராஜனிடம் விசாரித்ததில் அவர் தந்த தந்த விளக்கங்கள் இதோ..

“தாசன் சார் காலமாகி விட்டார். எனக்கு தெரிந்த திரைப்பட வட்டாரத்தில் விசாரித்ததில் உண்மை எனத்தெரிந்தது. கண்ணதாசன் மாத இதழில் எழுதிய கதை.”

கூகுள்ள போட்டிருப்பதோ பாலசந்தரை எதிர்த்து வழக்காடியவர் பெயர் சிகரம் ச செந்தில்நாதன், ஆனால் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட பெயர் என். ஆர். தாசன் பெயர் வேறாக உள்ளதே? என்றதற்கு,

“செந்தில்நாதன் என்பவர் வழக்கறிஞர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சென்னை மாவட்ட தலைவராகவும் இருந்தார். என்.ஆர்.தாசன் அவர்கள் கண்ணதாசன் மாத இதழில் "மேயாத மான் "என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினார்.

அபூர்வராகங்கள் திரைப்படம் வெளியான சமயத்தில் இது தன்னுடைய மேயாத மான் கதையை தழுவியது என்று மெட்ராஸ் ஹைகோர்ட்டில் செந்தில் நாதன் வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தொடர பாலச்சந்தர் அவர்கள் இது சாஸ்திர சம்பிராதயத்தில் படித்தாக சொன்னார், ஆனால் ஆதாரம் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

கனம் நீதிபதி அவர்கள் கதை மேயாத மானை தழுவியது என்று தீர்ப்பு எழுதி அபராதமாக ரூ.ஆயிரம் விதித்தார்.

என்.ஆர். தாசனும் வழக்கறிஞரும் அபராதமாக ஒரு ரூபாய் போதும் என சொல்லி விட்டனர். இந்த விவரங்களை மற்றொரு நண்பர் முத்து மூலமாக தெரிந்து கொண்டேன்.

மேலும் அபூர்வ ராகங்கள் வழக்கு நடந்த சமயத்தில் நானும் நீதிமன்றத்தில் இருந்தேன். இது தான் நடந்த விவரம்.

கதை எழுதியவர் என்.ஆர்.தாசன் தான்.

அகிலன் மகன் கண்ணன் இதனை உறுதி செய்துஅவர் தான் முத்து என்பவரின் எண் கொடுத்தார்” என்று முடித்து வைத்தார் நமது கட்டுரையாளர்.